அசத்தலான வண்ணங்களில், ஷோரூம்களில் 2022 யமஹா எம்டி15 வி2 பைக்!! டெலிவிரி விரைவில் ஸ்டார்ட்!
புதிய யமஹா எம்டி15 வி2 மோட்டார்சைக்கிள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் யமஹா ஷோரூம் ஒன்றில் இருந்து வெளியாகியுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியா யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் புதிய எம்டி15 வெர்சன் 2.0 மோட்டார்சைக்கிளை சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தியது. ரூ.1,59,900 என்கிற விலையில் கொண்டுவரப்பட்டுள்ள புதிய எம்டி15 பைக்கிற்கு சியான் ஸ்ட்ரோம் & ரேசிங் நீலம் என்கிற 2 விதமான புதிய நிறத்தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதேநேரம் ஐஸ் ஃப்ளூ-வெர்மிலியன் & மெட்டாலிக் கருப்பு என்ற வழக்கமான நிறத்தேர்வுகளிலும் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. யமஹாவின் ‘தி கால் ஆஃப் தி ப்ளூ' திட்டத்தின் ஒரு பகுதியாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வெர்சன் 2.0 எம்டி15 பைக் மோட்டோஜிபி பந்தயத்திற்கான சில பாகங்கள் உள்பட ஏகப்பட்ட பாகங்களை பெற்றுள்ளது.

Source: Rushlane
இப்படிப்பட்ட பைக் தான் தற்போது யமஹாவின் அங்கீகரிக்கப்பட்ட யமஹா டீலர்ஷிப் மையங்களில் இருந்து காட்சித்தந்துள்ளது. யமஹாவின் காப்புரிமை டெல்டா பெட்டக சட்டகத்தில் உருவாக்கப்பட்டுள்ள புதிய எம்டி15 பைக்கில் சிறப்பான ஹேண்ட்லிங் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. யமஹா ஆர்15 வி4 ஸ்போர்ட்ஸ் பைக்கின் நாக்டு ஸ்ட்ரீட் ஃபைட்டர் வெர்சன் தான் எம்டி15 என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும்.

இது தனது 2022ஆம் ஆண்டிற்கான அவதாரத்திலும் முன்பக்கத்தில் எல்இடி டிஆர்எல்-களுடன் எல்இடி பிரோஜெக்டர் ஹெட்லேம்ப் & எல்இடி டெயில்லேம்ப்பை தொடர்ந்துள்ளது. ஆனால் இண்டிகேட்டர்கள் இன்னமும் ஹலோஜன் யூனிட்களாகவே உள்ளன. புதிய எம்டி15 பைக்கில் ரீடிசைனிலான முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ப்ளூடூத்தை ஏற்கக்கூடியதாக வழங்கப்பட்டுள்ள இந்த இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோலின் மூலம் மொபைல் போனின் அழைப்புகள் & குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்கலாம். இதற்காகவே யமஹாவின் ஒய்-கனெக்ட் செயலி பயன்பாட்டில் உள்ளது. அத்துடன் சைடு ஸ்டாண்ட் போடப்பட்டிருந்தால், என்ஜின் ஆஃப் ஆகும் வசதியையும் 2022 எம்டி15 வி2 பைக்கில் பார்க்க முடிகிறது.

இவை எல்லாவற்றையும் விட முக்கியமாக, பைக்கின் உருவத்தில் மாற்றமில்லை என்றாலும், கிராஃபிக்ஸ் திருத்தியமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பருத்த உடற் அமைப்பு & நீளமாக்கப்பட்ட பின் இறுதிமுனை பகுதி உடன் புதிய முத்திரைகள் பைக்கில் பொருத்தப்பட்டுள்ளன. 17-இன்ச்சில் உள்ள 2022 எம்டி15 பைக்கின் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

ஒற்றை-துண்டில் இருக்கை அமைப்பை கொண்டுள்ள 2022 எம்டி15 வி2.0 பைக்கின் கெர்ப் எடை 139 கிலோ ஆகும். புதிய 2ஆம் வெர்சனிலும் வழக்கமான 155சிசி, லிக்யுடு கூல்டு, 4 ஸ்ட்ரோக், SOHC, 4 வால்வு என்ஜினே தொடரப்பட்டுள்ளது. விவிஏ தொழிற்நுட்பத்துடன் பொருத்தப்படும் இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 10,000 ஆர்பிஎம்-இல் 18.4 பிஎச்பி & 7,500 ஆர்பிஎம்-இல் 14.1 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இதனுடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. அத்துடன் ஸ்லிப்பர் & உதவி க்ளட்ச்சும் உள்ளது. இது இயக்க ஆற்றலை பைக்கின் பின் சக்கரத்திற்கு வழங்குகிறது. ப்ரேக்கிற்கு 282மிமீ மற்றும் 220மிமீ-களில் டிஸ்க்குகள் இரு சக்கரங்களிலும், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் உடன் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் புதிய எம்டி15 பைக்கில் முக்கிய அப்டேட் முன்பக்க சஸ்பென்ஷனில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2022 யமஹா ஆர்15 வி4 பைக்கில் அறிமுகப்படுத்தப்பட்டது போல் 37மிமீ தலைக்கீழான ஃபோர்க்குகள் புதிய எம்டி15 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் பின்பக்கத்தில் வழக்கம்போல் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோ ஷாக்கே தொடர்ந்துள்ளது. முன்பக்க சஸ்பென்ஷன் ஃபோர்க்குகள் பைக்கில் இருந்து தனித்து தெரியும் வகையில் தங்க நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளன.

2022 யமஹா எம்டி-15 வி2.0 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடலை காட்டிலும் கிட்டத்தட்ட ரூ.14,000 வரையில் அதிகமாகும். முன்பு எம்டி15 பைக்கின் ஆரம்ப விலை ரூ.1.46 லட்சமாக இருந்தது. விற்பனையில் எம்டி-15 பைக்கிற்கு கேடிஎம் ட்யூக் 125, பஜாஜ் பல்சர் என்எஸ்200, ஹோண்டா ஹார்னெட் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.


Click it and Unblock the Notifications








