4 விதமான பேட்டரி தேர்வில் வாங்கலாம்.. ஆரம்ப விலைகூட ரொம்ப கம்மி! NIJ Accelero+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

என்ஐஜே ஆக்செலரோ-ப்ளஸ் (NIJ Accelero+) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

4 விதமான பேட்டரி தேர்வுகளில் வாங்கலாம்... ஆரம்ப விலைகூட ரொம்ப கம்மி... NIJ Accelero+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

என்ஐஜே ஆட்டோமோட்டிவ் (NIJ Automotive) நிறுவனம் அதன் புத்தம் புதிய ஆக்செலரோ-ப்ளஸ் (Accelero+) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனம், ஏற்கனவே க்யூவி 60 (QV60), ஃப்ளியோன் (Flion) மற்றும் ஆக்செலரோ (Accelero) ஆகிய மூன்று விதமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை நம் நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது.

4 விதமான பேட்டரி தேர்வுகளில் வாங்கலாம்... ஆரம்ப விலைகூட ரொம்ப கம்மி... NIJ Accelero+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இவற்றின் வரிசையிலேயே புதியதாக நான்காவது மாடலாக ஆக்செலரோ-ப்ளஸ் மின்சார ஸ்கூட்டரை என்ஐஜே நிறுவனம் சேர்த்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மின்சார ஸ்கூட்டர் மிகவும் கவர்ச்சியான தோற்றத்தில் காட்சியளிக்கின்றது. இரட்டை எல்இடி ஹெட்லேம்ப், ப்ரோமினென்ட் எல்இடி டிஆர்எல்கள் மற்றும் பூமராங் தோற்றத்திலான எல்இடி இன்டிகேட்டர் உள்ளிட்டவை இ-ஸ்கூட்டரை அலங்கரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

4 விதமான பேட்டரி தேர்வுகளில் வாங்கலாம்... ஆரம்ப விலைகூட ரொம்ப கம்மி... NIJ Accelero+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இதுமட்டுமின்றி, பன்முக நிற தேர்வுகளிலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை என்ஐஜே நிறுவனம் வழங்க இருக்கின்றது. இம்பீரியல் ரெட் (Imperial Red), பிளாக் பியூட்டி (Black Beauty), பியர் ஒயிட் (Pearl White) மற்றும் கிரே டச் (Grey Touch) ஆகிய நிற தேர்வுகளிலேயே புதிய என்ஐஜே ஆக்செலரோ-ப்ளஸ் எலெக்ட்ரிக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

நிறத்தில் மட்டுமில்லைங்க பேட்டரியிலும் 4 விதமான தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஒற்றை லீட் பேட்டரி தேர்விலும், 3 விதமான எல்எஃப்பி பேட்டரி தேர்விலும் அது கிடைக்க இருக்கின்றது. எல்எஃப்பி பேட்டரி தேர்வை பொருத்தவரை 1.5 Kw (48V), 1.5 Kw (60V) மற்றும் 3 Kw (48V) இரட்டை பேட்டரி ஆகிய செட்-அப்புகளில் அது கிடைக்க உள்ளது.

4 விதமான பேட்டரி தேர்வுகளில் வாங்கலாம்... ஆரம்ப விலைகூட ரொம்ப கம்மி... NIJ Accelero+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இதன் டாப் மாடல் மின்சார ஸ்கூட்டர் ஒரு முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 190 கிமீ ரேஞ்ஜை வழங்கக் கூடியதாகக் காட்சியளிக்கின்றது. அதேநேரத்தில், என்ஐஜே ஆக்சலரோ-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ. 53 ஆயிரம் என்ற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கும்.

4 விதமான பேட்டரி தேர்வுகளில் வாங்கலாம்... ஆரம்ப விலைகூட ரொம்ப கம்மி... NIJ Accelero+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

பேட்டரி ஆப்ஷன் மற்றும் தேர்வை பொருத்து விலை மாறுபட்டு காணப்படுகின்றது. 1.5 kW வேரியண்டிற்கு ரூ. 69 ஆயிரமும், 3 kW தேர்விற்கு ரூ. 98 ஆயிரமும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக அதிகளவில் தொழில்நுட்ப வசதிகளில் வழங்கப்பட்டுள்ளன. அந்தவகையில், க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற மிக முக்கியமான அம்சங்களும்கூட கொடுக்கப்பட்டுள்ளன.

4 விதமான பேட்டரி தேர்வுகளில் வாங்கலாம்... ஆரம்ப விலைகூட ரொம்ப கம்மி... NIJ Accelero+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இதுமட்டுமின்றி, யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட், சுலபமாக சார்ஜ் செய்யும் வசதி, டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் உள்ளிட்ட சிறப்பு வசதிகளும் என்ஐஜே ஆக்செலரோ-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் சேர்த்து ஐந்தாவதாக ஓர் மாடலையும் என்ஐஜே நிறுவனம் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது.

4 விதமான பேட்டரி தேர்வுகளில் வாங்கலாம்... ஆரம்ப விலைகூட ரொம்ப கம்மி... NIJ Accelero+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

ஆர்14 (R14) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே நிறுவனம் வெகு விரைவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை. அதேவேலையில், உயர் டார்க்கை வெளியேற்றக் கூடிய பிஎல்டிசி மேக்னட் மோட்டார் இதில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

4 விதமான பேட்டரி தேர்வுகளில் வாங்கலாம்... ஆரம்ப விலைகூட ரொம்ப கம்மி... NIJ Accelero+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

இத்துடன், தற்போது ஆக்செலரோ-ப்ளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போலவே பன்முக பேட்டரி தேர்வுகளும் அதில் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. நிறுவனம் தனது தயாரிப்பில் எல்எஃப்பி ரக பேட்டரியை வழங்குவதற்கு ஒரு சில காரணங்கள் மட்டுமே உள்ளன.

4 விதமான பேட்டரி தேர்வுகளில் வாங்கலாம்... ஆரம்ப விலைகூட ரொம்ப கம்மி... NIJ Accelero+ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

குறிப்பாக, இருசக்கர வாகனம் குறைவான விலையில், அதிக பலனை வழங்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. அதேவேலையில், என்ஐஜே ஆர்14 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், ஐஓடி, ரிவர்ஸ் அசிஸ்ட், டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.

குறிப்பு: படங்கள் சில உதாரணங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Saturday, March 19, 2022, 18:04 [IST]
English summary
Nij automotive launches accelero plus electric scooter in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+