நைன்டி ஒன்னின் புதுமுக சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

நைன்டி ஒன் சைக்கிள்ஸ் (Ninety One Cycles) நிறுவனம் இந்தியாவில் சிகாகோ டிஸ்க் 271 எம்டிபி (Chicago Disc 271 MTB) எனும் அதிக விலைக் கொண்ட புதுமுக சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த சைக்கிள் குறித்த கூடுதல் தகவலையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அதுகுறித்த தகவலைக் காணலாம்.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

நைன்டி ஒன் சைக்கிள்ஸ் (Ninety-One Cycles), கேடிஎம் (KTM) பிராண்டின் புதிய சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. சிகாகோ டிஸ்க் 271 எம்டிபி (Chicago Disc 271 MTB) எனும் மிதிவண்டியையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

அறிமுகமாக ரூ. 62,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் தற்போது விற்பனைக்குக் கிடைக்கும் கம்யூட்டர் பைக் மற்றும் சில ஸ்கூட்டர் மாடல்களை விட அதிக விலை ஆகும். இந்த விலை நிர்ணயம் இந்தியர்கள் பலரை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்துள்ளது.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

கேடிஎம் பை-சைக்கிள்ஸ் மற்றும் நைன்டி ஒன் ஆகிய இரு நிறுவனங்களும் அண்மையில் கூட்டணியைத் தொடங்கின. இந்த கூட்டணியின் அடிப்படையிலேயே சிகாகோ டிஸ்க் 271 எம்டிபி மிதிவண்டி நாட்டில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்று இன்னும் பல வாகனங்களை இரு நிறுவனங்களும் கூட்டணியின் அடிப்படையில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றன.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

எம்டிபி பைக் சிகாகோ டிஸ்க் 271 பல தரப்பட்ட சிறப்பு வசதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், அதிக உறுதியான மற்றும் நீண்ட ஆயுட்காலம் கொண்ட டிஎல் ரிம்கள் சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

இத்துடன், மலை பாதை பயணங்களை எந்தவித அசௌகரியமும் இன்றி கையாளக் கூடிய வகையிலான ஹேண்டில் பார் உள்ளிட்டவையும் இந்த சைக்கில் வழங்கப்பட்டுள்ளன. இதன் காரணத்தினால்தான் எம்டிபி பைக் சிகாகோ டிஸ்க் 271 சைக்கிளின் விலை மிக அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

இதுமட்டுமில்லைங்க, பிரத்யேகமான 27.5 அங்குல டயர் சைக்கிளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுவும், பிரத்யேகமாக மலை பாதையை சமாளிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுதவிர, இன்னும் பல சிறப்பம்சங்கள் நீண்ட தூர மற்றும் சௌகரியமான பயணத்தை மேற்கொள்ளும் வகையில் எம்டிபி பைக் சிகாகோ டிஸ்க் 271 சைக்கிளில் வழங்கப்பட்டுள்ளன.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

இந்த சைக்கிளை ஒட்டுமொத்தமாக மூன்று விதமான ஃப்ரேம் அளவுகளில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. அனைத்தும் தோராயமாக 15 கிலோ வரை மட்டுமே எடைக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகின்றது. இதுபோன்ற சிறப்பு யுக்திகள் சிகாகோ டிஸ்க் 271 எம்டிபி சைக்கிளில் கையாளப்பட்டிருப்பதன் காரணத்தினாலேயே அதன் விலை ரூ. 62,999 ஆக காட்சியளிக்கின்றது.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

கேடிஎம் சிகாகோ டிஸ்க் 271 எம்டிபி சைக்கிளின் இந்திய வருகை குறித்து நைன்டி ஒன் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ சச்சின் சோப்ரா கூறியதாவது, "இந்தியாவில் சைக்கிளை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை மிக வேகமாக வளர்ந்து வருகிறது. அனைத்து வயதினரும், பொருளாதாரத்தில் பின்னணியில் இருப்பவர்களும் தங்களின் தினசரி பயணங்களுக்காக மற்றும் உடற்பயிற்சிக்காக சைக்கிளை ஓட்டுகின்றனர்.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

இந்த மாதிரியான சூழலில் கேடிஎம்-இன் சமீபத்திய பிரீமியம் சைக்கிள் சிகாகோ டிஸ்க் 271-ஐக் இந்தியா கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கேடிஎம் உடனான எங்களின் வெற்றிகரமான இணைவின் வாயிலாக இந்த உயர் ரக சைக்கிளை எங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளோம். சிகாகோ டிஸ்க் 271 ஆனது சௌகரியமான, பாதுகாப்பான பயண அனுபவத்தை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

அண்மைக் காலங்களாக இந்தியாவில் பெட்ரோலின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. இதன் விளைவாக சந்தைக்கு செல்வோர் மற்றும் மிக அருகாமையில் அலுவலகத்தைக் கொண்டிருப்பவர்கள் சிலர் சைக்கிளைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கின்றனர். பெரும்பாலானோர் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு சைக்கிள் பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர்.

நைன்டி ஒன் சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம்... விலை எவ்ளோனு தெரிஞ்சா ஷாக்காயிருவீங்க!

இந்த மாதிரியான சூழலில் சைக்கிள் சந்தையை விரிவுப்படுத்தும் வகையில் நைன்டி ஒன் போன்ற முன்னணி நிறுவனங்கள் புதுமுக சைக்கிளை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வருவதில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த செயல் வரவேற்பை அளிக்கக் கூடிய செயலாகப் பார்க்கப்படுகின்றது. அதேநேரத்தில், அனைவரும் பயன்படுத்தக் கூடிய வகையில் விலைக் கொண்ட வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 27, 2022, 18:24 [IST]
English summary
Ninety one cycles launches chicago disc 271 cycle in india at inr 62999
மேலும்... #கேடிஎம் #ktm
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+