ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனம்... முன்னணி நிறுவனங்கள்கூட இப்படி அதிரடியா களமிறங்கல!

ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக ஓர் மின் வாகன உற்பத்தி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை... ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்!

இந்தியாவில் மக்கள் மத்தியில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. மிக அதிக விலையிலும், தொடர்ச்சியாக விலை உயர்வையும் அவை பெற்றுக் கொண்டிருப்பதே இதற்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. இன்றைய நிலவரப்படி சென்னையில் பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதேநேரத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 101.40 க்கும், டீசல் ஒரு லிட்டர் ரூ. 91.43 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை... ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்!

இதுமாதிரியான உச்சபட்ச விலையிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. சமீபத்திய பட்ஜெட் அறிவிப்பின்போது கலக்கப்படாத எரிபொருளுக்கு ரூ. 2 வரை கலால் வரியை உயர்த்த இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற காரணங்களினாலேயே மக்கள் பெட்ரோல், டீசலால் இயங்கும் வாகனங்களை வெறுக்க தொடங்கியிருக்கின்றனர்.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை... ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்!

அதேநேரத்தில், பெட்ரோல், டீசலுக்கு வாகனங்களுக்கு எதிரான இந்த மனநிலை மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை நோக்கி தள்ளியிருக்கின்றது. இதன் விளைவாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மவுசு மக்கள் மத்தியில் பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. தற்போதைய நிலவரப்படி மின்சார வாகனமே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக மாற்று திறன்பாட்டு வசதியுடன் விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆகையால், இந்தியர்கள் பலர் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை வாங்க ஆரம்பித்திருக்கின்றனர்.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை... ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்!

ஆகையால், இவற்றிற்கான தேவை நாட்டில் அதிகரித்துக் காணப்படுகின்றது. இத்தகைய சூழ்நிலை இந்தியாவில் நிலவுகின்ற காரணத்தினால் இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகன தாகத்தை தீர்ப்பதற்காக பல நிறுவனங்கள் வரிந்துக் கட்டிக் கொண்டு, அதன் புதுமுக வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்தி வருகின்றன.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை... ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்!

முன்னணி நிறுவனங்கள் தொடங்கி இதற்கு முன்பாக பெயரை கூட கேள்விப்பட்டிராத நிறுவனங்களும் இதில் பங்கு பெற்று வருகின்றன. ஆமாங்க, ஆரம்ப நிலை மற்றும் புதிய நிறுவனங்கள் பல இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு சில நிறுவனங்கள் மிக விரைவில் தங்களின் சிறப்பு வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டு வருகின்றன.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை... ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்!

அந்தவகையில், ஸ்டார்ட்-அப் மின் வாகன உற்பத்தி நிறுவனமான ஓபென் எலெக்ட்ரிக், ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு எலெக்ட்ரிக் டூ-வீலரை இந்திய மின் வாகன சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவல் நேற்றைய (பிப்ரவரி 3) தினம் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை... ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்!

ஆகையால், இந்திய மின் வாகன சந்தையில் ஆறு மாதத்திற்கு ஒரு முறை புதிய வாகனம் ஒன்று அலங்கரிக்க இருப்பது உறுதியாகியுள்ளது. ஓபென் எலெக்ட்ரிக் ஓர் மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் என்பது இங்கு குறிப்பிடத்தகுந்தது. இது ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் ஒரு புதிய எலெக்ட்ரிக் வாகனம் என்ற திட்டத்தை அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு செயல்படுத்த இருக்கின்றது.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை... ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்!

அதாவது, இரண்டு ஆண்டுகளில் நான்கு புதிய எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான வேலையை நிறுவனம் ஏற்கனவே தொடங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆகையால், 2022 முதல் காலாண்டிலேயே நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகனம் சாலையில் தென்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை... ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்!

நிறுவனத்தின் இந்த இலக்கு குறித்து இணை நிறுவனர் தினகர் அகர்வால் கூறியதாவது, "விசி (Venture capital) நிதியுதவி மூலம் நாங்கள் மொத்தம் 2.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியுள்ளோம். இது மின்சார இருசக்கர வாகன உற்பத்திக்காக திரட்டப்பட்ட உச்சபட்ச தொகை ஆகும். இந்த நிதியைக் கொண்டு அடுத்த சில ஆண்டுகளில், எங்கள் சிறப்புத் தயாரிப்புகளை உலகளாவிய வீரராக நிலை நிறுத்த விரும்புகிறோம்" என்றார்.

அதிகரிக்கும் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு எதிரான மனநிலை... ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு புதுமுக எலெக்ட்ரிக் வாகனத்தை களமிறக்க பிரபல நிறுவனம் திட்டம்!

இதைத் தொடர்ந்து பேசிய மதுமிதா அகர்வால் (நிறுவனத்தின் இணை நிறுவனர்), "எலெக்ட்ரிக் டூ-வீலர் உற்பத்திக்காக கைதேர்ந்த மற்றும் நிபுணத்துவம் பெற்ற குழுவை நாங்கள் ஒன்றிணைத்துள்ளோம். இந்த குழு வாகனங்களை அசெம்பிள் செய்வதைத் தாண்டி, இந்தியர்களுக்காக புதிதாக தயாரிப்புகளை உருவாக்கும் பணியில் ஈடுபடும். எங்கள் பயணத்தின் தொடக்கக் கட்டத்தை எட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும், எங்களது முதல் தயாரிப்பு இந்திய நுகர்வோர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என நாங்கள் நம்புகிறோம்" என கூறினார்.

More from DriveSpark

Article Published On: Friday, February 4, 2022, 10:59 [IST]
English summary
Oben electric announced to roll out new product for every 6 months
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+