ரிவோல்ட் ஆர்வி400, டார்க் க்ரடோஸ் இ-பைக்குகளுக்கு ஆப்பு வைக்க வருகிறது Oben Rorr! என்ன விலையில் எதிர்பாக்கலாம்

ஓபென் ரோர் (Oben Rorr) எலெக்ட்ரிக் பைக்கின் அறிமுக தேதி வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

ரிவோல்ட் ஆர்வி400, டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஆப்பு வைக்கிறது Oben Rorr... என்ன விலையில் எதிர்பார்க்கலாம்!

கர்நாடகா மாநிலம், பெங்களூரை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனம் ஓபென் எலெக்ட்ரிக் (Oben Electric). இந்நிறுவனம் அதன் முதல் மின் வாகன தயாரிப்பை மிக விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அது எப்போது விற்பனைக்கு வரும் என்கிற தகவலே தற்போது வெளியாகியுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400, டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஆப்பு வைக்கிறது Oben Rorr... என்ன விலையில் எதிர்பார்க்கலாம்!

ஓபென் எலெக்ட்ரிக் ரோர் (Rorr) எனும் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையே அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் அறிமுகம் வரும் 15ம் தேதி அன்றே அரங்கேற இருக்கின்றது. இதனைத் தொடர்ந்து வரும் ஏப்ரல்-ஜூன் மாதத்தில் எலெக்ட்ரிக் பைக்கை டெலிவரிக் கொடுக்க இருப்பதாகவும் நிறுவனம் கூறியிருக்கின்றது.

ரிவோல்ட் ஆர்வி400, டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஆப்பு வைக்கிறது Oben Rorr... என்ன விலையில் எதிர்பார்க்கலாம்!

ரோர், ஓபென் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு எலெக்ட்ரிக் டூ-வீலர் மட்டுமல்ல. அது, ஓர் அதி-திறன் வெளிப்பாட்டு வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் பைக்கும் ஆகும். இந்த மின்சார மோட்டார்சைக்கிளை ஏற்கனவே நிறுவனம் நாட்டில் காட்சிப்படுத்திவிட்டது.

ரிவோல்ட் ஆர்வி400, டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஆப்பு வைக்கிறது Oben Rorr... என்ன விலையில் எதிர்பார்க்கலாம்!

இதன் வாயிலாக இருசக்கர வாகனத்தில் என்ன மாதிரியான அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது அப்போதே தெரிய வந்தது. எல்இடி இன்டிகேட்டர்கள் மற்றும் பெரிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் உள்ளிட்டவை ரோர் இ-பைக்கில் இடம் பெறுவதும் உறுதியாகியது.

ரிவோல்ட் ஆர்வி400, டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஆப்பு வைக்கிறது Oben Rorr... என்ன விலையில் எதிர்பார்க்கலாம்!

இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பு வசதிகள் அவ்வாகனத்தில் இடம் பெற இருக்கின்றன. நியோ ரெட்ரோல் தோற்றத்திலேயேய ரோர் இ-பைக் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த தோற்றத்திற்கு கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் வட்ட வடிவ ஹெட்லைட், மெல்லிய எல்இடி டர்ன் இன்டிகேட்டர் உள்ளிட்ட அம்சங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ரிவோல்ட் ஆர்வி400, டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஆப்பு வைக்கிறது Oben Rorr... என்ன விலையில் எதிர்பார்க்கலாம்!

இதுமட்டுமின்றி ஸ்பிளிட் ரக இருக்கைகள், இரட்டை துண்டு பின் பக்க பயணிகளுக்கான கிராப் ரெயில் மற்றும் ஐந்து ஸ்போக் அலாய் வீல்கள் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்கள் மற்றும் தொழில்நுட்ப கருவிகள் இப்பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.

ரிவோல்ட் ஆர்வி400, டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஆப்பு வைக்கிறது Oben Rorr... என்ன விலையில் எதிர்பார்க்கலாம்!

ஆனால், என்ன மாதிரியான அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன என்பது பற்றிய முழுமையான விபரம் வெளியாகவில்லை. விரைவில் இதுகுறித்த கூடுதல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், ஓர் முழுமையான சார்ஜில் 200 கிமீ வரை பயணிக்கும் திறன், மணிக்கு 100 கிமீ எனும் உச்சபட்ச வேகம் உள்ளிட்டவையும் ரோர் பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

ரிவோல்ட் ஆர்வி400, டார்க் க்ரடோஸ் எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு ஆப்பு வைக்கிறது Oben Rorr... என்ன விலையில் எதிர்பார்க்கலாம்!

தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ரிவோல்ட் ஆர்வி400 மற்றும் அண்மையில் வெளியீட்டைப் பெற்ற டார்க் க்ரடோஸ் ஆகிய எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு போட்டியளிக்கும் வகையில் மிக மிக விரைவில் ஓபென் ரோர் விற்பனைக்கு வர இருக்கின்றது. இது ரூ. 1.2 லட்சம் தொடங்கி ரூ. 1.15 லட்சம் வரையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 10, 2022, 11:46 [IST]
English summary
Oben rorr electric bike launch revealed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+