ஜஸ்ட் மிஸ்.. ஓட்டி கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து நிகழ்வு மீண்டும் தமிழகத்தில் அரங்கேறியிருக்கின்றது. இந்த முறை எந்த நிறுவனத்தின் தயாரிப்பு தீ விபத்தில் சிக்கி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றது என்பது பற்றிய தகவலை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

இந்தியாவில் மின்சார வாகனங்கள் தீ பிடிக்கும் நிகழ்வு தொடர் கதையாகி உள்ளது. அதிலும், தமிழகத்தில் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தீ விபத்து சம்பவம் அதிகளவில் அரங்கேறி வருகின்றது. இன்றைய தினம்கூட (ஏப்ரல் 30) தமிழகத்தின் ஓசூர் பகுதியில் ஓர் இ-ஸ்கூட்டர் தீ விபத்து நிகழ்வு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

அதிர்ஷ்டவசமாக இந்த நிகழ்வில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. ஓசூரை சேர்ந்தவர் சத்தீஷ். இவர் தற்போது பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகின்றார். விடுமுறை காரணமாக சொந்த ஊர் வந்திருந்த சத்தீஷ், அவரது ஒகினவா (Okinawa) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வெளியே புறப்பட்டிருக்கின்றார்.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

சுசுவாடியில் இருந்து அப்கர் லே-அவுட்டிற்கு பயணித்ததாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு பயணித்துக் கொண்டிருந்த வேலையில் திடீரென எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருந்து புகை வெளியேற தொடங்கியிருக்கின்றது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட உடனடியாக இருசக்கர வாகனத்தை ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியிருக்கின்றார். மேலும், வாகனத்தை விட்டும் தள்ளி சென்றிருக்கின்றார்.

அவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புகுபுகுவென தீ பிடித்து எரிய தொடங்கியிருக்கின்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் இ-ஸ்கூட்டரின் பின் பகுதியில் தீ மலமலவென எரியத் தொடங்கியிருக்கின்றது. தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பொருட்டு இளைஞர் தண்ணீரை ஊற்றியும் அது பலனளிக்கவில்லை. இருசக்கர வாகனத்தின் உடல் பகுதி முழுவதும் தீயிற்கு இரையாகியிருக்கின்றது.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

இந்த சம்பவம் ஓசூர் மற்றும் அதனை சுற்றியிருக்கும் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஓசூரை மட்டுமா இந்த சம்பவம் பரபரப்பில் ஆழ்தியிருக்கின்றது. ஒட்டுமொத்த இந்தியாவையுமே இந்த நிகழ்வு அதிர்ச்சியில் உரைய வைத்திருக்கின்றது.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

தற்போது இந்நிகழ்வுகுறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். சத்தீஷ் இந்த ஒகினவா ஐ பிரைஸ்-பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு வருடத்திற்கு முன்னரே வாங்கியதாகக் கூறப்படுகின்றது. ஆகையால், இதனை அவ்வளவு பழைய வாகனம் என்று கூறிவிட முடியாது.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

இந்த நிலையிலேயே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டில் இருக்கும்போதே தீ பிடித்து எரிந்து நாசமாகியிருக்கின்றது. தமிழகத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுபோன்று தீ விபத்தில் சிக்குவது முதல் முறையல்ல. அண்மையில் இதேபோன்று ஓர் அதிர்ச்சியளிக்கும் சம்பவம் வேலூரில் அரங்கேறியது.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

இந்த நிகழ்வில் தந்தை-மகள் இருவர் பரிதாபமாகப் பலியாகினர். நல்லிரவில் சார்ஜ் போட்டோபோது இந்த கொடுமையான சம்பவம் அரங்கேறி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதுமட்டுமின்றி இன்னும் பல்வேறு சம்பவங்கள் நாட்டில் அரங்கேறியிருக்கின்றன. ஒரு சில பகுதிகளில் உயிர் காவுகளுடன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தீ விபத்து நிகழ்வுகள் அரங்கேறியிருக்கின்றன.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே ஓசூரில் சத்தீஷ் என்பவரின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் தீ விபத்தில் சிக்கி பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது. விரைவில் இதுபோன்று நிகழ்வுகளுக்கு அரசு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதுள்ள நம்பிக்கையையும், வரவேற்பையும் பல மடங்கு பாதிக்கும் வகையில் தொடர் தீ விபத்து நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

ஒகினவா ஐ பிரைஸ்-பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்:

ஹரியானா மாநிலம், குருகிராமை மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது ஒகினவா. இந்நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு வழங்கி வரும் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றே ஐ பிரைஸ்-பிளஸ் (Okinawa i praise plus) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர். இது தீ விபத்தில் சிக்கியிருப்பதே அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க வைத்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது ரூ. 1,05,990 க்கு விற்பனைச் செய்யப்படுகின்றது.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

இ-ஸ்கூட்டரை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 139 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக 3.3 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், 1000 வாட் பிஎல்டி மோட்டார் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றது. இது அதிகபட்சமாக 2500 வாட் வரை திறனை வெளியேற்றும். இதுமட்டுமின்றி அதிக தொழில்நுட்ப வசதிகள் கொண்ட டூ-வீலரகாவும் ஐ பிரைஸ்-பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் காட்சியளிக்கின்றது.

ஜஸ்ட் மிஸ்... ஓட்டிக் கொண்டிருந்தபோதே தீ பிடித்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! எந்த நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர் தெரியுமா?

அந்தவகையில், ஜியோ ஃபென்சிங், இம்மொபிலைஷன், டிராக்கிங் மற்றும் மாணிட்டரிங் கருவி, வாகனம் இருக்கும் இடத்தைக் காண்பிக்கும் கருவி, பராமரிப்பு மற்றும் இன்சூரன்ஸ் ரிமைண்டர் வசதி, அலர்டுகள் உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம் பெற்றிருக்கின்றன. பெரிய ஸ்பீடோ மீட்டர், ரீஜெனரேட்டிவ் எனர்ஜி வசதிக் கொண்ட இ-ஏபிஎஸ், 90/90-12 ட்யூப்லெஸ் டயர்கள் உள்ளிட்ட அம்சங்களும் வவங்கப்பட்டுள்ளன. இத்தகைய பன்முக வசதிகள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே தற்போது தீ விபத்தில் சிக்கி சோகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, April 30, 2022, 19:08 [IST]
English summary
Okinawa i praise plus e scooter catches fire near hosur
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+