கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில், முன்னணி நிறுவனம் ஒன்று அதிரடியான காரியத்தை செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

இந்தியாவை சேர்ந்த முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று ஒகினவா (Okinawa). எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் வலிமையான நிறுவனங்களில் ஒன்றாக ஒகினவா திகழ்கிறது. இந்த சூழலில், தனது இரண்டாவது உற்பத்தி ஆலை தற்போது முழுமையாக செயல்பாட்டிற்கு வந்துள்ளதாக ஒகினவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான தேவை முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது உயர்ந்து கொண்டே வருகிறது. அதனை பூர்த்தி செய்வதற்கு, இந்த தொழிற்சாலை உதவி செய்யும். ராஜஸ்தான் மாநிலத்தின் பிவாடி பகுதியில் ஒகினவா நிறுவனத்தின் இரண்டாவது தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

அதிநவீன வசதிகளுடன் இந்த தொழிற்சாலையை ஒகினாவா செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது. இந்த தொழிற்சாலை மூலம் 250க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். ஒகினவா நிறுவனத்தின் முதல் தொழிற்சாலை இதே ராஜஸ்தான் மாநிலத்தின் அல்வார் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு ஒரு ஆண்டுக்கு 1,80,000 எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க முடியும்.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

இந்த சூழலில், பிவாடி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொழிற்சாலையும் முழு அளவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒகினவா நிறுவனத்தின் உற்பத்தி திறன் அதிகரிக்கும். இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான, குறிப்பாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

ஏத்தர் எனர்ஜி, ஹீரோ எலெக்ட்ரிக் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் உள்ளிட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் பிரபலமான நிறுவனங்களாக திகழ்கின்றன. இதில், ஒகினவா நிறுவனமும் ஒன்று. இதுதவிர முன்னணி இரு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களான டிவிஎஸ், பஜாஜ் போன்ற நிறுவனங்களும் இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகின்றன.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் பல்வேறு புதிய நிறுவனங்கள் தொடர்ச்சியாக களமிறங்கி வருகின்றன. அத்துடன் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் போட்டியில் குதித்துள்ளன. இந்தியா தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு வேகமாக மாற தொடங்கியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரையில், ஸ்கூட்டர்களுக்குதான் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

எனவேதான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் பல்வேறு நிறுவனங்கள் களமிறங்கி கொண்டுள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை பெரிய அளவில் இல்லை. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டுமே இங்கு அதிக எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யக்கூடிய திறனை பெற்றுள்ளது.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்ஸான் மற்றும் டிகோர் எலெக்ட்ரிக் கார்களுக்கு இந்தியாவில் அமோக வரவேற்பு காணப்படுகிறது. எம்ஜி மோட்டார் நிறுவனத்தின் இஸட்எஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் கோனா ஆகிய எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்கள் விலை உயர்ந்தவை என்பதால், விற்பனை எண்ணிக்கை குறைவாகதான் இருக்கிறது.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

எலெக்ட்ரிக் கார்களின் விலை அதிகம் என்பதுதான், அவற்றின் விற்பனை எண்ணிக்கை குறைவாக இருந்து வருவதற்கு மிக முக்கியமான காரணம். எனவே குறைவான விலையில் அறிமுகம் செய்தால் மட்டுமே, எலெக்ட்ரிக் கார்களை அதிகளவில் விற்பனை செய்ய முடியும். இதன் காரணமாக விலை குறைவான எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கு நிறுவனங்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

மாருதி சுஸுகி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் காராக வேகன் ஆர் எலெக்ட்ரிக் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மாருதி சுஸுகி வேகன் ஆர் எலெக்ட்ரிக் கார் இங்கு சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது கேமராவின் கண்களில் நிறைய முறை சிக்கியுள்ளது. ஆனால் இதன் அறிமுகம் தொடர்பாக அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

வேகன் ஆர் எலெக்ட்ரிக் காரின் அறிமுகம் தாமதமாகி கொண்டே வருவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு குறைவான விலையில் விற்பனை செய்ய முடியுமா? என்ற சந்தேகம் மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு இருப்பதும் இதில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறைவான விலையில் கார்களை விற்பனை செய்வது மாருதி சுஸுகி நிறுவனத்தின் யுக்திகளில் ஒன்றாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

கிடுகிடுவென உயரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! அதிரடியான காரியத்தை செய்த முன்னணி நிறுவனம்! என்னனு தெரியுமா?

மாருதி சுஸுகி உள்பட பல்வேறு நிறுவனங்களும் தற்போது எலெக்ட்ரிக் கார்களை குறைவான விலையில் வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன. எனவே வரும் காலங்களில், பெட்ரோல் மற்றும் டீசல் கார்களின் விலையிலேயே எலெக்ட்ரிக் கார்களும் நமக்கு கிடைப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

Most Read Articles
English summary
Okinawa inaugurates second manufacturing facility
Story first published: Tuesday, February 15, 2022, 13:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X