ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஒகினவா ஓகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் முன்னணி எலெக்ட்ரிக் டூவீலர் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக ஒகினவா (Okinawa) திகழ்ந்து வருகிறது. ஒகினவா நிறுவனத்தின் லைன்-அப்பில் ஸ்லோ-ஸ்பீடு மற்றும் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. இந்த சூழலில், தனது லைன்-அப்பில் மற்றொரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை சேர்ப்பதற்கு ஒகினவா நிறுவனம் தயாராகி வருகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஆம், ஒகினவா நிறுவனம் ஓகி 90 (Okhi 90) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை, அடுத்த மாதம், அதாவது வரும் மார்ச் மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்ற எதிர்பார்ப்பு மிக நீண்ட நாட்களாக இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நிலவு வந்தது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

தற்போது இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ அறிமுக தேதியை ஒகினவா நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி ஓகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒகினவா நிறுவனம் வரும் மார்ச் 24ம் தேதி இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அன்றைய தினம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இது ஒகினவா நிறுவனத்தின் ஹை-ஸ்பீடு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கும் பணிகளை ஒகினவா நிறுவனம் நீண்ட நாட்களாக செய்து வருகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் சோதனையும் செய்யப்பட்டு வருகிறது. அப்படி சோதனை செய்யப்படும்போது, பல முறை கேமராவின் கண்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிக்கியுள்ளது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

அறிமுக தேதி தவிர, ஒகினவா நிறுவனம் ஓகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய புதிய தகவல்கள் எதையும் தற்போது வெளியிடவில்லை. எனினும் இதற்கு முன்பு வெளியான ஸ்பை படங்களின் அடிப்படையில், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளன. இதன்படி ஒகினவா ஓகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முன் பகுதியில் இன்டிகேட்டர்களுடன் கூடிய அகலமான அப்ரான் (Apron) இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

மேலும் எல்இடி ஹெட்லேம்ப், க்ரோம் பூச்சுக்களுடன் கூடிய ரியர் வியூ மிரர்கள், அலாய் வீல்கள், எல்இடி டெயில்லைட்கள் ஆகியவையும் ஒகினவா ஓகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் எல்இடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படும் எனவும் தகவல் தெரிவிக்கின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஸ்பீடு, ரேஞ்ச், பேட்டரி சார்ஜ் உள்பட பல்வேறு முக்கியமான தகவல்களை இது வழங்கும். மேலும் கழற்றி மாட்டக்கூடிய லித்தியம்-அயான் பேட்டரி தொகுப்பை ஒகினவா ஓகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகபட்ச வேகம் மணிக்கு 80 கிலோ மீட்டர்களாக இருக்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச், அதாவது பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு, 150 கிலோ மீட்டர்களாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் எல்லாம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியில் அறிவிக்கப்படும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப், ஓலா எஸ்1 மற்றும் சிம்பிள் ஒன் உள்ளிட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுடன் ஒகினவா ஓகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போட்டியிடும். இந்த போட்டியாளர்களுடன் ஒப்பிடுகையில் ஒகினவா ஓகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை குறைவானதாக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்கள் என எடுத்து கொண்டால், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்தான் அதிகளவில் விற்பனைக்கு அறிமுகமாகி வருகின்றன. இந்த வரிசையில்தான் ஒகினவா ஓகி 90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் விற்பனைக்கு வரவுள்ளது. ஆனால் வரும் காலங்களில் நிறைய எலெக்ட்ரிக் பைக்குகள் மற்றும் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வரவுள்ளன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 150 கிமீ ஓடும்! குறைவான விலையில் விற்பனைக்கு வருகிறது சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

டாடா அல்ட்ராஸ் எலெக்ட்ரிக் கார், மஹிந்திரா எக்ஸ்யூவி300 எலெக்ட்ரிக் கார் என ஏராளமான எலெக்ட்ரிக் கார்கள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கு வரிசை கட்டி நிற்கின்றன. ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் மற்றும் எம்ஜி இஸட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் புதிய வெர்ஷன்களும் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Thursday, February 24, 2022, 20:43 [IST]
English summary
Okinawa okhi 90 electric scooter official launch date details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+