சிங்கிள் சார்ஜில் 180 கிமீ ஓடுமா? ஆவலை தூண்டும் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... சூப்பரான விலையில் வருகிறது!

ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் மார்ச் 24ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிமீ ஓடுமா? சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் ஒகினவா (Okinawa) நிறுவனம் பல்வேறு எலெக்ட்ரிக் டூவீலர்களை விற்பனை செய்து வருகிறது. இந்த வரிசையில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ஒகினவா நிறுவனம் தற்போது தயாராகி வருகிறது. ஆனால் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகாரப்பூர்வ பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிமீ ஓடுமா? சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இருப்பினும் தற்போதைய நிலையில் ஒகினவா ஓகி90 (Okinawa Okhi90) என்ற பெயரில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் குறிப்பிடப்படுகிறது. பெயர் அறிவிக்கப்படாவிட்டாலும் கூட, இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்பது கூடுதல் சிறப்பு.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிமீ ஓடுமா? சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதன்படி வரும் மார்ச் 24ம் தேதி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் முறைப்படி விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ளதால், வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல் அதிகரித்துள்ளது. ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை, 1 லட்ச ரூபாய் முதல் 1.20 லட்ச ரூபாய் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிமீ ஓடுமா? சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த அளவிற்குள் ஏதேனும் ஒரு விலை நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் மார்ச் 24ம் தேதிதான் அதிகாரப்பூர்வ விலை அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய சந்தையில் ஏற்கனவே பல்வேறு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் இருந்து வருகின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிமீ ஓடுமா? சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இதில் ஓலா எஸ்1 ப்ரோ, சிம்பிள் ஒன், பஜாஜ் சேத்தக், டிவிஎஸ் ஐ-க்யூப் போன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு, ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேரடி போட்டியாக இருக்கும். ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சாலைகளில் சோதனை செய்யப்படும்போது, கேமராவின் கண்களில் ஏற்கனவே சிக்கியுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிமீ ஓடுமா? சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

சாலைகளில் சோதனையில் ஈடுபடுத்தப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உருமறைப்பு செய்யப்பட்டிருந்தாலும் கூட, பல முக்கிய தகவல்களை நமக்கு வெளிக்காட்டியுள்ளது. இதை வைத்து பார்க்கையில், ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கிட்டத்தட்ட 14 இன்ச் அளவுடைய அலாய் வீல்கள் வழங்கப்படும் என தெரிகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கை, நீளமாக இருக்கலாம்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிமீ ஓடுமா? சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பின் பகுதியில் சில்வர் நிறத்தில் க்ராப் ரெயில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. இதுதவிர இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கழட்டி மாற்றக்கூடிய வகையிலான லித்தியம் அயான் பேட்டரி தொகுப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆப்ஷனை பெறுவதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிமீ ஓடுமா? சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

ஒகினவா ஓகி90 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிலோ மீட்டர்களாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 150 கிலோ மீட்டர்கள் முதல் 180 கிலோ மீட்டர்கள் வரை பயணிக்க கூடிய திறனுடைய லித்தியம் அயான் பேட்டரியை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிமீ ஓடுமா? சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இது உண்மையாக இருக்கும்பட்சத்தில், இதனை மிக சிறப்பான ரேஞ்ச் என்று சொல்லலாம். தினசரி நகர பயன்பாடுகளுக்கு இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் ஏற்றதாக இருக்கும். சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்தால், ஓரளவிற்கு தொலைதூர பயணங்ளை எளிதாக மேற்கொள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 180 கிமீ ஓடுமா? சூப்பரான விலையில் விற்பனைக்கு வருகிறது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

அதே சமயம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வசதிகளுக்கும் பஞ்சமிருக்காது என கூறப்படுகிறது. இதன்படி ஜியோ-ஃபென்சிங், நேவிகேஷன் போன்ற வசதிகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெற்றிருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய அனைத்து கேள்விகளுக்கும், வரும் மார்ச் 24ம் தேதி நமக்கு அதிகாரப்பூர்வமான பதில்கள் கிடைத்து விடும்.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Okinawa okhi90 electric scooter here s everything you need to know
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X