ஐந்தே மாதத்தில் ஹீரோ-வை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்த ஓலா...

ஏப்ரல் மாதம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் ஓலா நிறுவனம் முதலிடத்தை பிடித்துள்ளது. ஹீரோ எலெக்டரிக் நிறுவனம் 3வது இடத்தை பிடித்துள்ளது. இது குறித்த தகவல்களை விரிவாக காணலாம் வாருங்கள்

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக் (Hero Electric)வை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா (OLA)...

ஓலா (OLA) நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த 5வது மாதத்திலேயே மார்கெட்டில் முதல் இடத்தை பிடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்கெட்டில் ஜாம்பவானாக இருந்த ஹீரோ எலெக்டரிக் (Hero Electric) , ஓகினாவா (Okinawa) ஆகிய நிறுவனங்களை பின்னிற்கு தள்ளி தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

மத்திய அரசின் வாகன் தளத்தில் உள்ள தரவுகளின்படி ஓலா (OLA) நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் மட்டும் 12683 வாகனங்களை, வாடிக்கையாளர்களிடம் விற்பனை செய்துள்ளது. இது அந்நிறுவனம் கடந்த மார்ச் மாதம் செய்த விற்பனையை விட 39 சதவீதம் அதிகம்.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

அதே நேரத்தில் இதுவரை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் இந்திய அளவில் ஜாம்பானா இருந்த ஹீரோ எலெக்டரிக் (Hero Electric) நிறுவனத்தின் விற்பனை கடந்த ஏப்ரல் மாதம் 50 சதவீதம் வரை சரிந்துளளது. கடந்த மாதம் வெறும் 6570 வாகனங்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

ஹீரோ எலெக்டரிக் (Hero Electric) நிறுவனம் முதலிடத்தை இழந்து இரண்டாம் இடத்திற்குவரவில்லை நேரடியாக 3வது இடத்திற்கு சென்றுள்ளது. ஒகினாவா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் முதன் முறையாக 10,000 எலெக்டரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

ஓலா நிறுவனம் வழக்கமாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள் விற்பனைக்காக டீலர்களை நியமிக்கும் மாடலை மாற்றி நேரடியாக வாடிக்கையாளர்களுக்கே டெலிவரி செய்யும் மாடலை அறிமுகப்படுத்தி அதிக விற்பனையை செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளது. ஆனால் இந்த மாடலில் வாடிக்கையாளர்கள் வாகனங்களை ஆர்டிஓவில் பதிவு சிரமங்களை அனுபவித்து வருவது தனிக்கதை.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

ஹீரோ எலெக்டரிக் (Hero Electric) எலெக்டரிக் நிறுவனத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதம் மொத்தம் 13000 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்திருந்தார். ஆனால் இந்த நிதியாண்டு துவங்கியதிலிருந்து அந்நிறுவனத்திற்கு எலெக்டரிக் வாகனம் தயாரிக்க பயன்படும் செம கண்டெக்டர் சிப்கள் (semiconductor chips) கிடைக்கவில்லை. அந்த உதிரிபாகத்தை அவர்கள் வெளிநாடுகளிலிருந்தே இறக்குமதி செய்கின்றனர்.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

இதனால் அந்நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு வாகனங்களை கூட டீலர்களுக்கு அனுப்ப முடியாமல் திண்டாடி வருகிறது. அதனால் டீலர்கள் ஏற்கனவே ஸ்டாக்கில் உள்ள வாகனங்களையே விற்பனை செய்து வருகின்றனர். இதனால் பல இடங்களில் விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

இந்த வாய்ப்பைஓலா (OLA) நிறுவனம் சாதகமாக பயன்படுத்தி கொண்டு தனது விற்பனையை எகிற வைத்துள்ளது. ஓகினாவா (Okinawa) நிறுவனத்திற்கும் விற்பனை அதிகரிக்க இது முக்கிய காரணமாக அமைந்துள்ளது. ரஷ்யா உக்ரைன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் பல உதிரி பாகங்களை இறக்குமதி செய்வதில் சிக்கல் உள்ளது. இப்படியான சிக்கலில் தான் தற்போது ஹீரோ எலெக்டரிக் (Hero Electric) எலெக்ட்ரிக் நிறுவனம் சிக்கியுள்ளது.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

சமீபமாக செய்திகளில் வரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் பேட்டரி வெடிப்பு குறித்த செய்தி கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அடுத்தடுத்த மாதங்களில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

ஹீரோ எலெக்டரிக் (Hero Electric) நிறுவனத்தை பொறுத்தவரை அந்த நிறுவனத்தின் வாகனங்கள் இதுவரை அப்படியான எந்த சிக்கலிலும் மாட்டவில்லை. ஆனால்ஓலா (OLA) நிறுவனத்தின் S1 Pro ஸ்கூட்டர் தீ பிடித்தது. மற்றும் அதன் வாடிக்கையாளர்கள் பலர் சமூகவலைத்தளங்களில் அந்த ஸ்கூட்டரில் சாஃப்ட்வேர் மற்றும் சில பிரச்சனைகளை கூறி வருவது அந்த நிறுவனத்திற்கான மதிப்பை மார்கெட்டில் குறைத்து வருகிறது.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

ஆனால் கடந்த ஏப்ரல் மாத விற்பனையில் இந்த பிரச்சனைகள் எதுவும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வருங்காலத்தில் இது பாதிப்பை ஏற்படுத்தகூடும் என்ற அச்சம்ஓலா (OLA) நிறுவனத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்த 1441 ஸ்கூட்டர்களின் பேட்டரியை செக் செய்ய திரும்ப அழைத்துள்ளனர்.

ஐந்தே மாதத்தில் ஹீரோ எலெக்டரிக்கை அடித்து பின்னுக்கு தள்ளி நம்பர் 1 இடத்தை பிடித்தஓலா

தற்போது வரை மார்கெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்ப்பு உள்ளது. இந்த மார்கெட்டை எந்த நிறுவனம் அதிகமாக கைப்பற்றப்போகிறது என்கிற போட்டிஓலா (OLA), ஹீரோ எலெக்டரிக் (Hero Electric) எலெக்ட்ரிக், ஓகினாவா (Okinawa) ஆகிய நிறுவனங்களுக்குள் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஏத்தர் நிறுவனம் தனது விற்பனையை மெல்ல மெல்லவே அதிகரித்து வருவதால் இந்த போட்டியில் அந்த நிறுவனம் விரைவில் இணையும் என எதிர்பார்க்கலாம்

More from DriveSpark

Article Published On: Tuesday, May 3, 2022, 13:27 [IST]
English summary
Ola captures Market top position at electric two wheeler sales in April
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+