நம்ம ஆளு(ஓலா)க்கு செம்ம திள்ளு... ஹோண்டா ஆக்டிவாவையையே தூக்கி சாப்பிட போகுதாம்!
பல ஆண்டுகளாக இந்தியாவின் டாப் செல்லிங் ஸ்கூட்டராக இருக்கும் ஹொண்டா ஆக்டிவாவை எங்கள் நிறுவனம் பின்னுக்கு தள்ளும் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதிரடியாக அறிவித்து வெளியிட்டுள்ளது. நிறுவனம் இந்த அறிவிப்பு பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. தற்போதைய நிலவரப்படி இந்த ஸ்கூட்டர் ஆக்டிவா, ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா பிரீமியம் என மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. பல ஆண்டுகளாக இந்தியாவின் டாப் செல்லிங் ஸ்கூட்டராக இது இருக்கின்றது. இத்தகைய ஸ்கூட்டருக்கே நாங்கள் விரைவில் ஆப்பு வைக்க இருக்கின்றோம் என ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அதாவது, தங்கள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனையையே மிஞ்சும் அளவிற்கு விற்பனையாகும் என அவர் மிக உறுதியாக தெரிவித்துள்ளார். இதனை தனது டுவிட்டர் பதிவின் வாயிலாகவே அவர் தெரிவித்துள்ளார். ஆகஸ்டு 2023 ஆம் ஆண்டிற்குள் இந்த இலக்கை தங்களின் நிறுவனம் அடையும் என தெரிவித்து உள்ளார். இவரின் இந்த அதீத நம்பிக்கை பலரிடையே வியப்பையும், சிலரிடத்தில் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.
நாட்டின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமாக ஓலா மாறியிருக்கின்றது. ஹீரோ எலெக்ட்ரிக், ஏத்தர் ஆகிய நிறுவனங்களே கடந்த காலங்களில் இந்தியாவின் முன்னணி மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களாக விளங்கிக் கொண்டிருந்தனர். இவர்களின் இடத்தையே ஓலா எலெக்ட்ரிக் தட்டப் பறித்துள்ளது விற்பனையில் இந்த நிறுவனம் பின்னுக்கு தள்ளியிருக்கின்றது. இந்த மாதிரியான மிக சிறந்த வரவேற்பு அவர்களது எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கிடைத்துக் கொண்டிருப்பதும் ஓலா நிறுவனத்தின் இப்போதைய பேராசைக்கு ஓர் காரணமாக இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, விரைவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அதன் மலிவு விலை எஸ் 1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகையும் இந்த அளவு அதீத நம்பிக்கை உடன் நிறுவனம் இவ்வாறு காரணமாக இருக்கலாம் என இந்திய வாகனத்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர். ஆனால், ஓலா இவ்வளவு நம்பிக்கை உடன் இதை கூறுவதற்கான அதிகாரப்பூர்வ காரணம் தெரியவில்லை.
அதேநேரத்தில் இது எந்த அளவு சாத்தியப்படும் என்பதும் தெரியவில்லை. ஒவ்வொரு மாதமும் லட்சக் கணக்கில் விற்பனையாகக் கூடிய ஸ்கூட்டராக ஆக்டிவா இருக்கின்றது. 2022 செப்டம்பரில் மட்டுமே ஹோண்டா ஆக்டிவா 2.45 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகின. அதேவேளையில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரோ அதே மாதத்தில் வெறும் 9,649 யூனிட்டுகளை மட்டுமே விற்றது. ஏணி வைத்தால்கூட எட்ட முடியாத இந்தளவு மிக மிக குறைவான விற்பனை எண்ணிக்கை வைத்துக் கொண்டே ஓலா நிறுவனம் ஹோண்டா ஆக்டிவாவை விற்பனையில் வீழ்த்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
நிறுவனத்தின் இந்த எண்ணம் வெற்றி அடையுமா என்பது அனைவருக்கும் சந்தேகமாகவே உள்ளது. இருப்பினும், சிலர் நிறுவனத்தின் எஸ் 1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் வருகை இதை சாத்தியப்படுத்தலாம் என தெரிவித்திருக்கின்றனர். அவர்களின் இத்தகைய கூற்றிற்கு எஸ் 1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையே முக்கிய காரணமாக இருக்கின்றது. இந்த மாடலை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் ரூ. 85 ஆயிரத்திற்கு விற்பனைக்கு வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது.
தற்போது இந்த வாகன மாடலுக்கு ரூ. 999 என்ற முன் தொகையில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. நிறுவனத்தின் பிற மாடல்களைக் காட்டிலும் இதன் விலை மிகக் குறைவாகும். எஸ் 1 ஒரு லட்ச ரூபாய்க்கும், எஸ் 1 ப்ரோ 1.4 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது. எஸ் 1 ஏர் விலையில் மட்டுமல்ல சிறப்பம்சங்கள் விஷயத்திலும் மிகவும் லைட்டான தயாரிப்பாகக் காட்சியளிக்கின்றது. தற்போது எஸ்1 ஏர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரிசர்வேசன் பணிகள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இது அதிகாரப்பூர்வமாக 2023 பிப்பரவரியிலேயே விற்பனை வர இருக்கின்றது.
இதைத்தொடர்ந்து, ஏப்ரல் மாதத்தில் இருந்து இதனை டெலிவரி வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோவை பிரதிபலிக்கும் வகையில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் இருந்தாலும், முன்னதாக கூறியதைப் போல் குறைந்த திறன் வெளிப்பாட்டைக் கொண்டதாக எஸ்1 ஏர் காட்சியளிக்கின்றது. இது (ஓலா எஸ்1 ஏர்) ஓர் முழு சார்ஜில் 101 கிமீ மட்டுமே ரேஞ்ஜ் தரும் என நிறுவனத்தால் கூறப்பட்டுள்ளது. அதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். அதேவேலையில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை வெறும் 4.3 செகண்டுகளிலேயே இந்த வாகனம் தொட்டுவிடும். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகவே எஸ்1 ஏர் மாடலை ஓலா உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








