என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்த அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை குறித்த அதிர்ச்சிகர அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

இந்திய சந்தையில் மற்றுமொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்1 மாடலை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என்ற இரு விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இவை அறிமுகத்தில் இருந்தே மிகுந்த கவனத்தை பெற்றன.

என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

அதிலும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்பு ஓலா எஸ்1 இ-ஸ்கூட்டர்களின் படங்கள் இணையத்தில் வைரலாகின. இதனால் எதிர்பார்த்ததை காட்டிலும் இவற்றிற்கு முன்பதிவுகள் குவிய துவங்கின. இவற்றிற்கு கிடைக்கும் புக்கிங்கை சமாளிக்க முடியாமல், வெப்சைட் பழுதியாகியதாக ஓலா நிறுவனம் சார்பில் அந்த சமயத்தில் வெளியிடப்பட்ட அறிக்கை தான் இதற்கு சான்றாகும்.

என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

இதன் விளைவாக எஸ்1 ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய சூழல் கூட ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு உருவாகியது. அதன்பின் சில வாரங்கள் கழித்து மீண்டும் துவங்கப்பட்ட முன்பதிவுகளின்போதும் வாடிக்கையாளர்கள் குவிந்தனர். முன்பதிவுகள் துவங்கப்பட்ட சில மாதங்களிலேயே சுமார் 90,000 எஸ்1 ஸ்கூட்டர்கள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

இதனால் ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இந்திய போக்குவரத்தையே புரட்டிப்போடும் என எதிர்பார்க்கப்பட்டுவரும் நிலையில், தற்போது கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எஸ்1 ஸ்கூட்டர்கள் தொடர்பான ஆச்சிரியப்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் எஸ்1 ஸ்கூட்டர்களின் டெலிவிரிகளை கடந்த டிச.15ஆம் தேதி துவங்கியது.

என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

அந்த மாதம் முடிய 16 நாட்கள் தான் இருப்பினும், இந்த நாட்களுக்கு உள்ளாக ஆயிரக்கணக்கில் எஸ்1 இ-ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் டெலிவிரி செய்திருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் கடந்த மாதத்தில் வெறும் 111 எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ ஸ்கூட்டர்களை மட்டுமே ஓலா விற்பனை செய்துள்ளதாக ஃபடா (FADA) எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தற்சமயம் அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தமிழ்நாடு உள்பட வெறும் 4 மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்து வருகிறது. இருப்பினும் 111 யூனிட்கள் என்பது மிகவும் குறைவான எண்ணிக்கையாகும். இது ஃபடா வெளியிட்டுள்ள தகவலே அன்றி, ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகளை இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

ஃபடா வெளியிட்டுள்ள புள்ளி விபரங்களின்படி பார்க்கும்போது, நமது தமிழகத்தில், ஓசூரில் தொழிற்சாலையை அமைத்திருந்தாலும், டெலிவிரி துவங்கப்பட்ட முதல் மாதமான டிசம்பரில் கர்நாடகாவில் தான் அதிக எஸ்1 ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், மொத்த 111 யூனிட்களில் கிட்டத்தட்ட 60 யூனிட் ஸ்கூட்டர்களை கர்நாடாகவில் தான் இந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதற்கடுத்தே நமது தமிழகம் உள்ளது.

என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

கடந்த மாதத்தில் மொத்தம் 25 ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தமிழகத்தில் வாடிக்கையாளர்களிடம் டெலிவிரி செய்யப்பட்டுள்ளன. இவற்றிற்கு அடுத்து மஹாராஷ்டிராவில் 15 யூனிட்களும், ராஜஸ்தானில் 11 யூனிட்களும் விற்கப்பட்டுள்ளன. கடந்த டிசம்பர் மாத இறுதியில், ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் சிஇஓ-வும், துணை நிறுவனருமான பாவிஷ் அகர்வால் எஸ்1 & எஸ்1 ப்ரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் முதல் தொகுப்பு அனைத்தும் தொழிற்சாலையை விட்டு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

அந்த பதிவில், "சில ஸ்கூட்டர்கள் போக்குவரத்தில் உள்ளன. பெரும்பாலானவை ஏற்கனவே வாடிக்கையாளர்களுக்கு அருகில் உள்ள டெலிவிரி மையங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கு ஆர்டிஓ பதிவு செயல்முறையை பெற்று வருகின்றன. முழு டிஜிட்டல் செயல்முறை அனைவருக்கும் புதியது என்பதால் பதிவு செயல்முறை நாங்கள் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுக்கிறது" என்றார்.

என்னங்க சொல்றீங்க... டிசம்பரில் வெறும் 111 ஓலா இ-ஸ்கூட்டர்கள் தான் விற்பனையா!! வெளிச்சம் போட்டுக்காட்டிய ஃபடா!

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தனது இ-ஸ்கூட்டர்களை விற்பனை செய்ய எந்தவொரு டீலர்கள் நெட்வொர்க்கையும் கொண்டில்லை, உருவாக்கும் எண்ணமும் தற்போதைக்கு இந்த நிறுவனத்திற்கு இல்லை. சில்லறை விற்பனை மையங்கள் தயாரிப்பு நிறுவனத்தாலேயே அந்தந்த முக்கிய நகரங்களில் செயல்பட்டு வருகின்றன. இதனால் தான் டீலர்கள் கூட்டமைப்பு கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கையை குறைவாக காட்டுகிறது என எண்ணுகிறோம்.

Most Read Articles

மேலும்... #ஓலா #ola
English summary
Ola Electric Sells Only 111 Electric Scooter In December 2021 Says FADA.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X