ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கீங்களா? விரைவில் விற்பனை தொடங்க போறாங்க... எப்போ தெரியுமா?

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மீண்டும் விற்பனைத் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் காணலாம், வாங்க.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கீங்களா? விரைவில் விற்பனை தொடங்க போறாங்க... எப்போ தெரியுமா?

உலகளவில் மின் வாகனங்களுக்கான டிமாண்ட் அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்நிலையை முன்னிட்டு பலதரப்பட்ட நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் குதித்துக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், பிரபல கால் டாக்சி நிறுவனமான ஓலா, 'ஓலா எலெக்ட்ரிக்' எனும் பெயரில் மின் வாகன உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கீங்களா? விரைவில் விற்பனை தொடங்க போறாங்க... எப்போ தெரியுமா?

நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் இருசக்கர வாகனமாக ஓலா எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டர் இருக்கின்றது. இதற்கே மிக விரைவில் விற்பனைத் தொடங்கப்பட இருப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது. வரும் மார்ச் 17 ஏற்கனவே ப்ரீ செய்தவர்களுக்கும், அடுத்த நாள் மார்ச் 18ம் தேதி அனைவருக்குமான விற்பனையும் மேற்கொள்ளப்பட இருப்பதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கீங்களா? விரைவில் விற்பனை தொடங்க போறாங்க... எப்போ தெரியுமா?

இத்துடன், வரும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு புதிய பிரத்யேக நிறத்திலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாகவும் நிறுவனம் அறிவித்திருக்கின்றது. அது 'ஜெருவா' (Gerua) என்ற பெயரில் அழைக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கீங்களா? விரைவில் விற்பனை தொடங்க போறாங்க... எப்போ தெரியுமா?

இதுகுறித்து தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் ஓலா நிறுவனம் கூறியிருப்பதாவது, "ஓலா எஸ்1 ப்ரோ மின்சார ஸ்கூட்டருக்கு முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் அவர்களுக்கான வாகனத்தை முன் கூட்டியே அணுகலாம். மற்ற வாடிக்கையாளர்கள் அடுத்த நாள் வாங்கிக் கொள்ளலாம்" என அறிவித்துள்ளது.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கீங்களா? விரைவில் விற்பனை தொடங்க போறாங்க... எப்போ தெரியுமா?

இத்துடன், முன்பைப் போலவே ஓலா செயலி வாயிலாகவே விற்பனை நடைபெற இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமின்றி, இம்முறை மின்சார ஸ்கூட்டரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஏப்ரல் மாதத்தில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் டெலிவரி வழங்கப்படும் என்றும் நிறுவனம் கூறியிருக்கின்றது.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கீங்களா? விரைவில் விற்பனை தொடங்க போறாங்க... எப்போ தெரியுமா?

ஓலா எலெக்ட்ரிக் எஸ் 1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரு விதமான மாடல்கள் மின்சார ஸ்கூட்டரை விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில், முதல் மாடலுக்கு ரூ. 99,999-ம், இரண்டாவது மாடலுக்கு ரூ. 1,29,999 விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவையிரண்டிற்கும் கடந்த காலத்தில் மிக அமோகமான வரவேற்பு நிலவியது.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கீங்களா? விரைவில் விற்பனை தொடங்க போறாங்க... எப்போ தெரியுமா?

இதே வரவேற்பே வரும் காலத்திலும் எதிர்பார்க்கப்படுகின்றது. விலையை போலவே திறனிலும் இரு ஸ்கூட்டர்களும் மாறுபட்டுக் காட்சியளிக்கின்றன. ஓலா எஸ்1 அதிகபட்சமாக மணிக்கு 90 கிமீ வேகத்திலும், 121 கிமீ ரேஞ்ஜையும் ஒரு முழு சார்ஜில் வழங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதைவிட சற்று அதிக திறன் கொண்டதாக எஸ்1 ப்ரோ காட்சியளிக்கின்றது.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கீங்களா? விரைவில் விற்பனை தொடங்க போறாங்க... எப்போ தெரியுமா?

அது, மணிக்கு 115 கிமீ பயணிக்கக் கூடியது. இதன் முழு ரேஞ்ஜ் திறன் 181 கிமீ ஆகும். இந்த மாடல்களில் நார்மல், ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹைப்பர் ஆகிய மூன்று விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி, ஓலா எஸ்1 மின்சார ஸ்கூட்டர் 5 விதமான நிற தேர்வுகளிலும், எஸ்1 ப்ரோ 10 விதமான நிற தேர்வுகளிலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்காக காத்திருக்கீங்களா? விரைவில் விற்பனை தொடங்க போறாங்க... எப்போ தெரியுமா?

இவற்றிலேயே புதியதாக ஜெருவா நிற தேர்வு கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது. ஹோலி பண்டிகைத் தினத்தை சிறப்பும் விதமாக இந்த நிறம் விற்பனைக்கு வழங்கப்பட இருக்கின்றது. ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் 7 இன்ச் தொடு திரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 4 ஜி இணைப்பு வசதி, ப்ளூடூத் இணைப்பு, ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல், நேவிகேசன், ஜியோ ஃபென்சிங் உள்ளிட்ட ஏராளமான அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 15, 2022, 13:57 [IST]
English summary
Ola electric opens next purchase window for s1 pro e scooter on holi
மேலும்... #ஓலா #ola
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+