எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக்கின் அட்டகாசமான கண்டுபிடிப்பு!

மின்சார இருசக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வரும் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம், மிக விரைவில் எலெக்ட்ரிக் கார்களையும் உற்பத்தி செய்ய இருக்கின்றது. இந்த நிலையில், அந்நிறுவனம் தன்னாட்சி தொழில்நுட்பத்தை உருவாக்கியிருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் தரமான வசதி!

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவமான ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric), தற்போது நவீன ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து வருகின்றது. ஓலா எஸ்1 மற்றும் ஓலா எஸ்1 ப்ரோ ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைச் செய்து வருகின்றது. இவற்றைத் தொடர்ந்து, நிறுவனம் எதிர்காலத்தில் அதி-நவீன தொழில்நுட்ப வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் கார்களையும் உருவாக்க இருப்பதாக சமீப காலமாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன.

எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் தரமான வசதி!

இந்த நிலையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது புதிதாக ஓர் அதி-நவீன தொழில்நுட்ப வசதியை உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தன்னாட்சி தொழில்நுட்ப வசதியையே தங்கள் நிறுவனம் உருவாக்கியிருப்பதாக ஓலா தகவல் வெளியிட்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலையே கடந்த சனிக்கிழமை அன்று நிறுவனம் வெளிப்படுத்தியது.

எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் தரமான வசதி!

இந்த தொழில்நுட்பம் நிறுவனத்தின் எதிர்கால எலெக்ட்ரிக் கார்களில் இடம் பெறலாம் என யூகிக்கப்படுகின்றது. நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் கார் உற்பத்தியில் மிக தீவிரமாகக் களமிறங்கியிருக்கின்றது. இதன் உருவாக்கப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வரும் இந்த வேலையில் நிறுவனம் தற்போது தன்னாட்சி தொழில்நுட்ப வசதியை உருவாக்கியுள்ளது.

எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் தரமான வசதி!

இது அவசர காலங்களில் தானாகவே பிரேக்கை பிடித்தல், மோதலை தவிர்த்தல், வேகத்தைக் கன்ட்ரோல் செய்தல் போன்ற பல்வேறு பாதுகாப்பு யுக்திகளை தன்னிச்சையாகவே கையாளும். இந்த வசதிக்காக 3 லிடார் சென்சார்கள், ஒற்றை ஜிபிஎஸ் சென்சார் மற்றும் ஓர் கேமிரா உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையே அனைத்து இடையூறுகளையும் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் களமிறங்க உதவியாக இருக்கும்.

எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் தரமான வசதி!

இதுமட்டுமின்றி, ஓலா நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான பேட்டரியை அதுவே தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 50GWh உற்பத்தி திறன் கொண்ட ஆலையை அமைக்கப்போவதாக நிறுவனத்தின் முக்கிய அதிகாரி பவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். தற்போது நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களில் எல்ஜி நிறுவனத்தின் பேட்டரிகளை பயன்படுத்தி வருகின்றது.

எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் தரமான வசதி!

ஒவ்வொரு பேட்டரியிலும் 224 செல்கள் வீதம் இருக்கும். இந்த ஒவ்வொரு செல்களும் 67 கிராம் எடைக் கொண்டவை. இது நிக்கல் மக்னீஷியம் கோபால்டால் உருவாக்கப்பட்டவை ஆகும். இது நீடித்து உழைக்கும் பேட்டரியும்கூட. இதனையே ஓலா தற்போது பயன்படுத்தி வருகின்றது. இதற்கு பதிலாக சொந்த நிறுவனத்தின் தயாரிப்பு பேட்டரியை விரைவில் அது பயன்படுத்த இருக்கின்றது.

மேலும், ஓலா நிறுவனம் அதன் சாஃப்ட்வேரை அப்கிரேட் செய்ய இருக்கின்றது. அது ஓஎஸ்2-க்கு மாற இருக்கின்றது. தனது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சிறப்பு வசதியை வழங்க இந்த அப்கிரேஷன் மிக முக்கியமானது என நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் தரமான வசதி!

இந்தியாவின் புகழ்பெற்ற மின்சார இருசக்கர வாகன உற்பத்தியாளர்களில் ஒருவராக ஓலா எலெக்ட்ரிக் மாறியிருக்கின்றது. நிறுவனத்தின் ஓலா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையிலேயே இந்தியர்களைக் கூடுதலாகக் கவரும் பொருட்டு அதி நவீன தொழில்நுட்பங்களை உருவாக்கும் பணியில் ஓலா களமிறங்கியுள்ளது.

எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் தரமான வசதி!

இதன் அடிப்படையிலேயே தன்னாட்சி தொழில்நுட்ப வசதியை நிறுவனம் உருவாக்கியுள்ளது. வெகு விரைவில் இந்த தொழில்நுட்பம் கொண்ட வாகனத்தை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணியில் ஓலா ஈடுபட்டு வருகின்றது. இந்த பணிகள் தற்போது இறுதி நிலையை எட்ட தொடங்கியிருப்பது கூறப்படுகின்றது. இந்த நிலையிலேயே தன்னாட்சி அம்சம் பற்றிய தகவலை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் தரமான வசதி!

ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருவதாக நாங்கள் கூறியிருந்தோம். நாட்டின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக்கிற்கே சவால் விடும் வகையில் அது விற்பனை வளர்ச்சியை பெற்று வருவதை நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

எதிர்ல வண்டி வந்தா தானாகவே பிரேக் பிடிக்கும்... ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கும் தரமான வசதி!

கடந்த 2022 மார்ச் மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகனங்கள் ஒட்டுமொத்தமாக 9,123 யூனிட்டுகள் விற்பனையாகியிருக்கின்றன. இந்த மிக சிறந்த விற்பனை எண்ணிக்கை அது பெற்றதனால் நாட்டின் இரண்டாவது முன்னணி இ-வாகன உற்பத்தியாளராக மாறியது. அதேவேலையில், 13,022 யூனிட்டுகள் விற்பனையுடன் முதல் இடத்தை ஹீரோ எலெக்ட்ரிக் பிடித்துள்ளது.

Most Read Articles
English summary
Ola electric reveals autonomous tech future battery plans
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X