இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

எலக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துவரும் நிலையில், கடந்த 2022 மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் தெரியவந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

பெட்ரோல் & டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை அதிகரித்து வருவதினாலும், பராம்பரிப்பு செலவு குறைவினாலும் எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை விரிவடைந்து வருகிறது. அதிலிலும் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

மாநில மற்றும் மத்திய அரசாங்கங்கள் வழங்கிவரும் மானியங்களும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக சொல்லலாம். இருப்பினும் கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த மே மாதத்தில் குறைவான எண்ணிக்கையிலேயே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த திடீர் சரிவிற்கு குறைக்கடத்திகள் பற்றாக்குறை மற்றும் சமீபத்திய இ-ஸ்கூட்டர் தீப்பிடிப்பு சம்பவங்களை முக்கிய காரணமாக சொல்லலாம்.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

குறைக்கடத்திகளுக்கான பற்றாக்குறை ஆனது கடந்த 2021 ஆண்டில் இருந்தே உள்ளது. ஆனால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிவு தற்போதுதான் சரிவை காண ஆரம்பித்துள்ளது. அத்துடன் கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிப்பு சம்பவத்தையும் அவ்வப்போது பார்த்து வருகின்றோம். இவற்றின் காரணமாக ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தை தவிர்த்து மற்றவை அனைத்தும் குறிப்பிடத்தக்க சரிவை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் கண்டுள்ளன.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

இந்த வகையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் முதலிடத்தை பிடித்திருப்பினும், ஒகினவா பிராண்டின் விற்பனை 2022 ஏப்ரலை காட்டிலும் கடந்த மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரலில் 11,011 ஒகினவா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில் கடந்த 2022 மே மாதத்தில் 19.28% குறைவாக 8,888 ஒகினவா இ-ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

கடந்த மாதத்தில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட மொத்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் ஒகினவாவின் பங்கு மட்டுமே 30.72% ஆகும். இதேபோன்று ஒகினவாவிற்கு அடுத்து 2வது இடத்தை பிடித்துள்ள ஓலா எலக்ட்ரிக்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் கிட்டத்தட்ட 4 ஆயிரம் யூனிட்கள் அளவில் சரிவை கண்டுள்ளது.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

குறிப்பாக, "ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தீப்பிடிக்கின்றன" என்கிற கருத்து பரவ ஆரம்பித்த பிறகு புதியதாக ஓலா ஸ்கூட்டர்களை வாங்குவோர் குறைய ஆரம்பித்துள்ளனர். எந்த அளவிற்கு என்றால், கடந்த ஏப்ரலில் 12,702 ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் அதனை காட்டிலும் 31.66% குறைவாக 8,681 ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

3வது இடத்தை பிடித்துள்ள ஆம்பியர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கடந்த மே மாதத்தில் 5,529 யூனிட்கள் விற்கப்பட்டுள்ளன. இது 2022 ஏப்ரலில் விற்பனை செய்யப்பட்ட ஆம்பியர் இ-ஸ்கூட்டர்களை காட்டிலும் 15.46% குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 6,540 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆம்பியர் பிராண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

ஏற்கனவே கூறியதுபோல் கடந்த மே மாதத்தில் நேர்மறையான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ள ஒரே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்ட் ஏத்தர் எனர்ஜி ஆகும். 2022 ஏப்ரலில் 2,450 ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இதனை காட்டிலும் கடந்த மாதத்தில் 26.45%, அதாவது 648 யூனிட்கள் அதிகமாக 3,098 ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

ஒரு சமயத்தில் இந்தியாவின் நம்பர்.1 இவி ஸ்டார்ட்-அப் பிராண்டாக விளங்கிவந்த ஹீரோ எலக்ட்ரிக் இம்முறை 2,739 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை உடன் 5வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்தில் 6,578 ஹீரோ எலக்ட்ரிக்கின் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஹீரோ எலக்ட்ரிக்கின் விற்பனை சுமார் 58.36% குறைந்துள்ளது.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

இந்த 5 முன்னணி பிராண்ட்களில் இருந்து மட்டும் கடந்த மே மாதத்தில் 28,935 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன. அதுவே 2022 ஏப்ரலில் இவற்றின் மொத்த விற்பனை எண்ணிக்கைகள் 39,281 ஆக பதிவாகி இருந்தன. இந்த வகையில் பார்க்கும்போது, இந்தியாவில் இந்த டாப்-5 இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்களின் விற்பனை 26.34% குறைந்துள்ளது.

இதை எதிர்பார்க்கலயே!! இந்தியாவில் சரிவை காணும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை!

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால்,10 ஆயிரத்திற்கும் அதிகமான எண்ணிக்கையிலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பிராண்ட்களை தாண்டி டிவிஎஸ் மோட்டார் தனது ஐ-க்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2,637 யூனிட்கள் கடந்த மே மாதத்தில் விற்பனை செய்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 6, 2022, 13:37 [IST]
English summary
Ola hero electric okinawa post sales de growth
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+