போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

போய்ஸ் நிறுவனம் என்எக்ஸ்120 மற்றும் க்ரேஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை பொருத்தமான பேட்டரிகளுடன் வெளியீடு செய்துள்ளது. இந்த இ-ஸ்கூட்டர்களை பற்றி இனி இந்த செய்தியில் முழுமையாக பார்ப்போம்.

போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

நிஸிகி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இவி ஸ்டார்ட்-அப் பிராண்டாக விளங்கும் போய்ஸ் ஸ்கூட்டர் என்எஸ்-120 மற்றும் கிரேஸ் என இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு கொண்டுவரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த இ-ஸ்கூட்டர்கள் பெங்களூருவில் இருந்து வெளியீடு செய்யப்பட்டுள்ளன.

போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

நிஸிகி டெக்னாலஜிஸ் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் என்.எக்ஸ்-120 -இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,24,000 ஆகும். NMC (நிக்கல், மாங்கனீசு மற்றும் கோபால்ட்) சார்ந்த லித்தியம்-இரும்பு பேட்டரிகளை பெறும் என்எக்ஸ்-120 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரேஞ்ச் 110கிமீ-களில் இருந்து 140கிமீ வரையில் உள்ளது. அதிகப்பட்சமாக இந்த ஸ்கூட்டரில் மணிக்கு 55கிமீ வேகத்தில் செல்லலாம்.

போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

இந்த புதிய இ-ஸ்கூட்டர்களில் ப்ளூடூத் இணைப்பு வசதி, யுஎஸ்பி சார்ஜிங் துளைகள், ட்யூப்லெஸ் டயர்கள், முன் & பின்பக்க காம்பி-பிரேக் அமைப்புகள் உள்ளிட்ட தொழிற்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் ஓட்டுனர் கால் வைக்க போதுமான இடவசதி மற்றும் இருவர் சவுகரியமாக அமர்ந்து கொள்ளும் வகையில் இருக்கை அமைப்பு இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கொடுக்கப்பட்டுள்ளது.

போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

மொத்தம் ஐந்து விதமான நிறத்தேர்வுகளில் இந்த போய்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படவுள்ளன. இவற்றுடன் ஸுய்ங்க் என்ற மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிக்கும் பணியிலும், நிஸிகி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இது தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாடல்களை காட்டிலும் வேகம் மிக்கதாக இருக்கும். இதன் டாப்-ஸ்பீடு 90kmph என்ற அளவில் இருக்கும்.

போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

என்எக்ஸ்-120 மற்றும் கிரேஸ் என்கிற இரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி இருப்பது குறித்து நிஸிகி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விட்டல் பெலாண்டார் கருத்து தெரிவிக்கையில், "தொழிற்நுட்ப முன்னேற்றங்கள், செலவு, அணுகல்தன்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றுக்கு இடையே சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளோம்.

போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

தொழிற்நுட்ப ரீதியாக மேம்பட்ட அம்சங்களை வழங்குவது, சூழ்ச்சியின் எளிமை மற்றும் மலிவு விலையில் வாகன உரிமை உள்ளிட்டவற்றின் மூலம் இவி புரட்சியின் ஒரு பெரிய பகுதியாகவும், தூய்மையான இந்தியாவிற்கு பங்களிப்பாகவும் இருப்போம்." என்றார். இந்த பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனத்திற்கு சொந்தமான தொழிற்சாலை முதல் வருடத்தில் வருடத்திற்கு 30 ஆயிரம் வாகனங்களை தயாரிக்கக்கூடியதாக உள்ளது. இதனை அடுத்த வருடத்தில் 1 லட்சங்களாக அதிகரித்து கொள்ளலாமாம்.

போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்குவோர் சார்ஜ் செய்ய பேட்டரி-மாற்று நிலையங்கள் மற்றும் P2P சார்ஜிங் பார்ட்னர்களுடன் நிஸுகி டெக்னாலஜிஸ் நிறுவனம் கூட்டணி சேர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் கையில் எடுத்து செல்லக்கூடிய பேட்டரி பொருத்தப்படுவதால், இவற்றை வீட்டு உபயோக 220-வோல்ட் மின்சாரத்தின் மூலமாகவே கூட சார்ஜ் ஏற்றலாம்.

போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

இதுகுறித்து போய்ஸ் ஸ்கூட்டர்ஸ் பிராண்டின் மேலதிகாரி பாராஸ் பெலண்டோர் கருத்து தெரிவிக்கையில், "தொழில்துறையின் பொருளாதாரத்திற்கு போய்ஸ் ஒரு உதாரணமாக இருக்க விரும்புகிறது. லித்தியம் இரும்பு பேட்டரிகளை அவைகளின் இரண்டாவது ஆயுட்காலத்திற்கும் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் இவி சுற்றுச்சூழல் அமைப்போடு இயங்க விரும்புகிறோம்.

போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

லித்தியம்-இரும்பு பேட்டரிகள் அவற்றின் மொத்த ஆயுட்காலத்தையும் அடைந்த பின்னரே அவை மறுசுழற்சி செய்யப்படும்" என தெரிவித்தார். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன பயன்பாடு கடந்த சில வருடங்களில் மிக நல்லபடியாகவே முன்னேற்றம் கண்டுள்ளது. அதிலிலும் குறிப்பாக, எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எதிர்பார்த்ததை காட்டிலும் விரைவாகவே வளர்ச்சி கண்டுள்ளது.

போய்ஸ் பிராண்டின் என்எக்ஸ்120 மற்றும் கிரேஸ் இ-ஸ்கூட்டர்கள்!! பேட்டரியை கையிலும் எளிதாக எடுத்து செல்லலாம்!

இதன் காரணமாக குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிப்பில் ஒவ்வொரு வருடத்திலும் போய்ஸ் ஸ்கூட்டர்ஸ் போல பல இவி ஸ்டார்ட்-அப் பிராண்ட்கள் களம்புகுந்து வருகின்றன. இந்த வகையில் சில வருடங்களுக்கு முன்பு இவி பிராண்டாக அறிமுகமான ஏத்தர் எனர்ஜி அதன் 450எக்ஸ் என்ற செயல்திறன்மிக்க இ-ஸ்கூட்டரின் தயாரிப்பில் 25 ஆயிரம் என்கிற மைல்கல்லை வெற்றிக்கரமாக கடந்துள்ளது.பெங்களூரை தலைமையிடமாக கொண்டிருப்பினும், ஏத்தர் எனர்ஜி நிறுவனத்திற்கு நமது தமிழகத்தில், ஓசூரில்தான் தொழிற்சாலை உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, March 11, 2022, 19:25 [IST]
English summary
Poise introduces NX-120 and Grace e-scooters with portable batteries.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+