இந்த மழைய நம் பைக் தாங்குமா தெரியல! ஆனா இத மட்டும் செஞ்சீங்க என்னமாதிரியான மழையா இருந்தாலும் அசால்ட் பண்ணிரும்

வரும் மழை காலத்துக்கு ஏற்றவாறு நம்முடைய பைக்கை தயார் செய்வது எப்படி என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். தமிழகத்தை மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில் இருசக்கர வாகன பயன்பாட்டாளர்களுக்கு உதவும் விதமாக இந்த பதிவை வெளியிட்டுள்ளோம்.

ஏற்கனவே வெளுத்து வாங்கிட்டு இருக்கு இந்த மழை... இதுல ரெட் அலர்டு வேற விட்டிருக்காங்க... இந்த சூழல்ல நம்ம டூ-வீலரை எப்படி பாதுகாக்குறது?

அந்த பக்கம் பாத்தாலும் ஜோனு மழை பெய்யுது, இந்த பாத்தாலும் ஜோனு மழை பெய்யுது. இப்படியாக சொல்ல வேண்டியதாயிருச்சு நம்ம தமிழக மக்களின் நிலைமை. வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதி வலுவடைந்து, தமிழகம், புதுச்சேரியை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளுத்து வாங்கிட்டு இருக்கு இந்த மழை... இதுல ரெட் அலர்டு வேற விட்டிருக்காங்க... இந்த சூழல்ல நம்ம டூ-வீலரை எப்படி பாதுகாக்குறது?

ஏற்கனவே மழை தழிகத்தை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், இன்னும் மழை தீவிரமடைய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருக்கின்றது. அதேநேரத்தில், முன்னதாகவே ஆங்காங்கே மழை வெள்ள நீர் தமிழகத்தைச் சூட தொடங்கிவிட்டது. இதனால் வாகன ஓட்டிகள் கடுமையான சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

ஏற்கனவே வெளுத்து வாங்கிட்டு இருக்கு இந்த மழை... இதுல ரெட் அலர்டு வேற விட்டிருக்காங்க... இந்த சூழல்ல நம்ம டூ-வீலரை எப்படி பாதுகாக்குறது?

பலர் இந்த மழையில் இருந்து தங்களுடைய வாகனங்களை எப்படி பாதுகாப்பது என்கிற சிந்தனையில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்த மாதிரியான சிந்தனையைக் கொண்டிருப்போர்களுக்கு உதவும் விதமாகவே இந்த பதிவைத் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். குறிப்பாக, இந்த மழைக் காலத்திற்கு ஏற்றதாக இருசக்கர வாகனத்தை மாற்றுவது என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஏற்கனவே வெளுத்து வாங்கிட்டு இருக்கு இந்த மழை... இதுல ரெட் அலர்டு வேற விட்டிருக்காங்க... இந்த சூழல்ல நம்ம டூ-வீலரை எப்படி பாதுகாக்குறது?

முன்கூட்டியே சர்வீஸ் செய்தல்:

மழை காலம் தொடங்கும் முன்னரே மோட்டார்சைக்கிளை சர்வீஸ் செய்துவிட வேண்டும். ஏற்கனவே இருக்கும் சிக்கல் மழைக் காலத்தில் இன்னும் பல மடங்காக மாற வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலைத் தவிர்க்க மழைக் காலம் தொடங்கும் முன்னரே சர்வீஸ் செய்வது நல்லது. இது தடையில்லா பயணத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும்.

ஏற்கனவே வெளுத்து வாங்கிட்டு இருக்கு இந்த மழை... இதுல ரெட் அலர்டு வேற விட்டிருக்காங்க... இந்த சூழல்ல நம்ம டூ-வீலரை எப்படி பாதுகாக்குறது?

இதேபோல் மின்சாதனங்கள் அனைத்தும் நல்ல நிலையில் வேலை செய்கிறதா என்பதை ஆராய வேண்டும். இதுமட்டுமின்றி, ஸ்பார்க் பிளக்குகளையும் ஒரு முறை சரிபார்த்துவிடுங்கள். மழைக் காலத்தில் விரைவில் பாதிக்கப்படும் ஓர் கருவியாக ஸ்பார்க் பிளக் இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக டயர்களையும் ஒரு செக் செய்துவிடுங்கள்.

ஏற்கனவே வெளுத்து வாங்கிட்டு இருக்கு இந்த மழை... இதுல ரெட் அலர்டு வேற விட்டிருக்காங்க... இந்த சூழல்ல நம்ம டூ-வீலரை எப்படி பாதுகாக்குறது?

வழுவழுப்பான டயர்கள் இருசக்கர வாகனத்தில் இருக்குமானால் பெரும் ஆபத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருக்கின்றோம் என்றே அர்த்தம். சின்ன சின்ன திருப்பங்களை மிகவும் ஆபத்தானதாக தேய்ந்த டயர்கள் மாற்றிவிடும். ஆகையால், டயர்களையும் முன்கூட்டியே மாற்றிவிடுவது நல்லது. தற்போது ஈரமான சாலையை சமாளிக்கும் திறன் கொண்ட டயர்கள் சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன.

ஏற்கனவே வெளுத்து வாங்கிட்டு இருக்கு இந்த மழை... இதுல ரெட் அலர்டு வேற விட்டிருக்காங்க... இந்த சூழல்ல நம்ம டூ-வீலரை எப்படி பாதுகாக்குறது?

செயின் லூப்ரிகேட்:

நீர் மற்றும் ஈரப்பதம் இரண்டுமே துருவிற்கு வழிவகுக்கின்றன. முக்கியமாக மோட்டார்சைக்கிளில் விரைவில் துருவிற்கு இரையாகக் கூடியதாக செயின் இருக்கின்றது. இதை பாதுகாக்காக முன்கூட்டியே செயினை சுத்தம் செய்வது மற்றும் லூப்ரிகேட் செய்வது நல்லது. இது தேவையற்ற இரைச்சலைக் குறைக்கவும் வழிவகுக்கும். இதுமட்டுமின்றி, ஸ்மூத்தான இயக்கத்திற்கும் வழி வகுக்கும்.

ஏற்கனவே வெளுத்து வாங்கிட்டு இருக்கு இந்த மழை... இதுல ரெட் அலர்டு வேற விட்டிருக்காங்க... இந்த சூழல்ல நம்ம டூ-வீலரை எப்படி பாதுகாக்குறது?

பிரேக் டெஸ்ட்:

ரைடை தொடங்கும் முன் ஒரு முறை பிரேக்கிங் சிஸ்டத்தை சோதித்து பார்க்க வேண்டும். இதனை காலியான சாலையை தேர்வு செய்வது மிக சிறந்தது. மழைக் காலத்தில் விரைவில் தோல்வியடையக் கூடிய அம்சங்களில் பிரேக்கிங் சிஸ்டமும் ஒன்று. எனவேதான் இதை பயணத்தைத் தொடங்கும்முன் சோதித்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.

ஏற்கனவே வெளுத்து வாங்கிட்டு இருக்கு இந்த மழை... இதுல ரெட் அலர்டு வேற விட்டிருக்காங்க... இந்த சூழல்ல நம்ம டூ-வீலரை எப்படி பாதுகாக்குறது?

லீக்கை செக் செய்யவும்:

மிக பழைய வாகனங்களில் ஏற்படும் மிகப் பெரிய சிக்கல்களில் லீக்கேஜும் ஒன்று. நீங்கள் பயன்படுத்தும் வாகனத்தில் இதுமாதிரியான ஓர் சிக்கல் இருக்கின்றது என்றால் உடனடியாக அதை சரிசெய்வதே நல்லது. மழைக் காலத்தில் அனைத்து பாகங்களும் எளிதில் ஈரமாகக் கூடும். இந்த மாதிரியான நேரத்தில் லீக்கேஜ் உள்ள பகுதியின் வாயிலாக மழை நீர் உட்புக நேரிடலாம். எனவே உடனடியாக அதை சரி செய்வதே மிக சிறப்பானது.

ஏற்கனவே வெளுத்து வாங்கிட்டு இருக்கு இந்த மழை... இதுல ரெட் அலர்டு வேற விட்டிருக்காங்க... இந்த சூழல்ல நம்ம டூ-வீலரை எப்படி பாதுகாக்குறது?

காற்றை நிரப்பி வச்சுக்கோங்க:

வழக்கத்தைவிட ஐந்து பாயிண்டுகள் கூடுதலாக காற்றை நிரப்ப வேண்டும். இதனால், ஆக்குவாபிளானிங் அல்லது ஹைட்ரோபிளானிங்கில் இருந்து தப்பிக்க முடியும். மழை நீரால் ஏற்படக் கூடிய மிக ஆபத்தான சிக்கலே ஆக்குவாபிளானிங் ஆகும். தரைக்கும், டயருக்கும் இடையில் இருக்கும் தொடர்பை மழை நீர் நிறைந்த சாலைகள் துண்டிக்கின்றன. இதனால் வாகனங்கள் சரிந்து விழலாம். இந்த நிலையையே ஆக்குவாபிளானிங் என்றழைக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Friday, November 11, 2022, 16:14 [IST]
English summary
Prepare your bike for rainy days
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+