ஒற்றை சார்ஜில் 510கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்! இதுமட்டும் சேலுக்கு வந்துச்சு எல்லா பைக்கிற்கும் சமாதிகட்டிடும்!

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ தூரம் பயணிக்கக் கூடிய இ-சைக்கிள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்... இது மட்டும் விற்பனைக்கு வந்துச்சு அனைத்து பைக்குகளுக்கும் சமாதி கட்டிடும்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக வேகமாக பிரபலமடைந்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழ்நிலையில் ஒட்டுமொத்த மக்களின் கவனத்தையும் தன் வசம் ஈர்க்கும் வகையில் ஓர் அட்டகாசமான இ-சைக்கிள் பற்றிய தகவல் வெளி வந்திருக்கின்றது.

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்... இது மட்டும் விற்பனைக்கு வந்துச்சு அனைத்து பைக்குகளுக்கும் சமாதி கட்டிடும்!

இந்த இ-சைக்கிள் ஒற்றை சார்ஜில் 512 கிமீ ரேஞ்ஜை வழங்குமாம். இந்த சூப்பரான திறன் காரணத்தினாலேயே பலரின் கவனத்தை அந்த இ-சைக்கிள் ஈர்த்துள்ளது. கொலராடோவைச் சேர்ந்த ஆப்ட்பைக் (OptBike) எனும் நிறுவனமே இந்த அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடிய இ-சைக்கிளை உருவாக்கியிருக்கும் நிறுவனம் ஆகும்.

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்... இது மட்டும் விற்பனைக்கு வந்துச்சு அனைத்து பைக்குகளுக்கும் சமாதி கட்டிடும்!

ஆர்22 எவரெஸ்ட் (R22 Everest) எனும் பெயரிலேயே இ-சைக்கிள் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. இந்த இ-சைக்கிளின் பெயருடன் எவரெஸ்ட் பெயரை சேர்ப்பதற்கு ஓர் காரணம் இருக்கின்றது. மவுண்டைன் பைக் வகையைச் சேர்ந்த இ-சைக்கிள் இது என்பைக் குறிக்கும் வகையிலேயே அதற்கு ஆர்22 எவரெஸ்ட் எனும் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றது.

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்... இது மட்டும் விற்பனைக்கு வந்துச்சு அனைத்து பைக்குகளுக்கும் சமாதி கட்டிடும்!

ஆர்22 எவரெஸ்ட் இ-சைக்கிளில் 3.26 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியின் எடை மட்டுமே 16 கிலோவாகும். அதிக எடையக் கொண்டது மட்டுமில்லைங்க இந்த பேட்டரி, அதிக ரேஞ்ஜை வழங்கக் கூடியதாகவும் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 510 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்... இது மட்டும் விற்பனைக்கு வந்துச்சு அனைத்து பைக்குகளுக்கும் சமாதி கட்டிடும்!

தற்போது விற்பனையில் இருக்கும் பெரும்பாலான எலெக்ட்ரிக் கார்களே ஓர் முழு சார்ஜில் 300 முதல் 400 கிமீ ரேஞ்ஜை மட்டுமே வழங்கும் வகையில் உள்ளன. அதேவேலையில், எலெக்ட்ரிக் டூ வீலர்கள் அதிகபட்சமாக 200 கிமீ வரை மட்டுமே ரேஞ்ஜ் தரக் கூடியதாக உள்ளன. இந்த மாதிரியான சூழலிலேயே ஓர் இ-சைக்கிள் மிக அதிக ரேஞ்ஜ் திறனுடன் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே உலக மக்களை அது கவரத் தொடங்கியிருக்கின்றது.

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்... இது மட்டும் விற்பனைக்கு வந்துச்சு அனைத்து பைக்குகளுக்கும் சமாதி கட்டிடும்!

இ-சைக்கிள் அதிகபட்சமாக மணிக்கு 58 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இந்த சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக ஆர்22 எவரெஸ்ட் இ-சைக்கிளில் 190 என்எம் டார்க் திறனை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இ-சைக்கிளின் ஒட்டுமொத்த எடை 72 கிலோவாகும். இதில், பெடல் வசதியும் வழங்கப்பட்டிருக்கின்றது.

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்... இது மட்டும் விற்பனைக்கு வந்துச்சு அனைத்து பைக்குகளுக்கும் சமாதி கட்டிடும்!

இதன் வாயிலாக பயணிக்கும்போது மணிக்கு 24 கிமீ வேகத்தில் செல்ல முடியும். மவுண்டைன் பைக் வகை இ-சைக்கிளாக இது இருந்தாலும் அனைத்து விதமான சாலைகளிலும் பயன்படுத்தும் வகையில் அதனை தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இ-சைக்கிளின் உருவாக்கத்தில் கார்பன்-ஃபைபர் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இத்துடன், ஸ்விங்கார்மும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்... இது மட்டும் விற்பனைக்கு வந்துச்சு அனைத்து பைக்குகளுக்கும் சமாதி கட்டிடும்!

மேலும், நீண்ட தூர பயணங்களைச் சமாளிக்கும் வகையில் சூப்பரான சஸ்பென்ஷன் செட்-அப், மிக சிறந்த பிரேக்கிங்கிற்காக டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, பேட்டரியின் அளவு, இ-சைக்கிள் செல்லும் வேகம் ஆகியவற்றை வெளிக்காட்டக் கூடிய எல்சிடி திரை உள்ளிட்ட அம்சங்களும் ஆர்22 எவரெஸ்ட் இ-சைக்கிளில் இடம் பெற்றிருக்கின்றன.

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்... இது மட்டும் விற்பனைக்கு வந்துச்சு அனைத்து பைக்குகளுக்கும் சமாதி கட்டிடும்!

இந்த சைக்கிளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றது. ஆனால், இது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காது என்பது குறிப்பிடத்தகுந்தது. கொலராடோ சந்தையில் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. அங்கு ஒவ்வொரு யூனிட்டும் சுமார் 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான விலையில் இ-சைக்கிள் விற்கப்பட இருக்கின்றது.

சிங்கிள் சார்ஜில் 510 கிமீ பயணிக்கும் இ-சைக்கிள்... இது மட்டும் விற்பனைக்கு வந்துச்சு அனைத்து பைக்குகளுக்கும் சமாதி கட்டிடும்!

சாலையே இல்லாத பகுதியிலும்கூட இந்த இ-சைக்கிளைக் கொண்டு பயணிக்க முடியும் என ஆப்ட்பைக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காக உலகின் முக்கியமான சிகரங்கள் சிலவற்றில் வைத்து இ-சைக்கிள் சோதனையோட்டம் செய்யப்பட்டிருக்கின்றது. இத்தகைய சூப்பரான வசதிக் கொண்ட இ-சைக்கிள் மிக குறைவான எண்ணிக்கையில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்க இருப்பது பலரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 30, 2022, 8:30 [IST]
English summary
R22 everest e cycle unveiled with 510 Km range
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+