விற்பனையும் ஜோர், உற்பத்தியும் ஜோர்! ராயல் என்பீல்டு கிளாசிக் 350 உரிமையாளர்கள் பெருமிதம் கொள்ளும் தருணம் இது!
ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் புகழ்மிக்க மோட்டார்சைக்கிள்களில் ஒன்றான கிளாசிக் 350 (Classic 350) உற்பத்தியில் புதிய மைல் கல்லை எட்டியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம், வாங்க.

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் தயாரித்து வரும் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக கிளாசிக் 350 (Classic 350) இருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளாகும். இந்தியர்கள் மத்தியில் இப்பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதன் விளைவாக இப்பைக் உற்பத்தியில் புதிய மைல் கட்டை எட்டியிருக்கின்றது.

ராயல் என்பீல்டு நிறுவனம் மிக சமீபத்தில் கிளாசிக் 350 பைக்கின் ஒரு லட்சமாவது யூனிட்டை உற்பத்தி செய்திருக்கின்றது. இப்பைக்கிற்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்து வருகின்ற காரணத்தினாலேயே இந்த புதிய உற்பத்தி மைல்கல்லை அது எட்டியிருக்கின்றது.

இந்த நிகழ்வு ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக் பயன்பாட்டாளர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. ஆகையால், இந்த புதிய உற்பத்தி சாதனையை ராயல் என்பீல்டு மட்டுமின்றி அதன் பயன்பாட்டாளர்களும் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றனர்.

நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மோட்டார்சைக்கிளாக காட்சியளிக்கும் கிளாசிக் 350 மாடலின் புதிய பதிப்பை கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதமே நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த குறுகிய கால கட்டத்திலேயே இப்பைக் ஒரு லட்சம் யூனிட் உற்பத்தி என்கிற சிறப்பை நிகழ்த்தியிருக்கின்றது.

இந்த பைக் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. அந்தவகையில், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், கொரியா, ஆஸ்திரேலியாக மற்றும் நியூசிலாந்து என பல நாடுகளில் கிளாசிக் 350 பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.

இந்த அனைத்து நாடுகளிலும் இப்பைக்கிற்கு நல்ல வரவேற்பே கிடைத்து வருகின்றது. மேலே பார்த்த நாடுகளுடன் புதிதாக மற்றுமொரு நாடும் இணைய இருக்கின்றது. இங்கிலாந்து நாட்டிலேயே மிக விரைவில் 'மேக் இன் இந்தியா கிளாசிக் 350' பைக் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஏற்கனவே இந்த நாட்டில் புக்கிங் பணிகள் தொடங்கிவிட்டன.

மிக விரைவில் டெலிவரி பணிகளும் அந்நாட்டில் தொடங்கப்பட இருக்கின்றன. வரும் மார்ச் மாதத்தில் இருந்து டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக் பிரியர்களைக் கவலையில் ஆழ்த்தும் வகையில் அதன் விலை மிக மிக சமீபத்தில் உயர்த்தியது. இதனால், பைக்கின் ஆரம்ப விலை சற்றே உயர்ந்தது.

வேரியண்ட் வாரியாக கிளாசிக் 350 பைக்கின் விலை பட்டியல் இதோ:
ரெட்டிட்ச் (Redditch): ரூ. 1,87,246
ஹல்சியோன் (Halcyon): ரூ. 1,95,125
சிக்னல்கள் (Signals): ரூ. 2,07,539
டார்க் (Dark): ரூ. 2,14,743
குரோம் (Chrome): ரூ. 2,18,450

ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக்கில் 349 சிசி திறன் கொண்ட ஏர்/ஆயில் கூல்டு எஞ்ஜினை பயன்படுத்தியிருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஐந்து ஸ்பீடு கியர்பாக்ஸில் இந்த திறனை கிளாசிக் 350 வெளியேற்றும்.

தனது புத்தம் புதிய ஜே-பிளாட்பாரத்தை பயன்படுத்தியே ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கை உற்பத்தி செய்திருக்கின்றது. இந்த பிளாட்பாரத்தின் வாயிலாகவே நடுத்தர டிஜிட்டல் திறன் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ட்ரிப்பர் நேவிகேஷன் உள்ளிட்ட அம்சங்களை புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கில் ராயல் என்பீல்டு வழங்கியிருக்கின்றது.


Click it and Unblock the Notifications








