வெறும் ரூ68 ஆயிரத்திற்கு ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பைக்... ஆனா ஒரே ஒரு சிக்கல் மட்டும் இருக்குது!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் ரூ67,990க்கு ஸ்கேல் மாடல் ராயல் என்ஃபீல்டு பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை வாங்க மட்டுமே முடியும் ஓட்ட முடியாது. அப்படி என் பைக் இது? விரிவாகக் காணலாம் வாருங்கள்.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தனது ரசிகர்களுக்காக ரைடர் மேனியா என்ற சந்திப்பை நடத்தும். இந்தாண்டு அந்நிறுவமன் கடந்த நவம்பர் 18-20ம் தேதி வரை கோவாவில் இந்த சந்திப்பை நடத்தியுள்ளது.

இந்த சந்திப்பின்போது ஏராளமான ரசிகர்கள் தங்கள் ராயல் என்ஃபீல் பை பைக்கில் வந்து கொண்டனர். இந்த சந்திப்பின்போது ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய தயாரிப்பான சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650) என்ற பைக்க அறிமுகப்படுத்தியது. இந்த தகவல் எல்லாம் நமக்கும் தெரியும். பலர் இந்த பைக் குறித்த தகவல்கள், தொழிற்நுட்ப விஷயங்களை எல்லாம் படித்து அறிந்திருப்பீர்கள்
இதே சந்திப்பில் ராயல் என்ஃபீல்டு நிறுவமன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பைக்கின் 1:3 ஸ்கேல் மாடலை அறிமுகப்படுத்தியது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இதை கிளாசிக் கலெக்டெபிள் என அறிவித்துள்ளது. இதன் விலை ரூ67,990 என்றும் அதை அந்த ரைடர் மேனியாவில்புக் செய்பவர்கள் ரூ2000 முன் பணம் கெடுத்து இதை புக் செய்யலாம் என்றும் அறிவித்தது. மொத்தம் 18 கலர் ஆப்ஷன்களில் இந்த ஸ்கேல் மாடல் பைக் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த பைக் மற்ற சாதாரண பைக் போல கிடையாது. இந்த பைக்கை வாங்கலாமே தவிர ஓட்ட முடியாது. ஸ்கேல் மாடல் என்பது உண்மையான பைக் போல தோற்றமளிக்கும் ஒரு பொம்மை. கார் மற்றும் பைக் தயாரிப்பாளர்கள் தங்களது கார் மற்றும் பைக்கை தயாரிக்கும் போது இப்படியான ஸ்கேல் மாதிரிகளைத் தயாரித்து அதன் லுக் எப்படி இருக்கிறது என்பதை நிச்சயம் பார்ப்பார்கள்.
இதை பார்க்க அச்சு அசல் ஒரிஜினல் போல இருக்கும். இதன் உயரம், நீளம், அகலம் எல்லாம் அச்சு அசல் உண்மையான பைக் எப்படி இருக்குமோ அப்படி தான் இருக்கும். ஆனால் இது முற்றிலும் பொம்மை தான். இதை வாங்கி ஒரு கலெக்ஷனிற்காக வைத்துக்கொள்ளலாம். ஆனால் பயன்படுத்த முடியாது. ஒரு பொம்மையாக காட்சி பொருளாக மட்டுமே வைத்துக்கொள்ள முடியும்.
இந்த ஸ்கேல் மாடல் கிளாசிக் 500 பைக்கின் 1:3 மாடல் இது ஒரிஜினல் அளவை விட 3ல் ஒரு பங்குதான் இருக்கும். ஸ்கேல் மாடல் 8.5 கிலோ எடை கொண்டது. இதில் வயர் ஸ்போக் வீல்கள், பிஸ்சூட்டர் எக்ஸாஸ்ட், ரைடர் மட்டும் அமரக்கூடிய ஸ்பிரிங் சீட் வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் உண்மையான பைக்கின் உதிரிப்பாகங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இது மொத்தம் ரெட்டிட்ச் ரெட், டியல் கிரீன், க்ரோம் பிளாக், கன் க்ரே, மெரூன் க்ரோம், பேட்டில் கிரீன், டெசர்ட் ஸ்டிரோம் மற்றும் ஜெட் பிளாக் ஆகிய நிறங்களில் வருகிறது. இது லிமிடெட் எடிசனாக ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பைக்கின் ரிப்ளிக்காவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும். இதே போல மினி இன்டர்செப்டர் மற்றும் கான்டினென்டல் ஜிடி ஆகிய பைக்குகளும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








