க்யூல நிக்கபோறாங்க! பெரிதும் எதிர்பார்க்கப்படும் புதுமுக 650சிசி பைக்கை இன்று அறிமுகம் செய்யும் ராயல்என்பீல்டு

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650) பைக்கை இன்று (நவம்பர் 18) இந்தியாவில் வெளியீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஹேட்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா போங்க... இந்திய இளைஞர்களின் கனவு பைக்கை நாளை இந்தியாவில் வெளியீடு செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

சில தினங்களுக்கு முன்னர் இத்தாலியின் மிலன் பகுதியில் இஐசிஎம்ஏ வாகன கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் உலகளவிலான வாகன உற்பத்தியாளர்கள் பங்கேற்று தங்களின் புதுமுக மற்றும் வருங்கால வாகன மாடல்களை காட்சிப்படுத்தினர். அந்தவகையில், இக்கண்காட்சியில் கலந்துக் கொண்ட ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை காட்சிப்படுத்தியது.

ஹேட்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா போங்க... இந்திய இளைஞர்களின் கனவு பைக்கை நாளை இந்தியாவில் வெளியீடு செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

காட்சிப்படுத்துதலைத் தொடர்ந்து இவ்வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரும் விதமாக நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பைக்கை லிஸ்ட் செய்தது. இது பைக்கின் இந்திய வருகையை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது. நிறுவனத்தின் இந்த நடவடிக்கைய ராயல் என்பீல்டு இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

ஹேட்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா போங்க... இந்திய இளைஞர்களின் கனவு பைக்கை நாளை இந்தியாவில் வெளியீடு செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

இந்த நிலையிலேயே இந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும் வகையில் நிறுவனம் இன்று (நவம்பர் 18) அதிகாரப்பூர்வமாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரைடர் மேனியா 2022 வில் இப்பைக்கை வெளியீடு செய்ய இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஹேட்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா போங்க... இந்திய இளைஞர்களின் கனவு பைக்கை நாளை இந்தியாவில் வெளியீடு செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கில் 648 சிசி பாரல்லல் ட்வின் ஏர்/கூல்டு மோட்டாரையே பயன்படுத்தியிருக்கின்றது. இந்த மோட்டாரையே நிறுவனம் அதன் இரட்டையர்கள் பைக் மாடலில் பயன்படுத்தியிருக்கின்றது. கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 ஆகியவையே நிறுவனத்தின் இரட்டையர்கள் பைக் மாடல்களாகும்.

ஹேட்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா போங்க... இந்திய இளைஞர்களின் கனவு பைக்கை நாளை இந்தியாவில் வெளியீடு செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

இவற்றில் பயன்படுத்தப்பட்டிருக்கும் இந்த பாரல்லல் ட்வின் மோட்டார் அதிகபட்சமாக 46.2 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டவை ஆகும். இதே திறனே சூப்பர் மீட்டியோர் 650 பைக்கும் வெளிப்படுத்தும். சஸ்பென்ஷனுக்காக இப்பைக்கில் யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், டூயல் ஷாக் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹேட்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா போங்க... இந்திய இளைஞர்களின் கனவு பைக்கை நாளை இந்தியாவில் வெளியீடு செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

இவற்றுடன் சேர்த்து பிரேக்கிங் வசதிக்காக 320 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், 300 மிமீ டிஸ்க் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக ஏபிஎஸ் அம்சமும் சூப்பர் மீட்டியோர் 650-இல் வழங்கப்பட இருக்கின்றது. தொடர்ந்து பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக 19 அங்குல வீல் முன் பக்கத்திலும், 16 அங்குல வீல் பின் பக்கத்திலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஹேட்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா போங்க... இந்திய இளைஞர்களின் கனவு பைக்கை நாளை இந்தியாவில் வெளியீடு செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

இத்தனை சூப்பரான அம்சங்களுடன் சேர்த்து ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்டேசன் இப்பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதில் டிஜிட்டல் அனலாகவும், மற்றொன்று ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டமாகவும் செயல்படும். இந்த ட்ரிப்பர் நேவிகேஷன் டர்ன்-பை-டர்ன் வழித் தடம் பற்றிய தகவலை வழங்கும். இதேபோல், டிஜிட்டல் அனலாக் வாயிலாகவும் பன்முக தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும்.

ஹேட்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா போங்க... இந்திய இளைஞர்களின் கனவு பைக்கை நாளை இந்தியாவில் வெளியீடு செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

ஸ்பீடோ மீட்டர், ஓடோமீட்டர், ட்ரிப் மீட்டர், ஃப்யூவல் கேஜ் ஆக அது செயல்படும். இதுபோன்று பன்முக சிறப்பு வசதிகளுடன் சூப்பர் மீட்டியோர் 650 மோட்டார் சைக்கிள் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த க்ரூஸர் ரக பைக் விற்பனைக்கு வரும்பட்சத்தில் தற்போது இந்த பிரிவில் விற்பனையில் இருக்கும் அனைத்து மோட்டார்சைக்கிள்களுக்கும் மிக சிறந்த போட்டியாளனாக அது மாறும்.

ஹேட்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா போங்க... இந்திய இளைஞர்களின் கனவு பைக்கை நாளை இந்தியாவில் வெளியீடு செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

மிகக் குறைவான வீல்பேஸில் இப்பைக்கை நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. 1,500 மிமீ வீல்பேஸிலேயே சூப்பர் மீட்டியோர் 650 பைக் கொண்டிருக்கின்றது. புதிய யுக்தியை இப்பைக்கின் உருவாக்கத்தின்போது கையாண்டிருந்தாலும், மீட்டியோர் 350 பைக்கை பிரதிபலிக்கும் வகையிலேயே அது இருக்கின்றது. துள்ளியமாக கூற வேண்டுமானால் மீட்டியோர் 350இன் மூத்த சகோதரனாக மீட்டியோர் 650 காட்சியளிக்கியிருக்கின்றது.

ஹேட்டர்ஸ் எல்லாம் கொஞ்சம் ஓரமா போங்க... இந்திய இளைஞர்களின் கனவு பைக்கை நாளை இந்தியாவில் வெளியீடு செய்கிறது ராயல் என்பீல்டு நிறுவனம்!

ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் ஆகிய இருவிதமான ஸ்டைல்களில் இப்பைக்கை ராயல் என்பீல்டு விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் ஸ்டாண்டர்டு தேர்வை ஐந்து விதமான நிறங்களிலும், டூரர் தேர்வை இரு விதமான நிற தேர்விலும் அது விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதுமட்டுமின்றி, இதன் டூரர் வேரியண்டில் உயரமான விண்ட் ஸ்கிரீன், பில்லியன் ரைடருக்கான பேக்ரெஸ்ட், டூயல் இருக்கை அமைப்பு, பேனியர்கள், டூரிங் ஹேண்டில் பார் மற்றும் பெரிய ஃபூட் பெக்குகள் என தனித்துவமான அம்சங்கள் பைக்குகள் வழங்கப்பட்டிருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 17, 2022, 18:39 [IST]
English summary
Re unveiling super meteor 650 india tomorrow
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+