100க்கு 78 டூவீலர்கள் எலெக்டரிக் வாகனமாக மாறும் எப்பொழுது தெரியுமா?

ரெட்சீர் என்ற அமைப்பு இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மற்றும் எதிர்கால எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு குறித்து ஆய்வு ஒன்றை நடத்தினர். பல தரப்பட்ட தகவல்களை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அந்த ஆய்வில் என்ன தெரிய வந்தது? எதிர்காலத்தில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு எப்படி இருக்கும் ? தற்போது மக்கள் ஏன் அதிகமாக எலெக்டரிக் வாகனங்களை வாங்க நினைக்கிறார்கள் ? உள்ளிட்ட அந்த ஆய்வு குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

100க்கு 78 டூவீலர்கள் எலெக்டரிக் வாகனமாக மாறும் எப்பொழுது தெரியுமா ?

இந்தியாவில் சமீப காலமாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் டூவீலர் மற்றும் ஆட்டோக்களில் முழுமையாக இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் ஒரு ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் வருங்காலங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாடு எப்படி இருக்கும். எதன் காரணமாக மக்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குகிறார்கள் என ஆய்வு நடத்தப்பட்டது.

100க்கு 78 டூவீலர்கள் எலெக்டரிக் வாகனமாக மாறும் எப்பொழுது தெரியுமா ?

ரெட்சீர் என்ற அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் எலெக்டரிக் வாகனங்களைப் பெரிய அளவில் ஊக்குவிக்கும் வகையில் வெளியாகியுள்ளது. அதன்படி தற்போது நிலவி வரும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கா க்ரேஷ் அப்படியே நீடித்தால் வரும் 2030ம் ஆண்டு சாலையில் ஓடும் 100ல் 78 டூவீலர்கள் எலெக்ட்ரிக் டூவீலர்களாகவே இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

100க்கு 78 டூவீலர்கள் எலெக்டரிக் வாகனமாக மாறும் எப்பொழுது தெரியுமா ?

ஆனால் இந்த நிலையை அடை வேண்டும் என்றால் வாடிக்கையாளர்களுக்கு எலெக்டரிக் ஸ்கூட்டர் மீது இருக்கும் இந்த மோகம் மட்டும் போதாது. எலெக்ட்ரிக் வாகனங்களால் மக்களுக்கு நேரடியாகப் பலன் கிடைப்பதை அவர்கள் அறிய வேண்டும். அரசு எலெக்டரிக் வாகன விற்பனைக்கான பல திட்டங்களைக் கொண்டு வர வேண்டும். பேட்டரி தொழிற்நுட்பம் வளர்ச்சியடைந்து அதிக ரேஞ்ச் கொண்ட வாகனங்கள் வெளியாக வேண்டும். எல்லாவற்றையும் விட முக்கியமாக சார்ஜிங் நிலையங்கள் அதிகமாக அமைக்கப்பட வேண்டும் என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

100க்கு 78 டூவீலர்கள் எலெக்டரிக் வாகனமாக மாறும் எப்பொழுது தெரியுமா ?

இந்த எலெக்டரிக் வாகனங்களை மக்கள் ஆர்வமுடன் தொடர்ந்து வாங்க வேண்டும் என்றால் கம்பஷன் இன்ஜின் வாகனங்களை வாங்கி மக்கள் அதற்காகச் செலவு செய்வதை விட எலெக்டரிக் வாகனங்களை வாங்குவதால் மக்களுக்குக் குறைந்தது. 20-30 சதவீதமாவது லாபம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் மக்கள் உத்வேகமாக மாறுவார்கள்.

100க்கு 78 டூவீலர்கள் எலெக்டரிக் வாகனமாக மாறும் எப்பொழுது தெரியுமா ?

எலெக்ட்ரிக் வாகனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே சந்தைக்கு வந்துவிட்டாலும் இப்பொழுதுதான் இந்த வாகனத்திற்கான க்ரேஷ் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தில் கொண்டு வரப்பட்ட மேம்பாடு தான். முன்னர் தயாரிக்கப்பட்ட எலெக்டரிக் ஸ்கூட்டர்கள் போதுவான அளவு பெர்ஃபாமென்ஸ் செய்யவில்லை. அதைப் பயன்படுத்தப் பல சிக்கல்கள் இருந்தது. ஆனால் இன்று அப்படியல்ல.

100க்கு 78 டூவீலர்கள் எலெக்டரிக் வாகனமாக மாறும் எப்பொழுது தெரியுமா ?

தற்போது எலெக்டரிக் ஸ்கூட்டரில் இருக்கும் இன்டராக்டிவ் டேஷ்போர்டு, கனெக்டிவிட்டி தொழிற்நுட்பம், டிரைவிங் அம்சங்கள், ஆகியன எலெக்டரிக் டூவீலர் விற்பனையை அதிகரித்துள்ளது. இது மட்டுமல்ல கம்பஷன் இன்ஜின் வாகனங்களை விட எலெக்ட்ரிக் வாகனங்களில் இன்ஸ்டன்ட் ஆக்ஸிலரேஷன் இருப்பதும் முக்கியமான காரணம் எனச் சொல்லப்படுகிறது.

100க்கு 78 டூவீலர்கள் எலெக்டரிக் வாகனமாக மாறும் எப்பொழுது தெரியுமா ?

இன்று சந்தையில் குறைந்த வேகத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களே அதிகமாக இருக்கிறது. குறைந்த வேகம் என்றால் அதிகபட்சம் 40கி.மீ வேகத்தில் செல்லும் வாகனங்கள் அதிகம் இருக்கின்றன. இதுவும் 80 கி.மீ வரை தான் மைலேஜை தருகிறது. இது நகர்ப்புறங்களிலும் வயதானவர்கள், பெண்கள் எனக் குறிப்பிட்ட செக்மெண்ட் மக்களுக்கு மட்டுமே தேவைப்படும் வாகனமாக இருக்கிறது.

100க்கு 78 டூவீலர்கள் எலெக்டரிக் வாகனமாக மாறும் எப்பொழுது தெரியுமா ?

தற்போது அதிக வேகத்தில் அதாவது கம்பஷன் இன்ஜினை போன்ற வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இன்று மார்கெட்டிற்கு வந்துவிட்டன. ஆனால் இந்த மாதிரியான வாகனங்களை பெரும்பாலும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தான் தயாரிக்கின்றன. பாரம்பரிய நிறுவனங்கள் அதிக வேகத்தில் செல்லும் ஸ்கூட்டர்களை தயாரிக்கத் தயக்கம் காட்டி வருகின்றன.

100க்கு 78 டூவீலர்கள் எலெக்டரிக் வாகனமாக மாறும் எப்பொழுது தெரியுமா ?

எலெக்ட்ரிக் வாகனங்களில் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க சார்ஜிங் ஸ்டேஷன்களும் அதிகமாக வேண்டும். எல்லா மக்களாலும் எல்லா நேரங்களிலும் வீட்டிலேயே சார்ஜ் போட்டு வர முடியாது. பொதுவான சார்ஜிங் ஸ்டேஷன்கள் இருந்தால் தான் எலெக்ட்ரிக் வாகனங்களை மக்கள் அதிகம் விரும்புவார்கள். தற்போது இந்தியாவில் 3000 சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ள அதில் 6 சார்ஜிங் ஸ்டேஷன்களில் 1000 வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் அளவிற்கு வசதி இருக்கிறது. இந்த ஆய்வு சொல்லும் விஷயம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2022, 10:42 [IST]
English summary
Redseer study says that electric two wheeler sales in India grow by 78 percent
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+