மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் 650 ட்வின் பைக்குகளுக்கு நாட்டில் மீண்டும் நல்ல வரவேற்பு கிடைக்கத் தொடங்கியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

இன்டர்செப்டர் 650 (Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT650) இவையே ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் இரட்டையர்கள் இருசக்கர வாகனமாகும். தோற்றத்தில் லேசாக வேறுபட்டுக் காணப்பட்டாலும், அவை எஞ்ஜின் மற்றும் பிற சிறப்பம்சங்கள் விஷயத்தில் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. எனவேதான் இவற்றை நிறுவனத்தின் இரட்டையர்கள் என அழைக்கப்படுகின்றது.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

இப்பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் 2018ம் ஆண்டிற்கு பின்னரே நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அன்றைய நாளில் இருந்து இப்போது வரை நிறுவனத்தின் மிக சிறப்பான விற்பனையைப் பெறும் பைக்குகளாக இவை இருக்கின்றன. குறிப்பாக, வெளிநாடுகளில் ஏகபோகமான வரவேற்பு இந்த இரட்டையர்களுக்குக் கிடைத்து வருகின்றது.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

இந்த நிலையிலேயே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இந்த ட்வின் பைக்குகள் மிக சூப்பரான விற்பனை வளர்ச்சியை உள் நாட்டு விற்பனையில் போன மாத பிப்ரவரி மாதம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2,469 யூனிட்டுகள் வரை விற்பனையாகியிருக்கின்றன. கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 ஆகிய இரண்டு மாடல்களும் சேர்ந்து பெற்ற விற்பனை எண்ணிக்கை இதுவாகும்.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

இந்த விற்பனை எண்ணிக்கையானது கடந்த 2021 பிப்ரவரியைக் காட்டிலும் 769.37 சதவீதம் அதிகம் விற்பனையாகும். இத்தகைய சூப்பரான விற்பனை வளர்ச்சியையே 2022 பிப்ரவரியில் 650 ட்வின் பைக்குகள் பெற்றிருக்கின்றன. 2021 பிப்ரவரியில் வெறும் 284 யூனிட்டுகள் மட்டுமே அவை விற்பனையாகியிருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

கடந்த 2022 ஜனவரியிலும் இவை 99.43 சதவீதம் விற்பனை வளர்ச்சியைப் பெற்றன. அந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,238 யூனிட்டுகள் விற்பனையாகியிருந்தன. இந்த நிலையிலேயே தொடர் விற்பனையை வளர்ச்சியை உறுதிப்படுத்தும் வகையில் 2022 பிப்ரவரியிலும் சூப்பரான விற்பனை எண்ணிக்கையை கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டர் 650 இரட்டையர்கள் பெற்றிருக்கின்றன.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

இத்தகைய சூப்பரான விற்பனை வளர்ச்சிக்கு ராயல் என்பீல்டு நிறுவனம், இரு பைக் மாடல்களையும் மிக சிறப்பானதாக உருவாக்கியிருப்பதே முக்கிய காரணமாக இருக்கின்றது. அது மட்டுமில்லைங்க ட்வின் சிலிண்டர்களுடன் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மோட்டார்சைக்கிள்களாகவும் இவை காட்சியளிக்கின்றன.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

இதுபோன்று இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன, இந்த இரட்டையர்கள் பைக்குகள் இந்தியா மற்றும் உலக நாடுகளில் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியைப் பெறுவதற்கு. கான்டினென்டல் ஜிடி 650, இன்டர்செப்டர் 650 இவ்விரண்டும் இரட்டையர்களாக இருந்தாலும், அவை, இயக்க அனுபவம் மற்றும் ரைடிங் எர்கோனாமிக்ஸ் விஷயத்தில் மாறுபட்டதாகக் காட்சியளிக்கின்றன.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

இதேபோல், இருக்கை அமைப்பு, ப்யூவல் டேங்க் டிசைன் மற்றும் உருவம் ஆகியவற்றிலும் இரண்டும் மாறுபட்டு காட்சியளிக்கின்றன. மேலும், வெவ்வேறு விதமான நிற தேர்வுகளிலும் அவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. ஆனால், சேஸிஸ், சஸ்பென்ஷன், பிரேக்கிங் சிஸ்டம், எஞ்ஜின் போன்றவற்றில் இவை இரண்டும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

650 ட்வின் பைக்குகளில் 648 சிசி ஏர்-ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 47.65 பிஎஸ் மற்றும் 52 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்டவை. டிரான்ஸ்மிஷனை பொருத்தவரை இரு பைக்குகளிலும் 6 ஸ்பீடு கியர்பாக்ஸே பயன்படுத்தப்பட்டுள்ளது.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

இத்துடன், ஸ்லிப்பர் க்ளட்ச் அம்சமும் கியர்பாக்ஸில் வழங்கப்படுகின்றது. இதுமட்டுமின்றி, அனலாக் ஸ்பீடோ மீட்டர், அனலாக் டேக்கோ மீட்டர் மற்றும் டிஜிட்டல் டிரப் மீட்டர், ஓடோமீட்டர், ஃப்யூவல் கேஜ் உள்ளிட்ட பன்முக சிறப்பம்சங்கள் இக்காரில் வழங்கப்படுகின்றன. இதுமட்டுமின்றி சிறந்த பிரேக்கிங் அம்சத்திற்காக சிங்கிள் டிஸ்க் இரு வீல்களிலும், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் வழங்கப்படுகின்றது.

மீண்டும் ஃபார்முக்கு வரும் ராயல் என்பீல்டு... 769 சதவீதம் விற்பனை வளர்ச்சியில் 650 ட்வின் பைக்குகளின் சேல்ஸ்!

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 ரூ. 2.85 லட்சம் தொடங்கி ரூ. 3.10 லட்சம் வரையிலான விலையிலும், கான்டினென்டல் ஜிடி 650 ரூ. 3.02 லட்சம் தொடங்கி ரூ. 3.26 லட்சம் வரையிலான விலையிலும் விற்கப்படுகின்றது. இவை இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 29, 2022, 18:28 [IST]
English summary
Royal enfield 650 twin bikes registered 769 percent sales growth in february 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+