லிமிடெட் எடிசன் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகளின் டெலிவிரி ஸ்டார்ட்!! செம்ம குஷியில் பிரபலங்கள்!
ராயல் என்பீல்டு லிமிடெட் எடிசன் 650 இரட்டை பைக்குகளின் டெலிவிரிகள் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் பிரபலமான இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650 என்ற 650 இரட்டை பைக்குகளின் புதிய லிமிடெட் எடிசன்களை பிராண்டின் 120ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியீடு செய்தது. இதனாலேயே இந்த ஸ்பெஷல் எடிசன் பைக்குகளுக்கு 120-வது ஆண்டு நிறைவு எடிசன் என பெயர் சூட்டப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இந்த மோட்டார்சைக்கிள்களின் டெலிவிரிகள் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. ஏஸ் ஷூட்டர் மற்றும் ஒலிம்பியன் ககன் நராங் ஆகியோர் தங்களது இண்டர்செப்டர் 650 120-வது ஆண்டு நிறைவு எடிசன் பைக்குகளை டெலிவிரி பெற்றுள்ளனர். இவர்களுக்கு முன்னதாக கடந்த வாரத்தில் கொச்சியில் உள்ள ஷோரூம் ஒன்றில் மலையாள நடிகரும், இயக்குனருமான தியான் ஸ்ரீனிவாசன் இண்டர்செப்டர் 650 லிமிடெட் எடிசனை டெலிவிரி பெற்று இருந்தார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பெயருக்கு ஏற்ப இந்த ஸ்பெஷல் எடிசன் 650 இரட்டை பைக்குகள் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளன. எந்த அளவிற்கு என்றால், மொத்தமாகவே வெறும் 480 650 ட்வின்ஸ் 120வது ஆண்டு நிறைவு எடிசன்களை மட்டுமே ராயல் என்பீல்டு நிறுவனம் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதில் 120 யூனிட்கள் மட்டுமே இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதாவது மீதி 360 யூனிட்கள் மற்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன.

120 யூனிட் என்பது மிகவும் குறைவு என்பதால், இந்த ஸ்பெஷல் எடிசன் ராயல் என்பீல்டு பைக்குகளை வாங்க திரையுலக பிரபலங்களும், முக்கிய பிரமுகர்களும் எதிர்பார்த்ததை போல் குவிந்தனர். இந்த 120 யூனிட்களும் வெறும் 2 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக ராயல் என்பீல்டு தெரிவித்துள்ளது. இந்த 120 யூனிட்களில் வரிசைப்படி 001இல் இருந்து 120 வரையிலான எண்கள் பொறிக்கப்பட்டு வழங்கப்பட உள்ளன.

இதில் '001' என்ற எண்ணை பெற்ற லிமிடெட் எடிசன் இண்டர்செப்டர் 650 பைக்கை இந்திய கடற்படையின் அட்மிரல் பிலிபோஸ் ஜி பைனுமூட்டில் டெலிவிரி பெற்றுள்ளார். இவ்வாறு இந்த 120 யூனிட் லிமிடெட் எடிசன் பைக்குகளையும் இராணுவ அதிகாரிகள், நடிகர்கள் மற்றும் பைக் ஆர்வலர்களே டெலிவிரி பெற்று வருகின்றனர். ஏற்கனவே கூறியதுபோல், 650 இரட்டை பைக்குகளின் இந்த ஸ்பெஷல் எடிசன்கள் ராயல் என்பீல்டின் 120ஆம் ஆண்டுகளாக நிறைவை கொண்டாடும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டன.

இங்கிலாந்தில் தோன்றி, தற்போது நமது சென்னையில் ஆதிக்கம் செலுத்திவரும் ராயல் என்பீல்டு பிராண்டில் இருந்து முதல் மோட்டார்சைக்கிள் 1901ஆம் ஆண்டில் லண்டனில் ஸ்டான்லி சைக்கிள் கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. பிரத்யேகமான பெயிண்ட்டில் காட்சியளித்த இந்த மோட்டார்சைக்கிள் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

ராயல் என்பீல்டின் இந்த முதல் பைக்கை போல் புதிய லிமிடெட் எடிசன் பைக்குகளும் கருப்பு நிறத்தில், க்ரோம் தொடுதல்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஹேண்டில்பார், எக்ஸாஸ்ட் குழாய் மற்றும் மற்ற பாகங்கள் அனைத்தும் வழக்கம்போல் கருப்பு நிறத்தில் தொடரப்பட்டுள்ளதால், இந்த ஸ்பெஷல் எடிசன் 650 இரட்டை பைக்குகள் முழுவதுமாக கருப்பு நிறத்தில் காட்சியளிக்கின்றன.

இவற்றை ஃப்ளைஸ்க்ரீன்ஸ், என்ஜின் பாதுகாப்பான்கள், ஹேண்டில் பார் முனை கண்ணாடிகள், ஹீல் பாதுகாப்பான்கள், சம்ப் பாதுகாப்பான் உள்ளிட்ட ஆக்ஸஸரீகளுடன் ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கி வருகிறது. மேலும் இந்த பைக்குகளின் இருக்கைகளை உரிமையாளர்கள் தேவை என்றால் பழுப்பு நிற இருக்கை உடனும் வாங்கலாம். இவை எல்லாவற்றையும் விட இந்த லிமிடெட் எடிசன் பைக்குகளில் பெட்ரோல் டேங்க் தான் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

ஏனெனில் இவற்றின் பெட்ரோல் டேங்க் பிரத்யேகமாக வெறும் கையினால் பெயிண்ட் செய்யப்பட்டு வழங்கப்பட உள்ளது. அதேபோல் இவற்றில் வழங்கப்படுகின்ற ராயல் என்பீல்டின் லோகோவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு பொருத்தப்படுகிறது. இவை தவிர்த்து 650 120வது ஆண்டு நிறைவு எடிசன் பைக்குகளின் இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

ராயல் என்பீல்டு 650-இரட்டை பைக்குகளில் 648சிசி, இணையான-இரட்டை என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 47.45 பிஎஸ் மற்றும் 52 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








