அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனம் பைக்கிற்கு புதிய பெயரை பதிவு செய்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனம் கான்ஸ்டலேஷன் (Royal Enfield Constellation) என்ற பெயரை தற்போது பதிவு செய்து வைத்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் காலத்தில் அறிமுகம் செய்யவுள்ள ஏதேனும் ஒரு மோட்டார்சைக்கிளுக்கு இந்த கான்ஸ்டலேஷன் என்ற பெயர் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனம் கடைசியாக 1950கள் மற்றும் 1960களில் இந்த பெயரை பயன்படுத்தியுள்ளது. அப்போது 700 சிசி ட்வின்-சிலிண்டர் மோட்டார்சைக்கிளில் இந்த பெயர் பயன்படுத்தப்பட்டது. அன்றைய காலகட்டத்தில் ராயல் என்பீல்டு கான்ஸ்டலேஷன் 700 (Royal Enfield Constellation 700) மோட்டார்சைக்கிள் மிகவும் பிரபலமாக இருந்தது.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

வட அமெரிக்க சந்தைக்காக பிரத்யேகமாக இந்த மோட்டார்சைக்கிள் உருவாக்கப்பட்டது. கடந்த 1958ம் ஆண்டு முதல் 1963ம் ஆண்டு வரை ராயல் என்பீல்டு கான்ஸ்டலேஷன் மோட்டார்சைக்கிள் விற்பனையில் இருந்தது. இந்த சூழலில்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் கான்ஸ்டலேஷன் என்ற பெயரை பதிவு செய்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

தனது புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றுக்கு இந்த பெயரை சூட்டுவதன் மூலம் பழமையான கான்ஸ்டலேஷன் என்ற பெயருக்கு ராயல் என்பீல்டு நிறுவனம் புத்துயிர் அளிப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஏதேனும் ஒரு 650 சிசி மோட்டார்சைக்கிளுக்கு இந்த பெயர் சூட்டப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனம் 3 புதிய 650 சிசி மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் ஒரு மோட்டார்சைக்கிள் சூப்பர் மீட்டியோர் என்ற பெயரில் அழைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது மோட்டார்சைக்கிளானது, எஸ்ஜி650 பாபர் கான்செப்ட் ஆகும்.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

அதே நேரத்தில் மூன்றாவது மோட்டார்சைக்கிளானது, ரோட்ஸ்டர் என கூறப்படுகிறது. அனேகமாக இந்த மோட்டார்சைக்கிளுக்குதான் ராயல் என்பீல்டு நிறுவனம் கான்ஸ்டலேஷன் என்ற பெயரை சூட்டுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படும் 3 புதிய 650 சிசி மோட்டார்சைக்கிள்களும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மோட்டார்சைக்கிள்களில் பொருத்தப்பட்டுள்ள அதே 648 சிசி இன்ஜின்தான், வரும் காலத்தில் விற்பனைக்கு வரவுள்ள 3 புதிய 650 சிசி மோட்டார்சைக்கிள்களிலும் வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தாலும் ஒவ்வொரு பைக்கிற்கும் பொருந்தும் வகையில், இந்த இன்ஜின் அப்டேட் செய்யப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஆனால் இவை அனைத்தும் யூகங்களின் அடிப்படையில் பரவி வரும் தகவல்கள் மட்டுமே என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான தகவல்கள் எதையும் ராயல் என்பீல்டு நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை. ராயல் என்பீல்டு நிறுவனத்திடம் இருந்து எப்போது அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும்? என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனம் 3 புதிய 650 சிசி மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ள நிலையில், அந்நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் தற்போது போட்டி அதிகரித்து கொண்டே வருகிறது. முதலில் மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜாவா பைக்குகள் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு போட்டியாக வந்தன.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

ஆனால் உற்பத்தியில் வெளிப்படைத்தன்மை இல்லாதது, டெலிவரியில் தாமதம் உள்பட பல்வேறு காரணங்களால் ஜாவா பைக்குகள் மீது வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டது. இதன் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மீது ஜாவா எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு தற்போது மற்றொரு போட்டி வந்துள்ளது.

அந்த காலத்துல ரொம்ப ஃபேமஸ்... புதிய பெயரை பதிவு செய்தது ராயல் என்பீல்டு... என்னனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

யெஸ்டி பைக்குகள்தான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய போட்டியாளர்கள். யெஸ்டி நிறுவனம் சமீபத்தில் ரோட்ஸ்டர், ஸ்க்ராம்ப்ளர் மற்றும் அட்வென்ஜர் என 3 புதிய மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இவை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளுக்கு விற்பனையில் சவால் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Friday, March 4, 2022, 12:20 [IST]
English summary
Royal enfield 650cc roadster could be named as constellation trademark filed
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+