உலக அரங்கில் இந்தியாவிற்கு கௌரவம் தேடி தரும் ராயல் என்பீல்டு... இந்த விஷயம் தெரிஞ்சா பெருமைப்படுவீங்க!
ராயல் என்பீல்டு நிறுவனம் உலக அரங்கில் இந்தியாவிற்கு கௌரவம் தேடி தந்து கொண்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) மற்றும் மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) ஆகிய 2 பைக்குகளும் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. இந்த 2 பைக்குகளையும் தற்போது மலேசியாவில் (Malaysia) விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி, இந்திய சந்தையில் இந்த 2 ராயல் என்பீல்டு பைக்குகளும் வெற்றிகரமான தயாரிப்புகளாக திகழ்ந்து வருகின்றன. இந்த வெற்றி வெளிநாடுகளிலும் பிரதிபலிக்க வேண்டும் என ராயல் என்பீல்டு நிறுவனம் விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாகவே தற்போது மலேசியாவில், ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 ஆகிய 2 பைக்குகளும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் இந்த 2 பைக்குகளுக்கும், மலேசிய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 2 பைக்குகளுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. அதாவது இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பைக்குகள் எந்தவிதமான மாற்றமும் இன்றி, அப்படியே மலேசியாவிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 பைக்குகளைதான் ராயல் என்பீல்டு நிறுவனம் மலேசியாவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இது நாம் பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும். இதில், புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக் இந்திய சந்தையில் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

அதே நேரத்தில் கிளாசிக் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வந்தது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 ஆகிய இரண்டு பைக்குகளும் J-பிளாட்பார்ம் அடிப்படையில்தான் கட்டமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த 2 பைக்குகளிலும் ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது.

அது 349 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20.2 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவில் மட்டுமல்லாது, உலக அளவிலும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.

தொடர்ச்சியாக பல்வேறு புதிய நாடுகளிலும் தனது பைக்குகளின் விற்பனையை விரிவாக்கம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் முயற்சி செய்து வருகிறது. மலேசிய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் கிளாசிக் 350 பைக்கை 23,500 ஆர்எம்களுக்கு விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதில், ஆர்எம் (RM) என்பது மலேசியாவின் கரன்ஸி ஆகும்.

மலேசியன் ரிங்கிட் (Malaysian Ringgit) என்பதுதான் சுருக்கமாக ஆர்எம் என குறிப்பிடப்படுகிறது. இந்திய மதிப்பில் கணக்கிட்டால், மலேசியாவின் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கின் விலை தோராயமாக 4.14 லட்ச ரூபாய் ஆகும். அதே நேரத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் மீட்டியோர் 350 பைக்கை 24,500 ஆர்எம்களுக்கு மலேசியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யதுள்ளது. இந்திய மதிப்பில் இது தோராயமாக 4.32 லட்ச ரூபாய் ஆகும்.

இந்திய சந்தையை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 ஆகிய பைக்குகளை போலவே, 650 ட்வின்ஸ் என குறிப்பிடப்படும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளின் விற்பனையும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

வரும் மாதங்களில் இந்தியாவின் 650 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகளை போலவே, இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் புதிதாக களமிறக்கும் பைக்குகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








