கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

அண்மையில் கோவையில் ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 (Royal Enfield GT Cup 2021) நடைபெற்றது. இந்த போட்டியை காணும் வாய்ப்பும், நிறுவனம் பந்தயத்திற்காக பிரத்யேகமாக தயார் செய்திருந்த ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி-ஆர்650 (Royal Enfield Continental GT-R650) பைக்கை இயக்கி பார்க்கும் வாய்ப்பும் எங்களுக்கு கிடைத்தது. இவற்றின் வாயிலாக கிடைத்த அனுபவங்களையே பிரத்யேகமாக இந்த பதிவில் தொகுத்து வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் அவைகுறித்த தகவலைக் காணலாம்.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

அண்மையில் கோயம்பத்தூரில் உள்ள காரி மோட்டார் ஸ்பீட்வேவில் 2021 ஜிடி கப் போட்டி நடைபெற்றது. இதில், பங்கு கொள்ளும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. இத்துடன், ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி-ஆர்650 மோட்டார்சைக்கிளை ஓட்டி பார்க்கும் வாய்ப்பும் எங்களுக்குக் கிட்டியது.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

இவ்விரண்டின் வாயிலாக எங்களுக்குக் கிடைத்த சுவாரஷ்யமான அனுபவங்களையே இந்த பதிவில் நாங்கள் வழங்கியிருக்கின்றோம். அதாவது, 2021 ஜிடி கப் போட்டியின் நடைபெற்ற பற்றிய முக்கிய நிகழ்வுகளையும், ரேஸ் மோட்டார்சைக்கிளாக உருவாக்கப்பட்டிருக்கும் கான்டினென்டல் ஜிடி-ஆர்650 பைக்கின் சிறப்பம்சங்கள் பற்றிய தகவல்களையே இந்த பதிவில் வழங்கியிருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021

ஜிடி கோப்பை போட்டியானது நாட்டில் அடிமட்ட மோட்டார் சைக்கிள் பந்தயத்தை ஊக்குவிக்கும் ஓர் விளையாட்டாகும். நீண்ட கால எதிர்பார்பிற்கு பின்னர் இந்த போட்டிகள் இந்தியாவில் தற்போது நடைபெற்றிருக்கின்றது. அதேவேலையில், 1960களில் நடைபெற்ற மோட்டார்சைக்கிள் பந்தயங்களால் ஈர்க்கப்பட்ட போட்டியாகவும் ஜிடி கோப்பை காட்சியளிக்கின்றது.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை போட்டியில் பங்கு பெற வேண்டும், போட்டியாளர் முன்னதாக ஏதேனும் ஒரு சர்க்யூட் ரேஸ் போட்டியில் பங்கேற்றிருக்க வேண்டும். அல்லது, சான்று பெற்ற ரேஸ் டிரெய்னிங் நிறுவனங்களில் பயிற்சி பெற்ற நபராக இருக்க வேண்டும்.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

இத்தகையோரே ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை போட்டியில் பங்கேற்றனர். போட்டியாளர்கள் தங்கள் விருப்பத்தின் பேரில் பதிவு செய்ததன் அடிப்படையில் ஜிடி கோப்பை 2021இல் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். முன்னதாக அவர்கள் ஒரு நாள் பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டனர். இத்துடன், அவர்களுக்கு மோட்டார் சைக்கிளின் பண்புகள் மற்றும் ஆன்-டிராக் மேனரிஸங்கள் கற்பிக்கப்பட்டன.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

2021 ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை நான்கு சுற்றுலாக நடைப்பெற்றது. ஒவ்வொரு சுற்றும் இரண்டு பந்தயங்களை உள்ளடக்கியிருந்தன. ஆனால், இரண்டாவது பந்தயமே இறுதி சுற்றாகும். அதில், அதிக புள்ளிகளைப் பெற்றவர்கள் சாம்பியனாகக் கருதப்பட்டு முடிசூட்டப்பட்டனர்.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

அந்தவகையில், பிரபல மோட்டார்சைக்கிள் பந்தய வீரரான அனிஷ் தாமோதரன் ஷெட்டி 2021 ராயல் என்பீல்டு ஜிடி கோப்பையின் சாம்பியனாக முடிசூடப்பட்டார். ஒட்டுமொத்தமாக இந்த போட்டியில் 18 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரையும் வீழ்த்தி அனிஷ் மகுடம் சூடினார்.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

இவரைத் தொடர்ந்து 2021 ராயல் என்பீல்டு ஜிடி கோப்பையின் சாம்பியனாக முடிசூட தகுதியானவராக லானி ஜெனா பெர்னாண்டஸ் இருக்கின்றார். இந்த பெண் வீராங்கனை ஜிடி கோப்பையில் மிக சிறப்பாக செயல்பட்டு, போட்டி குழுவினரையே வியக்க வைத்தார்.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

ராயல் என்பீல்டு ஜிடி ஆர்650 பைக்

2021 ராயல் என்பீல்டு ஜிடி கோப்பையைப் போலவே நிறுவனத்தின் ரேஸ் பைக்காக உருவாகியிருக்கும் ஜிடி ஆர்650 பைக்கும் நம்மை கவரும் அமைந்தது. இப்படி ஒரு பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு வழங்கவே இல்லையே என யோசிக்கிறீங்களா. ஆமாங்க, இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் பிரத்யேகமாக ஸ்போர்ட்ஸ் பயன்பாட்டிற்கு உருவாக்கியிருக்கின்றது.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

அதேநேரத்தில் இது கான்டினென்டல் ஜிடி 650 பைக்கின் மாடிஃபைடு வெர்ஷன் ஆகும். இதன் உருவத்தை பார்த்தே உங்களுக்கு புரிந்துவிடும். அதேநேரத்தில், வழக்கமான கான்டினென்டல் ஜிடி 650 பைக்கைக் காட்டிலு் அதிக செயல் திறன்மிக்கதாக ஜிடி ஆர்650 இருக்கின்றது. அதேநேரத்தில், 50ஸ் மற்றும் 60ஸ் கால ஸ்டைல் தாத்பரியங்களையும் அந்த பைக்குகள் தாங்கியிருந்தன.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

ராயல் என்பீல்டு நிறுவனம் 2018ம் ஆண்டு சந்தையில் நிலவி வரும் போட்டியைச் சமாளிக்கும் பொருட்டு இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் 650 எனும் இரட்டையர்கள் வெர்ஷனில் இப்பைக்கை விற்பனைக்குக் கொண்டு வந்தது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகனமான வரவேற்புக் கிடைத்தது. தற்போது, உலகளவிலும் இப்பைக்கிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இரண்டும் ஒரே மாதிரியான சிசி பவரை வெளிப்படுத்தக் கூடிய எஞ்ஜினைக் கொண்டிருக்கின்றன.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

ராயல் என்பீல்டு ஜிடி-ஆர்650 பைக்கின் தோற்றம் மற்றும் ஸ்டைல்

ஏற்கனவே கூறியதைப் போல் ரெட்ரோ ரேஸ் மோட்டார்சைக்கிள் தோற்றம் இப்பைக்கிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கை பார்க்கும்போது, இந்த காலத்தில் இப்படி ஒரு பைக் எப்படி வந்தது என்று கேட்குமளவிற்கு மிகவும் சூப்பரான ரெட்ரோ தோற்றம் ஜிடி-ஆர்650 பைக்கிற்குக் கொடுக்கப்பட்டுள்ளது.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

இந்த தோற்றத்திற்காக சில கூறுகள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. அந்தவகையில், ஹெட்லைட் இருக்கும் பகுதியில் ஓர் புதிய பேனலும், ஒற்றை மற்றும் குறுகிய துண்டு இருக்கையும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவையே இப்பைக்கை 50ஸ் மற்றும் 60ஸ் கால இருசக்கர வாகனத்தைப் போல் காண்பிக்கின்றன. மேலும், எஞ்ஜினுக்கு அடிப்பகுதியில் பெல்லி பேன் ஒன்றும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

இவற்றில் ஒரு சிலவற்றை ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் விற்பனையகங்களில் அக்ஸசெரீஸ்களாக விற்பனைக்கு வழங்கி வருவது குறிப்பிடத்தகுந்தது. புதிய அம்சங்கள் சேர்ப்பிற்கு முன்னதாக ஹெட்லேம்ப், இன்டிகேட்டர்கள் மற்றும் கண்ணாடிகள் அகற்றப்பட்டிருக்கின்றன. தொடர்ந்து, எஞ்ஜினிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

பெரிய சிலிண்டர்கள் ஏர் கூலிங் ஃபின்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது ரெட்ரோ தோற்றத்த மெருகேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் கூடுதல் சிறப்பான செயல்திறனையும் வெளியேற்றுகின்றது. இதைத்தொடர்ந்து, ஸ்டாக் எக்சாஸ்ட் சிஸ்டமும் அகற்றப்பட்டிருக்கின்றது. அதற்கு பதிலாக ஸ்டெயின்லெஸ் ஸ்டீலிலான முழு எக்சாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது வழக்கமான எக்சாஸ்டைக் காட்டிலும் சிறந்த சத்தத்தை வெளியேற்றுகின்றது.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

எஞ்ஜின் செயல் திறன் மற்றும் ரைடிங் அனுபவங்கள்

இத்தகைய மாற்றம் கொண்ட ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி ஆர்650 பைக்கையே ஓட்டி பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. மோட்டார்சைக்கிள் அதன் தோற்றத்திற்கு ஏற்பவே இயக்கத்தின்போதும் ரெட்ரோ கால அனுபவத்தை வழங்கும் வகையில் இருந்தது. எஞ்ஜின் உருமல் தொடங்கி இயக்கம் வரை அனைத்தும் அப்படியே இருந்தது.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

அதேநேரத்தில், குறைந்தளவு மாடர்ன் கால பைக்கைப் போலவும் அது செயல்பட்டது. ஆனால், எஞ்ஜினின் கர்ஜனை இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட சூப்பர் மரைன் ஸ்பிட்ஃபையர் போர் விமானங்களைப் போல் இருந்தது. இது எங்களை மிகவும் உற்சாகப்படுத்தும் வகையில் இருந்தது.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

இதை இன்னும் பல அதிகப்படுத்தும் வகையில் பைக்கின் ஏரோடைனமிக் தோற்றம் இருக்கின்றது. மேலும், மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக ஃபூட் பெக்குகள், க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்கள் இருக்கும் இடங்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன. அது, ரைடிங்கை எக்கசக்கமாக சுவாரஷ்யமானதாக மாற்றும் வகையில் இருக்கின்றன.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

பைக்கின் முதல் கியர் வழக்கமான கான்டினென்டல் ஜிடி 650 பைக்கில் செல்வதைப் போன்ற அனுபவத்தையே வழங்குகின்றது. ஆனால், அடுத்தடுத்த கியர்கள் பைக்கை சீறி பாய வைக்கும் வகையில் இருக்கின்றன. இந்த பைக்கில் 648 சிசி பாரல்லல் ட்வின் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜினே வழக்கமான கான்டினென்னடல் ஜிடி650 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

இது 47 பிஎச்பி பவரை 7,150 ஆர்பிஎம்மிலும், 52 என்எம் டார்க்கை 5,250 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். ஆனால், புதிய எக்சாஸ்ட் சிஸ்டம் கான்டினென்டல் ஜிடி ஆர்650 பைக்கில் பயன்படுத்தப்பட்டிருப்பதால் ஐந்து சதவீதம் இந்த திறன் அதிகரித்திருக்கின்றது. எனவே வழக்கமான கான்டினென்னடல் மாடல் பைக்கைக் காட்டிலும் நாங்கள் இயக்கிய இந்த பைக் மிக அதி திறனை வெளிப்படுத்தக் கூடியதாக இருந்தது.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

கியர்பாக்ஸை பொருத்த வரை 6 ஸ்பீடு கியர்பாக்ஸே பொருத்தப்பட்டிருக்கின்றது. இருப்பினும், இந்த கியர்பாக்ஸ் ஜிடி-ஆர்650 பைக்கை துப்பாக்கியில் இருந்து வெளி வரும் தோட்டாவைப் போல் சீறிய பாய வைக்க பெரும் உதவியாக இருந்தது. இது ஓர் ரேஸ் வாகனம் என்பதால் ஸ்பீடோ மீட்டர்கள் அகற்றப்பட்டிருக்கின்றன. ஆகையால், என்ன மாதிரியான உச்சபட்ச வேகத்தில் நாங்கள் பயணித்தோம் என்பதை தெளிவாக எங்களால் கூற முடியவில்லை.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

இருப்பினும், மணிக்கு 170 கிமீட்டருக்கும் அதிகமான வேகத்தில் இந்த பைக் பயணித்திருக்கும் என நாங்கள் உறுதியுடன் கூறுவோம். கரி மோட்டார் ஸ்பீடுவே இந்த உச்சபட்ச வேகத்தை எட்ட உதவியாக இருந்தது. மற்றுமொரு சிறப்பு மாற்றமாக பைக்கின் கியர்பாக்ஸ் பற்களில் லேசான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

அதவாது, 15 பற்களுக்கு பதிலாக 14 பற்கொள்கள் ஸ்பிராக்கெட் கியர்பாக்ஸில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இது மிக அதி-வேக ஆக்சலரேஷனை வழங்க உதவியாக இருக்கின்றது. ஆகையால், இயக்க அனுபவம் டாப்-நாச் என கூறும் வகையில் இருந்தது. இதை உறுதிப்படுத்தும் வகையில் சஸ்பென்ஷன் அமைப்பு இருக்கின்றது.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

ஸ்டாக் சஸ்பென்ஷனே இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பந்தய களத்திற்கு சில மாற்றங்கள் அதில் செய்யப்பட்டுள்ளன. இதுவும் களத்தில் மிக சிறப்பான அனுபவத்தை வழங்கியது. இதுமட்டுமின்றி, மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக வழங்கப்பட்டிருந்த 320 மிமீ டிஸ்க் பிரேக் (முன் பக்கம்) மற்றும் 240 மிமீ டிஸ்க் பிரேக் (பின் பக்கம்) உள்ளிட்டவை சூப்பரான அனுபவத்தை வழங்கின.

கோயம்பத்தூரில் நடைபெற்ற ராயல் என்பீல்டு ஜிடி கோப்பை 2021 போட்டி... சூப்பரான அனுபவங்களின் தொகுப்பு இதோ!

ஆனால், சிறிய மாற்றமாக இதன் ஃப்ளூயிட் மாற்றப்பட்டிருக்கின்றது. ரேஸ் ரெடி பிரேக் ஃப்ளூயிட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிக அதிக வேகத்தினால் ஏற்படும் வெப்பத்தைக் குறைத்து, மிக சிறந்த நிறுத்தத்தை வழங்க உதவும். இதுபோன்ற, பன்முக மாற்றங்களால் வழக்கமான கான்டினென்டல் ஜிடி 650 பைக்கைக் காட்டிலும் மிக மிக சூப்பரான வெர்ஷனாக ஜிடி ஆர்650 மாறியிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, March 24, 2022, 17:05 [IST]
English summary
Royal enfield continental gt r650 and gt cup 2021 motorsport
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+