ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

ராயல் என்பீல்டு நிறுவனம் 450சிசி ஹிமாலயன் பைக்கின் வடிவமைப்பு பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

இந்தியாவில் அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்களை வாங்குவது குறித்த ஆர்வம் கடந்த சில வருடங்களாகவே மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதனாலேயே உலகளவில் முன்னணி மோட்டார்சைக்கிள் பிராண்ட்கள் குறைந்தப்பட்சம் ஒரு அட்வென்ச்சர் பைக்கையாவது வைத்திருக்க முயலுகின்றன.

ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

இந்த வகையில் நம் நாட்டு சந்தையில் மலிவான அட்வென்ச்சர் பைக்காக ராயல் என்பீல்டின் ஹிமாலயன் விளங்குகிறது. எப்போதுமே நம் நாட்டில் விலை குறைவானதுதான் வேகமாக வெற்றி பெறும். இதன்படி, ஹிமாலயனுக்கும் எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பே கிடைத்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்னர், ராயல் என்பீல்டு ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் 650சிசி-யில் வெளிவரவுள்ளதாக வதந்திகள் பரவின.

ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

இதுதொடர்பான வீடியோ ஒன்று கூட அந்த சமயத்தில் இணையத்தில் உலா வந்தது. ஆனால் தற்போது நமக்கு கிடைத்துள்ள தகவல்கள் வேறு மாதிரியல்லவோ இருக்கிறது. அதாவது, ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய இயக்குதளத்தை வடிவமைக்கும் பணியில் ஈடுப்பட்டு வருகிறதாம். கே1 என்ற குறியீட்டு பெயரால் அழைக்கப்படுகின்ற இந்த இயக்குதளத்தின் மூலம் வழக்கமான ஹிமாலயனை காட்டிலும் பக்கா அட்வென்ச்சர் பைக்கை தயாரிக்க ராயல் என்பீல்டு திட்டமிட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

இதனால் இந்த புதிய ராயல் என்பீல்டு பைக், கேடிஎம்-இன் 390 அட்வென்ச்சர் உடன் நேரடியாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய இயக்குதளத்தில் உருவாக்கப்பட உள்ளது முழு அட்வென்ச்சர் பைக் என உறுதியாகிவிட்டதால், இதன் பெயர் ஹிமாலயன் 450 என சூட்டப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. பைக்வாலே செய்திதளம் மூலம் கிடைத்துள்ள கீழுள்ள படத்தில் ஹிமாலயன் 450-இன் தோற்றம் எவ்வாறு இருக்கும் என்பதை காணலாம்.

ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

இதில் பொருத்தப்பட உள்ள சிங்கிள்-சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் அதிகப்பட்சமாக 40- 45 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த அட்வென்ச்சர் பைக்கின் என்ஜினில் இருந்து குதிரையாற்றல் கிடைக்கப்பெறும் ஆர்பிஎம் விஷயத்தில்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்துகிறதாம். ஏனெனில் அட்வென்ச்சர் பைக்குகளுக்கு ஆற்றல் கிடைக்கப்பெறும் ஆர்பிஎம் நிலை தான் முக்கியமாகும்.

ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

இந்த புதிய அட்வென்ச்சர் பைக்கின் என்ஜினில் இருந்து அதிகப்பட்சமாக கிடைக்கவுள்ள டார்க் திறன் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு வெளியாகவில்லை. தோற்றத்தை பொருத்தவரையில், புதிய இயக்குதளத்தின் அடிப்படையில் உருவாக்கப்படுவதால், ராயல் என்பீல்டு ஹிமாலயன் 450-இன் தோற்றம் மிகவும் புத்துணர்ச்சியானதாக இருப்பதை மேலுள்ள படத்தில் காணலாம்.

ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

இருப்பினும் சற்று உன்னிப்பாக பார்த்தால், வழக்கமான ஹிமாலயனின் ஸ்டைல் சற்று இருப்பதை பார்க்க முடிகிறது. உதாரணத்திற்கு, பெட்ரோல் டேங்க் பகுதி, ஹெட்லேம்ப் அமைப்புடன் இணைக்கப்பட்டிருப்பது நமக்கு ஹிமாலயன் பைக்கையே ஞாபகப்படுத்துகிறது. அதேபோல் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் மற்றும் ஸ்போக் சக்கரங்களும் ஸ்டாண்டர்ட் ஹிமாலயனில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

மேலுள்ள படத்தில் ஹிமாலயன் 450 ஆக எதிர்பார்க்கப்படுகின்ற பைக்கில் 21-இன்ச் மற்றும் 17-இன்ச்சில் முன் மற்றும் பின் சக்கரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதவாது பின் சக்கரம் அளவில் சற்று சிறியதாக உள்ளது. இதே அளவிலான சக்கரங்கள் புதிய இயக்குதளத்தில் உருவாக்கப்படும் முழு அட்வென்ச்சர் பைக்கில் வழங்கப்படுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

வெவ்வேறான வேரியண்ட்களில் கொண்டுவரப்படலாம் என கூறப்படுகின்ற ஹிமாலயன் 450 ட்ரெல்லிஸ் சட்டகத்தில் உருவாக்கப்பட உள்ளதாம். மேலும், தற்போதைய ஹிமாலயனை காட்டிலும் எடை குறைவானதாக இருக்கும். இத்துடன் மேலும் சில அம்சங்களும் புதிய ஹிமாலயன் 450-ஐ சிறப்பானதாக காட்டவுள்ளன. இதில், முன்பக்க சஸ்பென்ஷன் அமைப்பும் ஒன்றாக இருக்கும்.

ராயல் என்பீல்டின் புதிய அட்வென்ச்சர் பைக்... ஹிமாலயன் 450!! கேடிஎம் 390 அட்வென்ச்சருக்கு போட்டி தயாராகுது!

ஏனெனில் இதன் முன்பக்க சஸ்பென்ஷன் டிராவல் வழக்கத்தை காட்டிலும் சிறியதாக, தலைக்கீழான ஃபோர்க்குகளாக இருக்கும் என கூறப்படுகிறது. அடுத்தது, கிரவுண்ட் க்ளியரென்ஸ். ஹிமாலயன் 450-இன் க்ரவுண்ட் க்ளியரென்ஸ் பல அட்வென்ச்சர் பைக் ரைடர்களை கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவற்றுடன் காற்று இயக்கவியலுக்கு இணக்கமான நீண்ட இருக்கை அமைப்பு மற்றும் எளிமையாக அணுகக்கூடிய ஹேண்டில்பார் உள்ளிட்டவற்றையும் இந்த புதிய ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles
English summary
Royal Enfield Himalayan 450 India Launch.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X