இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

ராயல் என்பீல்டு நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள மிகவும் விலை குறைவான புதிய பைக் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இதுதான் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் விலை குறைவான பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கை பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருப்பதற்கு இதுவே மிகவும் முக்கியமான காரணம். ஆனால் இந்த பைக்கிற்காக வாடிக்கையாளர்கள் இன்னும் நீண்ட நாட்கள் எல்லாம் காத்திருக்க வேண்டியதில்லை. இன்னும் ஒரு சில நாட்களில், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

சரியாக சொல்வதென்றால், வரும் ஆகஸ்ட் 7ம் தேதி, ராயல் என்பீல்டு ஹண்டர் 350 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்பதால், வாடிக்கையாளர்கள் உற்சாகமடைந்துள்ளனர். விலை குறைவான பைக்காக இருந்தாலும், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 ஏராளமான வசதிகளை பெற்றிருக்கும்.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

இதன்படி சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் என இரண்டு மாடல்களில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ட்ரிப்பர் நேவிகேஷன் (Tripper Navigation) வசதியும், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

மேலும் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள், பின் பகுதியில் ட்வின் ஷாக் அப்சார்பர்கள், சிங்கிள் பீஸ் சீட், வட்ட வடிவ ஹாலோஜன் ஹெட்லேம்ப் மற்றும் டர்ன் சிக்னல் இன்டிகேட்டர்கள், கருப்பு அலாய் வீல்கள், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும், ஹண்டர் 350 பைக்கில் இடம்பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

செயல்திறனை பொறுத்தவரையில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் மிகவும் பிரபலமான 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஃப்யூயல் இன்ஜெக்டடட், எஸ்ஓஹெச்சி, ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜினை, ஹண்டர் 350 பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இந்த இன்ஜின் 20 ஹெச்பி பவர் மற்றும் 27 என்எம் டார்க் திறனை உருவாக்கும் வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருக்கும்.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டிருக்கும். ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் ஆரம்ப விலை 1.40-1.50 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ விலை, விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளான வரும் ஆகஸ்ட் 7ம் தேதிதான் அறிவிக்கப்படும்.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

அன்றைய தினம் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் பற்றிய அனைத்து தகவல்களும் நமக்கு தெரியவந்து விடும். இந்திய சந்தையின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் அசைக்க முடியாத வகையில் மிகவும் வலுவாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால் இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டை ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கோட்டை என்று சொல்லலாம்.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350, மீட்டியோர் 350 மற்றும் புல்லட் 350 உள்ளிட்ட பைக்குகள்தான் இதற்கு காரணம். இந்த சூழலில் ஹண்டர் 350 பைக்கின் வருகை, இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை. ஹண்டர் 350 தவிர புல்லட் பைக்கின் புதிய-தலைமுறை மாடலையும் ராயல் என்பீல்டு நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

அனேகமாக புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலும் நடப்பு ஆகஸ்ட் மாத தொடக்கத்திலேயே விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ராயல் என்பீல்டு ரசிகர்களுக்கு இதை 'டபுள்-ட்ரீட்' என்று சொல்லலாம். ஆனால் புல்லட் 350 பைக்கின் அறிமுக தேதி தற்போதைய நிலையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இவ்ளோ கம்மியான விலையில் ராயல் என்பீல்டு பைக்கா? இப்பவே ஷோரூம்ல பாயை போட்டு படுத்தற வேண்டியதுதான்!

கூடிய விரைவில் இந்த மகிழ்ச்சியான செய்தியும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம். 350 சிசி செக்மெண்ட்டில் புதியதாக இரண்டு தயாரிப்புகளை களமிறக்குவதன் மூலமாக ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ஆதிக்கத்தை மேலும் அதிகரித்து கொள்ளும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Monday, August 1, 2022, 14:26 [IST]
English summary
Royal enfield hunter 350 all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+