மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350). இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில் ஏற்கனவே ராயல் என்பீல்டு நிறுவனம்தான் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளது.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350, மீட்டியோர் 350 மற்றும் புல்லட் 350 ஆகிய பைக்குகளே இதற்கு காரணம். இந்த வரிசையில் புதியதாக வரவுள்ள ஒரு பைக்தான் ஹண்டர் 350. இந்திய வாடிக்கையாளர்கள் இந்த பைக்கை மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பதற்கு ஒரு முக்கியமான காரணம் உள்ளது. விலைதான் அந்த முக்கியமான காரணம்.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

ஆம், இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனை செய்வதிலேயே மிகவும் விலை குறைவான பைக்கான ஹண்டர் 350 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இருப்பினும் இந்த கேள்விக்கு வரும் ஆகஸ்ட் 7ம் (August 7) தேதி நமக்கு உறுதியான பதில் கிடைத்து விடும்.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

ஏனெனில் அன்றைய தினம்தான் ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் கொண்டு வரவுள்ளது. வரும் ஆகஸ்ட் 7ம் தேதி, ஹண்டர் 350 பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பதை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது. எனவே அன்றைய தினத்தில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் விலை, இன்ஜின், வசதிகள் உள்பட அனைத்து தகவல்களும் நமக்கு உறுதியாக தெரியவந்து விடும்.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

ஆனால் அதற்கு முன்பாக இந்த பைக் குறித்து ஒரு சில யூகங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி நமக்கு நன்கு பரிட்சயமான ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 349.34 சிசி, சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின்தான், ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 20 பிஹெச்பி பவரையும், 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350 மற்றும் மீட்டியோர் 350 ஆகிய 2 பைக்குகளிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கிற்கு அடுத்தபடியாக புல்லட் 350 பைக்கின் புதிய தலைமுறை மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

அந்த பைக்கிலும் கூட இதே இன்ஜின்தான் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 'J' பிளாட்பார்ம் (J Platform) அடிப்படையில் ஹண்டர் 350 பைக் கட்டமைக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக்கின் நீளம் 2,055 மிமீ ஆகவும், அகலம் 800 மிமீ ஆகவும், உயரம் 1,055 மிமீ ஆகவும், வீல்பேஸ் நீளம் 1,370 மிமீ ஆகவும் இருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் குறைந்தபட்சம் 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் தொடர்பான அனைத்து அதிகாரப்பூர்வமான தகவல்களுக்கும் நமக்கும் வரும் ஆகஸ்ட் 7ம் தேதி பதில் கிடைத்து விடும். முன்னதாக புதிய ஹண்டர் 350 பைக் ஏற்கனவே இந்தியாவில் உள்ள ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஷோரூம்களுக்கு வர தொடங்கி விட்டது.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

அங்கு எடுக்கப்பட்ட படங்களும் கூட இணையத்தில் வெளியாகியுள்ளன. இதன் அடிப்படையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என தகவல்கள் வெளியாகி வந்தன. எதிர்பார்த்ததை போலவே ஆகஸ்ட் முதல் வாரத்தில் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

நாங்கள் ஏற்கனவே கூறியதை போல், ராயல் என்பீல்டு நிறுவனம் ஹண்டர் 350 பைக்கை 2 வேரியண்ட்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த 2 வேரியண்ட்களிலும் வசதிகள் மாறுபட்டாலும், ஒரே இன்ஜின்தான் வழங்கப்பட்டிருக்கும். டிசைனை பொறுத்தவரையில், வட்ட வடிவ ரியர் வியூ மிரர்கள், கண்ணீர் துளி வடிவத்திலான எரிபொருள் டேங்க், சிங்கிள்-பீஸ் சீட் போன்ற அம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிகவும் விலை குறைவான ராயல் என்பீல்டு பைக்... ஆகஸ்ட் 7ம் தேதி லான்ச் ஆகுது... வெயிட்டிங்கே வெறி ஏறுதே!

இந்திய சந்தையில், யமஹா எஃப்இஸட்25 (Yamaha FZ25), சுஸுகி ஜிக்ஸெர் (Suzuki Gixxer) மற்றும் பல்சர் 250 (Pulsar 250) ஆகிய பைக்குகள் உடன் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 போட்டியிடும். அத்துடன் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கிளாசிக் 350, மீட்டியோர் 350 மற்றும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda H'ness CB350) போன்ற பைக்குகளுக்கும் இது விற்பனையில் சவால் அளிக்கும்.

Note: Images used are for representational purpose only.

More from DriveSpark

Article Published On: Monday, July 25, 2022, 15:11 [IST]
English summary
Royal enfield hunter 350 official launch date august 7
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+