இவ்ளோ கம்மியான விலையில வித்தா யாருதான் வாங்காம இருப்பா! 3மாசத்துல சாதனை படைக்கும் அளவிற்கு விற்கும் ஹண்டர் 350

ராயல் என்பீல்டு ஹண்டர் 350 அறிமுகமாகிய மூன்றே மாதங்களில் சாதனைப் படைக்கும் அளவிற்கு விற்பனையைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. இதுகுறித்து நிறுவனம் வெளியிட்டிருக்கும் ஆச்சரியமளிக்கும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பாக ஹண்டர் 350 இருக்கின்றது. விற்பனைக்கு வந்த சில மாதங்களே ஆகின்றநிலையில் இந்தியர்களின் ஃபேவரிட் பைக்காக இது மாறியிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலை நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.

ஹண்டர் 350

விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது முதலில் இருந்து இப்போது வரை 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் ஹண்டர் 350 பைக் விற்பனையாகியிருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்து மூன்று மாதங்களே ஆகின்றன. இதன் அதிகாரப்பூர்வ அறிமுகம் ஆகஸ்டு 7 ஆம் தேதி அரங்கேறியது குறிப்பிடத்தகுந்தது. இதை வைத்து பார்ததால், விற்பனைக்கு முழுமையாக 90 நாட்கள்கூட முழுமை அடையாத நிலையிலேயே ஹண்டர் 350 பைக் இந்த உச்சபட்ச விற்பனை எண்ணிக்கையைப் பெற்றிருப்பது தெரிகின்றது.

நிறுவனம் வெளியிட்டிருக்கும் அதிகாரப்பூர்வ தகவலின்படி 50,760 யூனிட்டுகள் ஹண்டர் 350 விற்பனையாகியிருப்பது தெரிய வந்திருக்கின்றது. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதமான ஆகஸ்டில் 18,197 யூனிட்டுகளும், செம்படரில் 17,118 யூனிட்டுகளும் , அக்டோபரில் 15,445 யூனிட்டுகளும் விற்பனையாகியுள்ளன.

விற்பனை எண்கள் ஒவ்வொரு மாதமும் சரிந்துக் காணப்பட்டாலும், அது அறிமுகமாகிய மூன்றே மாதங்களில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான யூனிட்டுகள் விற்பனையைப் பெற்றிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்பைக் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைகக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

ரெட்ரோ ஃபேக்டரி, மெட்ரோ டேப்பர் மற்றும் மெட்ரோ ரிபெல் ஆகியவையே அந்த நிற தேர்வுகள் ஆகும். இதில், ரெட்ரோல் ஃபேக்டரி வேரியண்ட் ரூ. 1.49 லட்சத்திற்கும், மெட்ரோ டேப்பர் வேரியண்ட் ரூ. 1.63 லட்சத்திற்கும், மெட்ரோ ரிபெல் ரூ. 1.68 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றன. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகளாகும்.

விலையில் மாறுபட்டுக் காணப்பட்டாலும் இந்த பைக்குகளில் ஒரே மாதிரியான எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்தவகையில் 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டாரினாலேயே இந்த பைக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

இந்த பைக்கின் ரெட்ரோ வெர்ஷனில் ஒயர்-ஸ்போக் வீலையும், மெட்ரோ வெர்ஷனில் அலாய் வீல்கள் தேர்வையும் ராயல் என்பீல்டு வழங்குகின்றது. இதுமாதிரியான கணிசமான மாற்றங்களினாலேயே ரெட்ரோவைக் காட்டிலும் மெட்ரோ வெர்ஷனில் விற்பனைக்குக் கிடைக்கும் ஹண்டர் 350இன் விலைகள் சற்று அதிகமாக உள்ளன. இதைத்தொடர்ந்து பைக்கின் பாதுகாப்பான பிரேக்கிங் வசதிக்காக டூயல் சேனல் டிஸ்க் மற்றும் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது.

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கை தனது புத்தம் புதிய ஜே பிளாட்பார்ம் அடிப்படையாகக் கொண்டே ஹண்டர் 350-ஐ உருவாக்கியிருக்கின்றது. நிறுவனம் வெகுவிரைவில் இந்திய சந்தையில் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கையும் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதற்கான பணியில் நிறுவனம் தற்போது மும்மரமாக ஈடுபட்டு வருகின்றது. இந்த பைக் 2023 ஜனவரியில் விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, November 21, 2022, 9:53 [IST]
English summary
Royal enfield hunter 350 sale crosses 50k unit
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+