அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள் கெத்து காட்டியுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்தியாவில் மிகவும் பிரபலமான பைக் நிறுவனங்களில் ஒன்றாக ராயல் என்பீல்டு திகழ்கிறது. பைக் ஆர்வலர்களின் விருப்பமான நிறுவனங்களில் ஒன்று என ராயல் என்பீல்டை குறிப்பிடலாம். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் பைக்குகளை பொறுத்தவரையில், 650 ட்வின்ஸ் பைக்குகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள்தான் 650 ட்வின்ஸ் என குறிப்பிடப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் இந்த 2 பைக்குகளும் விற்பனையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளன. இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் 2,159 இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளை விற்பனை செய்துள்ளது.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

ஆனால் கடந்த 2021ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெறும் 1,293 இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன. இதன் மூலம் விற்பனையில் 66.98 சதவீத வளர்ச்சியை ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள் பதிவு செய்துள்ளன. இதற்கிடையே நடப்பாண்டு மார்ச் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனம் வெறும் 1,226 இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்திருந்தது.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்த எண்ணிக்கை அதன்பின் வந்த ஏப்ரல் மாதம் 2,159 ஆக உயர்ந்துள்ளது. இந்த வகையில் பார்த்தால் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 பைக்குகள் 76.10 வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளன. இங்கே குறிப்பிடப்பட்டிருப்பவை, ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய 2 பைக்குகளின் ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கை ஆகும்.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்திய பைக் மார்க்கெட்டின் 650 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய பைக்குகள்தான் இதற்கு காரணம். தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்தியாவின் 650 சிசி பைக் செக்மெண்ட்டில், இந்த 2 தயாரிப்புகளை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்த 2 பைக்குகளும் கிட்டத்தட்ட ஒன்று போலவேதான் இருக்கும். ஒரு சில காஸ்மெட்டிக் வேறுபாடுகள் மட்டுமே இருக்கின்றன. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 ரெட்ரோ-ஸ்டைல் ரோட்ஸ்டர் ஆகும். அதே நேரத்தில் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி 650 ஸ்போர்ட்டி கஃபே ரேஸர் ஆகும். இந்த 2 பைக்குகளிலும் ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. அது 648 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின் ஆகும்.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 46.75 பிஎஸ் பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஸ்லிப்பர் க்ளட்ச் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த 2 பைக்குகளிலும் செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல்தான் கொடுக்கப்பட்டுள்ளது.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

ஸ்பீடோமீட்டர் மற்றும் டேக்கோமீட்டருக்கு அனலாக் டயல்களும், மற்ற அனைத்து தகவல்களுக்கும் டிஜிட்டல் திரைகளும் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த 2 பைக்குகளிலும் ஹாலோஜன் பல்புகள்தான் கொடுக்கப்பட்டுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் தனது 650 சிசி பைக்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தற்போது திட்டமிட்டுள்ளது.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

எனவே கூடிய விரைவில் இந்த செக்மெண்ட்டில் புதிய தயாரிப்பை ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு இறுதிக்குள் புதிய 650 சிசி க்ரூஸர் பைக் ஒன்றை இந்த செக்மெண்ட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் மீட்டியோர் 650 என்ற பெயரில் இந்த பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இதுதவிர சூட்கன் 650 பைக்கையும் ராயல் என்பீல்டு நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. இது எஸ்சி650 கான்செப்ட் மாடலின் தயாரிப்பு நிலை வெர்ஷன் ஆகும். அத்துடன் க்ளாசிக் 650 பைக்கை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ராயல் என்பீல்டு நிறுவனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அடேங்கப்பா... கெத்து காட்டிய ராயல் என்பீல்டு நிறுவனம்... மேட்டர் என்னனு தெரிஞ்சா அசந்து போயிருவீங்க!

இந்த பைக்குகள் வரும் ஆண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவின் 650 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் புதிய 650 சிசி பைக்குகள் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

Most Read Articles
English summary
Royal enfield interceptor 650 continental gt 650 april 2022 sales report
Story first published: Sunday, May 22, 2022, 23:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X