சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகளின் விற்பனை தூள் கிளப்பி வருகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

இந்தியாவின் 650 சிசி பைக் செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி650 (Royal Enfield Continental GT650) என இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனம் 2 பைக்குகளை வைத்துள்ளது. இந்த 2 பைக்குகளின் விற்பனையும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. இந்த 2 பைக்குகளும் 'ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ்' என குறிப்பிடப்படுகின்றன.

சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பாண்டு மார்ச் மாதம் ஒட்டுமொத்தமாக 1,226 என்ற எண்ணிக்கையில் 650 ட்வின்ஸ் பைக்குகளை விற்பனை செய்துள்ளது. கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 224.34 சதவீத வளர்ச்சியாகும். ஏனெனில் ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம் வெறும் 378 என்ற எண்ணிக்கையில் மட்டுமே 650 ட்வின்ஸ் பைக்குகளை விற்பனை செய்திருந்தது.

சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

இதன் மூலம் விற்பனையில் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள் பதிவு செய்துள்ளன. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 ஆகிய இரண்டு பைக்குகளிலும் ஒரே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. எனினும் இரண்டு பைக்குகளுக்கும் இடையே எரிபொருள் டேங்க் மற்றும் 'ரைடிங் எர்கோனாமிக்ஸ்' போன்ற வித்தியாசங்கள் இருக்கின்றன.

சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

இந்த 2 பைக்குகளிலும், 648 சிசி, ஏர்/ஆயில் கூல்டு, பேரலல்-ட்வின் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47.65 பிஎஸ் பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷன் பணிகளை 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் கவனித்து கொள்கிறது. அதே சமயம் ஸ்லிப்பர் கிளட்ச் ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

இந்த பைக்குகளின் முன் பகுதியில் 320 மிமி சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் வழங்கப்படுகிறது. ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 ஆகிய பைக்குகளும் ரெட்ரோ டிசைனும், அதிநவீன வசதிகளும் கலந்த கலவையாக உருவாக்கப்பட்டுள்ளன.

சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

இந்த பைக்குகளின் முன் பகுதியில் ஹாலோஜன் ஹெட்லைட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 பைக், 2.85 லட்ச ரூபாயில் இருந்து 3.10 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்படுகிறது. இங்கே குறிப்பிடப்பட்டுள்ளவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

மறுபக்கம் ராயல் என்பீல்டு கான்டினென்டல் ஜிடி650 பைக்கானது, 3.02 லட்ச ரூபாய் முதல் 3.26 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவையும் எக்ஸ் ஷோரூம் விலைதான். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 ஆகிய பைக்குகளுக்கு கிடைத்துள்ள பிரம்மாண்டான வரவேற்பிற்கு, அவற்றின் குறைவான விலையும் மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

இந்த விலைக்கு இவை இரண்டுமே மிக சிறப்பான பைக்குகளாக பார்க்கப்படுகின்றன. இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி650 ஆகிய இரண்டு பைக்குகளுக்கும் நேரடி போட்டி என எந்த பைக்கும் கிடையாது. இருப்பினும் விலை அடிப்படையில் பார்த்தால், கேடிஎம் 390 ட்யூக் (KTM 390 Duke) மற்றும் கவாஸாகி நின்ஜா 300 (Kawasaki Ninja 300) ஆகிய பைக்குகள் இவற்றுக்கு நெருக்கமாக வரும்.

சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

ராயல் என்பீல்டு நிறுவனம் வெகு சமீபத்தில் ஸ்க்ராம் 411 (Royal Enfield Scram 411) பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் ஏற்கனவே மிகவும் பிரபலமாக உள்ள ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) அட்வென்ஜர் டூரர் பைக்கின் அடிப்படையில், ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் உருவாக்கப்பட்டுள்ளது.

சூப்பரான விலை... விற்பனையில் சக்கை போடு போடும் ராயல் என்பீல்டு 650 ட்வின்ஸ் பைக்குகள்... பிரம்மாண்ட வளர்ச்சி!

ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை குறைவான மாடலாக ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் கருதப்படுகிறது. இந்திய சந்தையில் கொரோனா வைரஸ் பிரச்னை உள்ளிட்ட தாமதங்களுக்கு பிறகுதான், ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதை தொடர்ந்து இன்னும் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு ராயல் என்பீல்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, April 28, 2022, 23:59 [IST]
English summary
Royal enfield interceptor 650 continental gt650 sales report march 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+