பிலிப்பைன்ஸில் அறிமுகமாகி இருக்கும் நமது சென்னை ராயல் என்பீல்டு தயாரிப்பு!! புதிய தலைமுறை கிளாசிக் 350!
இந்தியாவை தாண்டி ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு வெளிநாட்டு சந்தைகளிலும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் இந்த சென்னை மோட்டார்சைக்கிள் பிராண்ட் பிரபலமானதாக உள்ளது. இந்த பகுதி மக்கள் பழமையான தோற்றம் கொண்ட பைக்குகளின்மீது இப்போதும் கவனம் செலுத்துகின்றனர்.

அதிலிலும் நமது ராயல் என்பீல்டு பைக்குகள் கூடுதலாக மாடர்ன் தொடுதல்களுடன் வடிவமைக்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக் பிலிப்பைன்ஸ் நாட்டு சந்தையில் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கிளாசிக் 350 கடந்த 2021ஆம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

புத்தம் புதிய ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்கை உருவாக்க பயன்படுத்தப்பட்ட மாடர்ன் ஜே-ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி அடுத்த தலைமுறை கிளாசிக் 350 உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் புதிய கிளாசிக் 350-இல் புத்தம் புதிய சேசிஸை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது. மொத்தம் 4 வேரியண்ட்களில், 7 விதமான நிறத்தேர்வுகளில் பிலிப்பைன்ஸில் கிளாசிக் 350 பைக் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இவற்றின் விலைகள் 228,000 பிலிப்பைன்ஸ் பெஸோவில் இருந்து துவங்குகின்றன. இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் ரூ.3..34 லட்சமாகும். கடந்த ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கிளாசிக் 350 பைக்கில் மாடர்ன் என்ஜின், புதிய சேஸிஸ், அப்டேட் செய்யப்பட்ட சஸ்பென்ஷன், புதிய சக்கரங்கள் மற்றும் ப்ரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

ராயல் என்பீல்டு கிளாசிக் பைக்குகளுக்கு 1948இல் இருந்து வரலாறு உள்ளது. சுழலக்கூடிய ஆர்ம் பின்பக்க சஸ்பென்ஷனை கொண்ட இந்த வரிசையில் முதல் பைக், மாடல் ஜி2 என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தோற்றத்தை அடிப்படையாக கொண்டே பிரபலமான ராயல் என்பீல்டு கிளாசிக் 500 மற்றும் கிளாசிக் 350 பைக்குகள் 2008இல் வெளிவந்தன.

அதன்பின்பு, இந்தியாவில் கிளாசிக் 350 பைக்குகளின் விற்பனையை பற்றி நான் கூற வேண்டியதில்லை. ராயல் என்பீல்டின் மொத்த உள்நாட்டு விற்பனையில் கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மட்டுமே கிட்டத்தட்ட 80 சதவீதத்தை கொண்டுள்ளது. இதுவரையில் மட்டுமே கிட்டத்தட்ட 30 லட்ச கிளாசிக் மோட்டார்சைக்கிள்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

உலகளாவிய தயாரிப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய தலைமுறை ராயல் என்பீல்டு கிளாசிக் 350 மோட்டார்சைக்கிள் பிலிப்பைன்ஸை தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளுக்கும் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட உள்ளது. முன்பை காட்டிலும் தற்காலத்திற்கு ஏற்ப மாடர்ன் தரத்திற்கு இணையான தோற்றத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள புதிய கிளாசிக் 350 எதிர்காலத்திற்கும் ஏற்ற ஸ்டைலினை கொண்டுள்ளது.

அத்துடன் ராயல் என்பீல்டு கிளாசிக் மோட்டார்சைக்கிளிற்கு உண்டான பயண அனுபவமும் எதிர்பார்க்க முடியாத அளவிற்கு மேம்பட்டுள்ளது. கிளாசிக் பைக் பிலிப்பைன்ஸில் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பது குறித்து ராயல் என்ஃபீல்டின் ஆசிய பசிபிக் கூட்டு நாடுகளுக்கான முதன்மை அதிகாரி விமல் சும்ப்ளி கருத்து தெரிவிக்கையில், உலகெங்கிலும் உள்ள நடுத்தர-எடை மோட்டார்சைக்கிள் பிரிவை வளர்ப்பதிலும், விரிவுப்படுத்துவதிலும் கிளாசிக் ஒரு பெரிய ஊக்கியாக இருந்து வருகிறது.

அதேசமயம் உலகம் முழுவதும் உள்ள இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த ரைடர்ஸ் மத்தியில் ஓய்வுநேர சவாரி கலாச்சாரத்தை வளர்ப்பதில் ஒரு கருவியாக உள்ளது. பிலிப்பைன்ஸில், எங்களிடம் 2,000 பெருமைமிக்க ராயல் என்பீல்டு உரிமையாளர்கள் உள்ளனர். புதிய கிளாசிக் 350 இந்த பாரம்பரியத்தை முன்னெடுத்து செல்கிறது மற்றும் முற்றிலும் நவீனமான மற்றும் மறுவடிவமைக்கப்பட்ட சவாரி அனுபவத்துடன் நன்கு அறியப்பட்ட காலமற்ற வடிவமைப்பு மொழியை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை கிளாசிக் 350 அதன் புதிய பிரீமியமான கட்டமைப்பு & ஃபினிஷ், அடிப்பக்க சேசிஸ் மற்றும் என்ஜின் & அசத்தலான பயணம் & ஹேண்ட்லிங் ஆகியவற்றுடன் பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்வதை நோக்கமாக கொண்டுள்ளது. நடுத்தர-அளவு எடை மோட்டார்சைக்கிள் பிரிவில் தீவிர கவனம் செலுத்தி, பைக் ஆர்வலர்கள் மத்தியில் ஒரு தனித்துவமான கவனத்தை உருவாக்குவதில் ஈடுப்பாட்டை செலுத்துவதால், புதிய கிளாசிக் 350 ஆசிய பசிபிக் சந்தையில் எங்களது வளர்ச்சி மற்றும் லட்சியங்களை மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.

புதிய கிளாசிக் 350 பைக்கில் 349சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 6,100 ஆர்பிஎம்-இல் 20.2 பிஎச்பி மற்றும் 4,000 ஆர்பிஎம்-இல் 27 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் அமைப்பில் சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால் சத்தம் குறைவாகும், கூடுதல் வால்வு நேரங்களும் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








