மீண்டும் ‘டல்’ அடிக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை- 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த உள்நாட்டு விற்பனை

ராயல் என்பீல்டு பைக்குகளை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். அதிலிலும் சென்னையில் உருவாக்கப்படும் இந்த பைக்குகளை வாங்கவே நமது தமிழகத்தில் தனிக்கூட்டம் உள்ளது. விற்பனையில் உள்ள அனைத்து ராயல் என்பீல்டு பைக்குகளின் விலைகளும் ரூ.1.5 லட்சத்திற்கு அதிகமாகவே உள்ளன.

மீண்டும் ‘டல்’ அடிக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை- 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த உள்நாட்டு விற்பனை

இருப்பினும் இந்த பைக்குகளின் தரங்களை மற்ற வெளிநாட்டு பிராண்ட் பைக்குகளுடன் ஒப்பிட்டோமேயானால், இவற்றின் விலைகள் குறைவே ஆகும். இப்படிப்பட்ட ராயல் என்பீல்டு பைக்குகள் கடந்த 2022 ஜனவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எண்ணிக்கைகள் பிரிவு வாரியாக வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மீண்டும் ‘டல்’ அடிக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை- 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த உள்நாட்டு விற்பனை

புதிய 2022ஆம் ஆண்டின் துவக்க ஜனவரி மாதத்தில் மொத்தம் 58,838 பைக்குகளை ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தை உள்பட உலகளவில் விற்பனை செய்துள்ளது. இந்த எண்ணிக்கை இதற்கு முந்தைய 2021 டிசம்பர் மாதத்துடனும் சரி, 2021 ஜனவரி மாதத்துடனும் சரி குறிப்பிடத்தக்க அளவில் குறைவாகும். கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மொத்தம் 68,887 ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 2021 டிசம்பர் மாதத்தில் 73,739 யூனிட்கள்.

மீண்டும் ‘டல்’ அடிக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை- 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த உள்நாட்டு விற்பனை

இவற்றை காட்டிலும் இந்த சென்னை மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் கடந்த 2022 ஜனவரி மாத விற்பனை எண்ணிக்கை முறையே 14.59% மற்றும் 20.21% குறைவாகும். குறிப்பாக ராயல் என்பீல்டு பைக்குகளின் உள்நாட்டு விற்பனை பெரிய அளவில் குறைந்துள்ளது. 2021 ஜனவரியிலும், டிசம்பர் மாதத்திலும் இந்திய சந்தையில் விற்பனை செய்யபட்ட ராயல் என்பீல்டு பைக்குகளின் எண்ணிக்கை ஏறக்குறைய 65 ஆயிரங்களாக இருந்தன.

மீண்டும் ‘டல்’ அடிக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை- 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த உள்நாட்டு விற்பனை

ஆனால் கடந்த மாதத்தில் 50 ஆயிரத்திற்கும் குறைவாக, 49,726 பைக்குகளையே இந்த நிறுவனம் உள்நாட்டில் விற்பனை செய்துள்ளது. ஆனால் வெளிநாட்டு சந்தைகளுக்கான ஏற்றுமதி வழக்கத்தை காட்டிலும் நல்லப்படியாகவே கடந்த மாதத்தில் இருந்துள்ளது. கடந்த 2022 ஜனவரியில் மொத்தம் 9,112 பைக்குகளை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ராயல் என்பீல்டு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

மீண்டும் ‘டல்’ அடிக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை- 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த உள்நாட்டு விற்பனை

ஆனால் 2021 ஜனவரியில் வெறும் 4,515 பைக்குகளையும், டிசம்பரில் 8,552 பைக்குகளையுமே இந்த நிறுவனம் ஏற்றுமதி செய்திருந்தது. இந்த வகையில் ராயல் என்பீல்டின் ஏற்றுமதி YoY மற்றும் MoM ஒப்பீடுகையில் முறையே 101.82% மற்றும் 6.55% அதிகரித்துள்ளது. இந்தியா உள்பட உலக நாடுகள் பலவற்றில் 350சிசி-யிலும், அதற்கு மேற்பட்ட சிசி கொண்ட மோட்டார்சைக்கிள்களையும் ராயல் என்பீல்டு விற்பனை செய்து வருகிறது.

மீண்டும் ‘டல்’ அடிக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை- 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த உள்நாட்டு விற்பனை

350சிசி-யில் கிளாசிக் 350, மீட்டியோர் 350, புல்லட் 350 மற்றும் எலக்ட்ரா 350 உள்ளிட்டவையும், 350சிசி-க்கு மேற்பட்ட சிசி கொண்ட மோட்டார்சைக்கிள்களில் ஹிமாலயன், இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் ஜிடி650 உள்ளிட்டவையும் அடங்குகின்றன. முன்பு வரவேற்பை பெற்ற 500சிசி-யில் தற்போதைக்கு எந்தவொரு மோட்டார்சைக்கிளையும் ராயல் என்பீல்டு விற்பனை செய்வதில்லை.

மீண்டும் ‘டல்’ அடிக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை- 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த உள்நாட்டு விற்பனை

இந்த நிறுவனத்தின் 350சிசி பைக்குகள் மொத்தமாக கடந்த ஜனவரி மாதத்தில் 49,586 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2021 ஜனவரி மாதத்தில் இதனை காட்டிலும் கிட்டத்தட்ட 22.82% அதிகமாக 64,248 350சிசி பைக்குகளை இந்தியா உள்பட சர்வதேச சந்தைகளில் ராயல் என்பீல்டு விற்பனை செய்திருந்தது. அதேபோல் இதற்கு முந்தைய 2021 டிசம்பர் மாதத்திலும் 20.72% அதிகமாக 62,543 350சிசி ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

மீண்டும் ‘டல்’ அடிக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை- 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த உள்நாட்டு விற்பனை

350சிசி-க்கு மேற்பட்ட சிசி கொண்ட மோட்டார்சைக்கிள்கள் 2022 ஜனவரியில் 9,252 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த டிசம்பர் மாதத்துடன் ஒப்பீடுகையில் கிட்டத்தட்ட இரண்டாயிரம் யூனிட்கள் குறைவு என்றாலும், 2021 ஜனவரி மாதத்தை காட்டிலும் சுமார் 99.44% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 4,639 >350சிசி பைக்குகளையே ராயல் என்பீல்டு விற்பனை செய்திருந்தது.

மீண்டும் ‘டல்’ அடிக்கும் ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை- 50 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த உள்நாட்டு விற்பனை

ஏனெனில் இதன்பின்பே அப்டேட் செய்யப்பட்ட புதிய ஹிமாலயன் மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து புதிய தலைமுறை கிளாசிக் 350 பைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டின் மத்தியில் கொரோனா இரண்டாவது அலை பரவலினால் தடுமாற்றங்களை சந்திருந்த ராயல் என்பீல்டு தற்போது குறைக்கடத்திகளின் உலகளாவிய பற்றாக்குறையினால் போதிய எண்ணிக்கையில் பைக்குகளை தயாரிக்க முடியாமல் மற்ற ஆட்டோமொபைல் நிறுவனங்களை போல் போராடி வருகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 2, 2022, 11:08 [IST]
English summary
Royal enfield reports domestic sales decline growth in exports in jan 2022
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+