புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 மோட்டார்சைக்கிள் இந்திய அறிமுக தேதி குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

3 மாதங்களுக்கு ஒரு புதிய/ அப்டேட் செய்யப்பட்ட பைக்கை அறிமுகம் செய்வது என்கிற கொள்கை உடன் ராயல் என்பீல்டு நிறுவனம் செயல்பட்டு வருவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். இந்த வகையில் இந்த சென்னை மோட்டார்சைக்கிள் பிராண்டில் இருந்து அடுத்ததாக வெளிவர உள்ள மாடல் ஸ்க்ராம் 411 ஆகும்.

புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கின் சாலை-சார்ந்த வெர்சனாக கொண்டுவரப்பட உள்ள இதன் அறிமுக தேதியாக வருகிற மார்ச் 7 தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சாலை-சார்ந்த வெர்சனாக வடிவமைக்கப்பட்டாலும், முழு-அட்வென்ச்சர் பைக்கின் ஒன்றில் இருந்து கொண்டுவரப்படுவதால், ஸ்க்ராம் 411 பைக்கிலும் சில அட்வென்ச்சர் பண்புகளை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.

புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

இதனை வெளிக்காட்டும் விதத்தில் ராயல் என்பீல்டு நிறுவனம் சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக ஸ்லோ-மோஷன் வீடியோ ஒன்றினை வெளியிட்டு இருந்தது. அந்த வீடியோவில் ஸ்க்ராம் 411 பைக் ஆஃப்-ரோடு பயண சூழலில் காட்சியளித்தது. ஆதலால் தொலைத்தூர நெடுஞ்சாலை பயணங்களுக்காக மட்டுமின்றி, ஆஃப்-ரோடு பயணங்களையும் இந்த புதிய ராயல் என்பீல்டு பைக்கில் பயமின்றி மேற்கொள்ளலாம்.

புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

ஸ்டைலை பொறுத்தவரையில், புதிய ஸ்க்ராம் 411 பைக்கில் ஒற்றை-துண்டு இருக்கை, பைக்கின் உடல் நிறத்தில் வார்ப்பு உலோக ஹெட்லேம்ப் கௌல், டிரிப்பர் நாவிகேஷன் செயல்பாட்டுடன் ஆஃப்-செட் வேகமானி, பெட்ரோல் டேங்கில் பிராண்டின் முத்திரை மற்றும் சைடு பேனல்களில் மாடலின் முத்திரை வழங்கப்பட உள்ளன. ஸ்க்ராம் 411 -இல் முன்பக்கத்தில் 19-இன்ச்சிலும், பின்பக்கத்தில் 17-இன்ச்சிலும் வயர்-ஸ்போக் சக்கரம் வழங்கப்பட உள்ளன.

புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

நிறத்தேர்வுகளை பொறுத்தவரையில், புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கிற்கு கருப்பு மற்றும் வெள்ளை அடிப்படை நிறங்களாக வழங்கப்படலாம். அதேநேரம் பளிச்சிடும் ஹைலைட்களும் பைக்கை சுற்றிலும் கொடுக்கப்படும். மற்றப்படி, ஹிமாலயன் மாடலில் இருந்து என்ஜின் அமைப்பில் புதிய ஸ்க்ராம் 411 பைக்கில் எந்த மாற்றமும் இருக்காது.

புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

ஹிமாலயனில் 411சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்குகிறது. இது அதிகப்பட்சமாக 24.3 எச்பி மற்றும் 32 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இருப்பினும் ஸ்க்ராம் 411 பைக்கில் இந்த என்ஜின் சற்று திருத்தியமைக்கப்பட்டு வழங்கப்படலாம்.

புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

புதிய ஸ்க்ராம் 411 பைக்கின் விலையினை ரூ.1.75 லட்சம் என்கிற அளவில் எதிர்பார்க்கிறோம். தற்சமயம் ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2.14 லட்சமாக உள்ளது. புதிய ஸ்க்ராம் 411 மோட்டார்சைக்கிளில் எத்தகைய அம்சங்கள் வழங்கப்படலாம் என்பது குறித்த விபரங்கள் கடந்த சில மாதங்களாக அவ்வப்போது வெளியாகி வந்துள்ளன.

புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

அதுமட்டுமின்றி இந்த புதிய ராயல் என்பீல்டு பைக்கின் சோதனை ஓட்ட ஸ்பை படங்களும் இணையத்தில் வெளிவந்துள்ளன. ஆனால் அதில் பெரும்பாலானவற்றில் பைக் முற்றிலுமாக மறைக்கப்பட்டதாக இருந்தது. ஆனால் சமீபத்தில் புல்லட் குரு என்கிற யுடியூப் சேனலின் மூலம் வெளியாகி இருந்த ஸ்பை வீடியோவில் பைக்கின் முழு தோற்றமும் வெளிவந்தது.

புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

ஹிமாலயனின் அடிப்படை ரெட்ரோ-தீம் ஐ அப்படியே பெற்றுவரும் ஸ்க்ராம் 411 பைக்கில் அதேநேரம் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு உண்டான கிளாசிக் தொடுதல்களும் வழங்கப்பட உள்ளன. இதற்கு சாட்சியாக, ஸ்க்ராம் மாடலில் முன்பக்க ஹெட்லேம்ப் ஆனது வட்ட வடிவில், ஹிமாலயனை காட்டிலும் சற்று தாழ்வாக வழங்கப்பட உள்ளது. ஹிமாலயனிலும் வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் அமைப்பே வழங்கப்படுகிறது. ஆனால் அதில் சற்று உயரத்தில் ஹெட்லேம்ப் வழங்கப்படுகிறது.

புதிய ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் அறிமுக தேதி அறிவிப்பு!! முன்பதிவு செய்ய தயாராகுங்கள்!

வட்ட வடிவிலான ஹெட்லேம்ப் மட்டுமின்றி, ஃபோர்க் மூடி, பெட்ரோல் டேங்கின் வடிவம், அகலமான ஹேண்டில்பார், சேசிஸ், பிளவுப்பட்ட வடிவிலான இருக்கைகள் மற்றும் மேல்நோக்கி வளைக்கப்பட்ட எக்ஸாஸ்ட் குழாய் உள்ளிட்டவையும் ஹிமாலயன் மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளன. இருப்பினும் வழக்கமான சாலை-சார்ந்த மோட்டார்சைக்கிள் என்பதை காட்டும் விதமாக சில அம்சங்கள் ஸ்க்ராம் 411 பைக்கில் தவிர்க்கப்பட்டுள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, February 18, 2022, 18:46 [IST]
English summary
Royal Enfield Scram - Coming Soon.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+