ராயல் என்பீல்டு மீட்டியோர் & புல்லட் 350-இன் விற்பனை தொடர்ந்து குறைகிறது!! மொத்த உள்நாட்டு விற்பனை 52,135

இந்தியாவின் முன்னணி கிளாசிக் பைக் தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் ராயல் என்பீல்டு கடந்த 2022 பிப்ரவரியில் விற்பனை செய்த இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ராயல் என்பீல்டு மீட்டியோர் & புல்லட் 350-இன் விற்பனை தொடர்ந்து குறைகிறது!! மொத்த உள்நாட்டு விற்பனை 52,135

மோட்டார்சைக்கிள் தயாரிப்பில் சுமார் 120 ஆண்டுகால நிறைவை புதிய லிமிடெட் எடிசன் பைக்குகளுடன் கொண்டாடிவரும் ராயல் என்பீல்டு கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 52,135 மோட்டார்சைக்கிள்களை உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்துள்ளது. ஆனால் உண்மையில், இந்த எண்ணிக்கை ஆனது 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 19.93% குறைவாகும்.

ராயல் என்பீல்டு மீட்டியோர் & புல்லட் 350-இன் விற்பனை தொடர்ந்து குறைகிறது!! மொத்த உள்நாட்டு விற்பனை 52,135

ஏனெனில் அந்த மாதத்தில் மொத்தமாக 65,114 ராயல் என்பீல்டு பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த அளவிற்கு ராயல் என்பீல்டு பைக்குகளின் விற்பனை ஏறக்குறைய 13 ஆயிரம் யூனிட்கள் குறைந்திருப்பதற்கு முக்கிய காரணம், கிளாசிக் 350, மீட்டியோர் 350, புல்லட் 350 போன்ற இந்த நிறுவனத்தின் பிரபலமான மோட்டார்சைக்கிள்கள் அனைத்தின் விற்பனையும் 2021 பிப்ரவரியை காட்டிலும் கடந்த பிப்ரவரி மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளன.

ராயல் என்பீல்டு மீட்டியோர் & புல்லட் 350-இன் விற்பனை தொடர்ந்து குறைகிறது!! மொத்த உள்நாட்டு விற்பனை 52,135

இருப்பினும், கடந்த 2022 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் ராயல் என்பீல்டு பைக்குகளின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை 4.84% அதிகமாகும். வழக்கம்போல் இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்துள்ள கிளாசிக் 350 பைக் கடந்த மாதத்தில் 30,082 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பிப்ரவரியில் இதனை காட்டிலும் 16.50% அதிகமாக, அதாவது ஏறக்குறைய 6 ஆயிரம் யூனிட்கள் அதிகமாக 36,025 கிளாசிக் 350 பைக்குகள் விற்கப்பட்டு இருந்தன.

ராயல் என்பீல்டு மீட்டியோர் & புல்லட் 350-இன் விற்பனை தொடர்ந்து குறைகிறது!! மொத்த உள்நாட்டு விற்பனை 52,135

இருப்பினும், கடந்த ஜனவரி மாதத்தில் இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை 26,775 என்றே பதிவாகியது. கிளாசிக் 350, ராயல் என்பீல்டின் சிறந்த விற்பனை மாடலாக கடந்த பல வருடங்களாக தொடர்கிறது. எந்த அளவிற்கு என்றால், கடந்த பிப்ரவரியில் விற்கப்பட்ட மொத்த ராயல் என்பீல்டு பைக்குகளில் கிட்டத்தட்ட 57.70 சதவீத பங்கு, அதாவது பாதிக்கு மேல் கிளாசிக் 350 உடையது ஆகும். இந்த மாடலுக்கு அடுத்து, நீண்ட இடைவெளியுடன் மீட்டியோர் 350 2வது இடத்தில் உள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் & புல்லட் 350-இன் விற்பனை தொடர்ந்து குறைகிறது!! மொத்த உள்நாட்டு விற்பனை 52,135

கடந்த ஆண்டு வரையில் கிளாசிக் 350-க்கு அடுத்து அதிகம் விற்பனை செய்யப்படும் ராயல் என்பீல்டு பைக் என்ற பெயரை பெற்றுவந்த புல்லட் 350-ஐ முந்திக்கொண்டு மீட்டியோர் 350 இரண்டாவது இடத்தை கடந்த சில மாதங்களாக தனதாக்கி வருகிறது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மீட்டியோர் 350 பைக்குகளின் எண்ணிக்கை 6,749 ஆகும். ஆனால் உண்மையில், இந்த எண்ணிக்கை ஆனது 2021 பிப்ரவரியை (8,624) காட்டிலும் 21.74%-மும், 2022 ஜனவரியை (8,460) காட்டிலும் 20.22%-மும் குறைவாகும்.

ராயல் என்பீல்டு மீட்டியோர் & புல்லட் 350-இன் விற்பனை தொடர்ந்து குறைகிறது!! மொத்த உள்நாட்டு விற்பனை 52,135

இருப்பினும் மீட்டியோர் 350 2வது இடத்திற்கு முந்தியிருப்பதற்கு காரணம் கடந்த மாதத்தில் புல்லட் 350 பைக்குகளின் விற்பனை அந்த அளவிற்கு குறைந்துள்ளது. 2021 பிப்ரவரியில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான விற்பனை எண்ணிக்கையை பெற்றிருந்த புல்லட் 350 கடந்த பிப்ரவரி மாதத்தில் வெறும் 6,432 என்கிற விற்பனை எண்ணிக்கையையே பதிவு செய்துள்ளது. இந்த வகையில் புல்லட் 350-இன் வருடம்-வருடம் விற்பனை ஒப்பீடு கிட்டத்தட்ட 41.76% குறைந்துள்ளது.

ராயல் என்பீல்டு மீட்டியோர் & புல்லட் 350-இன் விற்பனை தொடர்ந்து குறைகிறது!! மொத்த உள்நாட்டு விற்பனை 52,135

கடந்த ஜனவரி மாதத்திலும் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையை காட்டிலும் 12.54% அதிகமாக 7,354 புல்லட் 350 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ராயல் என்பீல்டின் மற்றொரு 350சிசி மோட்டார்சைக்கிளான எலக்ட்ரா 350 கடந்த மாதத்தில் 3,426 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2021 பிப்ரவரியை காட்டிலும் 47.11% குறைவு என்றாலும், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 29.23% அதிகமாகும்.

ராயல் என்பீல்டு மீட்டியோர் & புல்லட் 350-இன் விற்பனை தொடர்ந்து குறைகிறது!! மொத்த உள்நாட்டு விற்பனை 52,135

ஆனால் கடந்த ஜனவரி மாதத்தில் 3,288 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த ராயல் என்பீல்டின் ஒரேயொரு அட்வென்ச்சர் பைக்கான ஹிமாலயனின் விற்பனை எண்ணிக்கை கடந்த மாதத்தில் 3 ஆயிரத்திற்கும் கீழ், 2,977ஆக பதிவாகியுள்ளது. இருப்பினும் மறுப்பக்கம், 2021 பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.92% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 2,660 ஹிமாலயன் பைக்குகளே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

ராயல் என்பீல்டு மீட்டியோர் & புல்லட் 350-இன் விற்பனை தொடர்ந்து குறைகிறது!! மொத்த உள்நாட்டு விற்பனை 52,135

ராயல் என்பீல்டின் 650சிசி மோட்டார்சைக்கிள்களான இண்டர்செப்டர் 650 & காண்டினெண்டல் ஜிடி650 இரண்டும் சேர்த்து கடந்த மாதத்தில் 2,469 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 650 ட்வின்ஸின் இந்த விற்பனை எண்ணிக்கை ஆனது 2022 ஜனவரியை காட்டிலும் 99.43% அதிகம் என்றால், 2021 பிப்ரவரியை காட்டிலும் சுமார் 769.37% அதிகமாகும். ஏனென்றால், கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெறும் 284 650-இரட்டை பைக்குகளையே ராயல் என்பீல்டு விற்பனை செய்திருந்தது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 26, 2022, 11:05 [IST]
English summary
Royal enfield sales breakup feb 2022 classic leads
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+