ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கிற்கான ஆக்ஸஸரீகள் அறிவிப்பு!! பைக்குடன் இவற்றையும் சேர்த்து வாங்கலாம்!
ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 (Scram 411) மோட்டார்சைக்கிளிற்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஹிமாலயன் அட்வென்ச்சர் பைக்கை அடிப்படையாக கொண்ட ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 மோட்டார்சைக்கிள் பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.03 லட்சத்தில் இருந்து ரூ.2.08 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அட்வென்ச்சர் க்ராஸ்ஓவர் என இந்திய சந்தைக்கு மிகவும் வித்தியாசமான பைக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ள ஸ்க்ராம் 411 -ஐ சாதாரண சாலைகளில் பயன்படுத்தும் அதேநேரம் பயமின்றி ஆஃப்-ரோடுகளுக்கும் கொண்டு செல்லலாம். இந்த பைக்கிற்கு மொத்தம் 7 விதமான நிறத்தேர்வுகளை ராயல் என்பீல்டு நிறுவனம் வழங்கியுள்ளது.

இந்த நிலையில் தற்போது ஸ்க்ராம் 411 பைக்கிற்கான அதிகாரப்பூர்வ ஆக்ஸஸரீகள் மற்றும் அவற்றிற்கான விலைகளையும் ராயல் என்பீல்டு வெளியிட்டுள்ளது. இவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது விருப்பத்திற்கு ஏற்ப பைக்கை தனிப்பயனாக்கம் செய்து பெறலாம். இதன்படி, ஸ்டைலை மெருக்கேற்றும் விதமாக ஸ்க்ராம் 411 பைக்கின் முன்பக்கத்தில் ஹேண்டில்பாரில் வழங்கப்படும் நீர்த்தேக்க மூடியை வாடிக்கையாளர்கள் விரும்பும் ஸ்டைலில் தேர்வு செய்யலாம்.

அலுமினியத்தால் செய்யப்படுகின்ற இது கருப்பு மற்றும் சில்வர் நிறங்களில் கூடுதல் ஆக்ஸஸரீயாக கிடைக்கும். இதன் மூலமாக பைக்கின் மொத்த காக்பிட் பகுதியையும் கூடுதல் ஸ்போர்டியர் ஆனதாக மாற்றிவிடலாம். இதேபோன்ற மற்றொரு கூடுதல் ஆக்ஸஸரீயாக, பெட்ரோல் டேங்க் மூடியை கருப்பு அல்லது சில்வர் நிறத்தில் தேர்வு செய்யலாம். ஆனால் இது நீர்த்தேக்க மூடியை காட்டிலும் சற்று விலைமிக்கது.

இவற்றுடன் எண்டூரோ பைக் போன்றதான தோற்றத்தை பெற வாடிக்கையாளர்கள் அலுமினியம் ஹேண்டில்பாரை கூடுதல் ஆக்ஸஸரீயாகவும் பெறலாம். இது வழக்கமான ஹேண்டில்பாரை காட்டிலும் 20% எடை குறைவானது என்றாலும், அதனை காட்டிலும் வலிமையானது மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது என்கிறது ராயல் என்பீல்டு. மேலும் இந்த ஹேண்டில்பாரின் இறுதி முனைகளின் ஃபினிஷிங்கையும் மாற்ற முடியும்.

போதுமான அளவிலான என்ஜின் பாதுகாப்பானும் கூடுதல் ஆக்ஸஸரீயாக சேர்க்கப்பட்டுள்ளது. பின்னோக்கி வளைக்கப்பட்டதாக வடிவமைக்கப்பட்டுள்ள இது மோதலின் போது என்ஜினை மட்டுமே பாதுகாக்கும். இது போதாது ஓட்டுனரின் கால்களையும் பாதுக்காக்க வேண்டுமென்போர் இதனை காட்டிலும் அளவில் பெரிய என்ஜின் பாதுகாப்பானை தேர்வு செய்யலாம்.

22மிமீ இரும்பு குழாயினால் தயாரிக்கப்படும் இந்த என்ஜின் பாதுகாப்பான்கள் துரும்பிடிக்காமல் இருக்க கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்படுகின்றன. தொடர்ச்சியாக ஆஃப்-ரோட்டில் தான் பயணம் செய்யவுள்ளீர்கள் என்றால், என்ஜின் அமைப்பில் ஒரு அங்கமாக இருக்கும் ஆயில் கூலர் மற்றும் மாஸ்டர் சிலிண்டர் உள்ளிட்டவற்றிற்கான பாதுகாப்பான்களை ஆக்ஸஸரீயாக வாங்கி பொருத்தி கொள்ளலாம்.

அலுமினியத்தால் செய்யப்படுகின்ற இவை கருப்பு & சில்வர் நிறத்தேர்வுகளில் கிடைக்கின்றன. இந்த வரிசையில் அட்வென்ச்சர் கை பாதுகாப்பானையும் சேர்த்து கொள்ளலாம். ஓட்டுனரின் கை விரல்களை பாதுகாக்கும் வகையில் ஹேண்டில்பாரில் வழங்கப்படும் இது, விபத்தின் போது அத்துடன் பைக் லிவர்களையும் பாதுகாக்கும். இவற்றுடன் ஹேண்டில்பாருக்கு மத்தியில் பொருத்தப்படும் ப்ரேஸ் பேட் -ஐயும் ராயல் என்பீல்டின் லோகோ உடன் ஆக்ஸஸரீயாக பெறலாம்.

இதேபோல் பைக் கவர்களும் ராயல் என்பீல்டின் லோகோ உடன் நேவி & கருப்பு என்கிற நிறத்தேர்வுகளில் வழங்கப்பட்டுள்ளன. ஜிப் உடன் வழங்கப்படும் இவற்றை எளிமையாக மடித்து வைத்துக்கொள்ளலாம். ஸ்க்ராம் 411 பைக்கிற்கான இந்த கூடுதல் ஆக்ஸஸரீகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலைகளை அட்டவணையாக கீழே காணலாம்.
| Himalayan Scram 411 Accessories | Price |
| Black Compact Engine Guards | ₹1,450 |
| Black Large Engine Guards | ₹1,650 |
| Black Oil Cooler Guard | ₹1,250 |
| Silver Oil Cooler Guard | ₹1,250 |
| Black Master Cylinder Guard | ₹700 |
| Silver Master Cylinder Guard | ₹700 |
| Black Adventure Handguards | ₹2,550 |
| Black Handlebar Brace Pad | ₹600 |
| Black Adventure Handlebar | ₹3,550 |
| Black Bar End Finishers | ₹1,200 |
| Black Front Reservoir Cap | ₹800 |
| Silver Front Reservoir Cap | ₹800 |
| Black Oil Filler Cap | ₹1,050 |
| Silver Oil Filler Cap | ₹1,050 |
| Water Resistant Bike Cover Navy Blue | ₹1,100 |
| Water Resistant Bike Cover Black | ₹1,100 |


Click it and Unblock the Notifications








