குறைவான விலையில் புதிய ராயல் என்பீல்டு பைக் அறிமுகம்... எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு போயிருவீங்க!
பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய சந்தையில் ராயல் என்பீல்டு ஹிமாலயன் (Royal Enfield Himalayan) பைக் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 (Royal Enfield Scram 411) இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் இந்திய சாலைகளில் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வந்தது.

இந்த பைக்கின் 'ஸ்பை' படங்கள் பலமுறை வெளியாகியுள்ளன. இதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதமே, ராயல் என்பீல்டு நிறுவனம் ஸ்க்ராம் 411 பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பிரச்னைகள் காரணமாக இந்த பைக்கின் அறிமுகம் தாமதமானது.

ஒரு வழியாக இந்த பைக் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கின் விலை குறைவான வெர்ஷன் என ஸ்க்ராம் 411 பைக்கை குறிப்பிடலாம்.

இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கிற்கு, மிக சிறந்த விலை குறைவான மாற்று தேர்வாக இருக்கும். ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கை முதல் முறையாக பார்ப்பவர்கள் இதனை ஹிமாலயன் என தவறாக நினைத்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது ராயல் என்பீல்டு ஹிமாலயன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பைக் என்பது தோற்றத்திலேயே தெரிகிறது.

எனினும் ராயல் என்பீல்டு ஹிமாலயனிடம் இருந்து ஸ்க்ராம் 411 பைக்கை தனித்து தெரிய செய்யும் வகையில் ஒரு சில டிசைன் அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை ராயல் என்பீல்டு ஹிமாலயனிடம் இருந்து ஸ்க்ராம் 411 பைக்கை வேறுபடுத்தி காட்டுகின்றன. ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் முன் பகுதியில் வட்ட வடிவ ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த பைக்கின் முன் பகுதியில் 19 இன்ச் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹிமாலயன் பைக்கின் முன் பகுதியில் 21 இன்ச் வீல் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் ஹிமாலயன் பைக்கின் பின் பக்க வீல்தான், ஸ்க்ராம் 411 பைக்கிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் இன்ஜின், சேஸிஸ், எக்ஸாஸ்ட் ஆகியவையும் கூட ஹிமாலயன் பைக்கில் இருந்துதான் பெறப்பட்டுள்ளன.

ஆனால் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் ஸ்பிளிட் சீட் வழங்கப்பட்டிருக்கும். ஸ்க்ராம் 411 பைக்கில் சிங்கிள் பீஸ் சீட் கொடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கில், அனலாக்-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் இந்த பைக்கில் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதி ஸ்டாண்டர்டாக கொடுக்கப்படுகிறது.

இதுதவிர இந்த பைக்கின் முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதே சமயம் நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக்கில் பொருத்தப்பட்டுள்ள அதே 411 சிசி சிங்கிள்-சிலிண்டர் இன்ஜின்தான், ஸ்க்ராம் 411 பைக்கிலும் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்டு நிறுவனம் இன்ஜினில் எந்தவொரு மாற்றத்தையும் செய்யவில்லை.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,500 ஆர்பிஎம்மில் 24.3 பிஹெச்பி பவரையும், 4,500 ஆர்பிஎம்மில் 32 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த இன்ஜினுடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 200 மிமீ ஆக இருக்கிறது. இந்த பைக் மொத்தம் 7 வண்ணங்களில் கிடைக்கும்.

கிராஃபைட் ரெட், கிராஃபைட் ப்ளூ, கிராஃபைட் யெல்லோ, ஒயிட் ஃப்ளேம், சில்வர் ஸ்பிரிட், ப்ளாசிங் ப்ளாக் மற்றும் ஸ்கைலைன் ப்ளூ ஆகியவைதான் அந்த 7 வண்ண தேர்வுகள். இந்திய சந்தையில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட (Yezdi Scrambler) பைக்கிற்கு, ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 நேரடி போட்டியாக இருக்கும்.

ராயல் என்பீல்டு ஸ்க்ராம் 411 பைக்கின் ஆரம்ப விலை 2.03 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் பைக்கின் டாப் மாடலின் விலை 2.08 லட்ச ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். மறுபக்கம் ராயல் என்பீல்டு ஹிமாலயன் பைக், 2.14 லட்ச ரூபாய் முதல் 2.22 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஹிமாலயன் பைக்கை விட குறைவான விலையில் ஸ்க்ராம் 411 பைக் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வரும் மாதங்களில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் இன்னும் பல்வேறு புதிய பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








