கோவா போக ஏர்போர்ட்ல கூட்டம் குவிய போகுது.. பீச்சுக்கு போக இல்ல, ராயல் என்பீல்டுக்காக! இத யாருமே எதிர்பார்க்கல!

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிற்கான புக்கிங்குகள் பிரத்யேகமாக கோவாவில் நடைபெற்று வரும் 2022 ரைடர் மேனியாவில் தொடங்கியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்பீல்டு நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் இரு 650 சிசி மோட்டார்சைக்கிள்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. கான்டினென்டல் ஜிடி 650 மற்றும் இன்டர்செப்டார் 650 இந்த இரு பைக் மாடல்களையே நிறுவனம் 650 சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ரைடர் மேனியா

இவற்றின் வரிசையில் வெகு விரைவில் ராயல் என்பீல்டு நிறுவனம் புதிய தயாரிப்பு ஒன்றை இணைக்க உள்ளது. சூப்பர் மீட்டியோர் 650 பைக் மாடலே அதுவாகும். இந்த பைக்கை சமீபத்தில் இத்தாலியின் மிலனில் நடைபெற்ற 2022 இஐசிஎம்ஏ வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இதுவே இந்த பைக் முழுமையாக காட்சியளிப்பது முதல் முறையாகும்.

குறிப்பாக, எந்தவொரு மறைப்புகளும் இன்றி சூப்பர் மீட்டியோர் 650 அதன் தரிசனத்தை வழங்கியது. இதனைத் தொடர்ந்து தற்போது கோவாவில் நடைபெற்று வரும் 2022 ரைடர் மேனியாவிலும் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய வருகையை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் இந்த நிகழ்வை நிகழ்த்தியிருக்கின்றது.

இதைத் தொடர்ந்து பிரத்யேகமாக நிறுவனம் இந்த நிகழ்வின் வாயிலாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிற்கான ப்ரீ-புக்கிங்கையும் தொடங்கியிருக்கின்றது. இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், யாரெல்லாம் தற்போது கோவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 2022 ரைடர் மேனியாவில் பங்கேற்றுக் கொண்டிருக்கின்றார்களோ அவர்களால் மட்டுமே பைக்கை ப்ரீ புக் செய்துக் கொள்ள முடியும்.

ஷோரூம் அல்லது ஆன்-லைனில் சூப்பர் மீட்டியோர் 650-ஐ புக் செய்ய முடியாது. நிறுவனம் இந்த பைக்கை 2023 ஜனவரியிலேயே அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அப்போதே அஃபீசியல் புக்கிங் ஆன்லைன் மற்றும் ஷோரூம்கள் வாயிலாகத் தொடங்கப்பட இருக்கின்றது. அதுவரை வேறு எங்கும் சூப்பர் மீட்டியோர் 650-க்கான புக்கிங்குள் நடைபெறாது என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு 2022 ரைடர் மேனியாவை நேரில் காண சென்றவர்களுக்கு ஜாக்பாட் அடித்ததைப் போல் அமைந்துள்ளது. அதேவேலையில், ராயல் என்பீல்டின் இந்த நடவடிக்கை அந்த நிறுவனத்தின் இருசக்கர வாகனத்தை அதிகம் விரும்புபவர்களைக் கவலையடைய செய்திருக்கின்றது.

புக்கிங்கைப் போலவே, ரைடர் மேனியாவில் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரியின்போதும் முன்னுரிமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் தனது ட்வின் பைக்குகளை தயாரித்து வரும் அதே பிளாட்பாரத்திலேயே புதிய சூப்பர் மீட்டியோர் 650 பைக்கையும் கட்டமைக்கும்.

இந்த பைக்கில் 648 சிசி பாரல்லல் ட்வின் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 47 பிஎச்பி பவரை 7,250 ஆர்பிஎம்மிலும், 52 என்எம் டார்க்கை 5,650 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றும். இந்த மோட்டாரில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இணைக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, கூடுதல் சிறப்பு வசதியாக ட்யூப்லெஸ் டயர்கள், ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம், யுஎஸ்டி ஃப்ரெண்ட் ஃபோர்க் உள்ளிட்ட அம்சங்கள் சூப்பர் மீட்டியோர் 650-இல் வழங்கப்பட இருக்கின்றன.

More from DriveSpark

Article Published On: Saturday, November 19, 2022, 19:28 [IST]
English summary
Royal enfield super meteor 650 booking
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+