ராயல் என்பீல்டை லேசா எட போட்டுட்டாங்க... தரமான சம்பவத்தை நவம்பர் 8 ஆம் தேதி அரங்கேற்ற போவதாக அறிவிப்பு!

650 சிசி இருசக்கர வாகன சந்ததையில் போட்டி அதிகரித்து வரும் நிலையில் ராயல் என்பீல்டு நிறுவனம் புதுமுக இருசக்கர வாகனத்தை வரும் நவம்பர் 8 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

ராயல் என்பீல்டை லேசா எட போட்டுட்டாங்க... தரமான சம்பவத்தை நவம்பர் 8 ஆம் தேதி அரங்கேற்ற போவதாக அறிவிப்பு! என்ன அது?

பெருத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் அதன் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. வரும் நவம்பர் 8 ஆம் தேதி நடைபெற இருக்கும் இஐசிஎம்ஏ மிலன் கண்காட்சியிலேயே சூப்பர் மீட்டியோர் 650 பைக் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. இதனை ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ டீசர் வாயிலாக உறுதிப்படுத்தியிருக்கின்றது.

ராயல் என்பீல்டை லேசா எட போட்டுட்டாங்க... தரமான சம்பவத்தை நவம்பர் 8 ஆம் தேதி அரங்கேற்ற போவதாக அறிவிப்பு! என்ன அது?

டீசரில் பைக்கின் பின் பக்கம் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக பைக்கின் பின்னழகு முழுமையாக தெரிகின்றது. இதுமட்டுமின்றி, பைக்கில் பைரல்லி பேந்தம் ஸ்போர்ட்ஸ்காம்ப் டயர் பயன்படுத்தப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஆனால், சோதனையோட்டத்தில் ஈடுபடுத்தப்பட்ட சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் சியாட் ஜூம் க்ரூஸ் டயர்களே பயன்படுத்தப்பட்டிருந்தன.

ராயல் என்பீல்டை லேசா எட போட்டுட்டாங்க... தரமான சம்பவத்தை நவம்பர் 8 ஆம் தேதி அரங்கேற்ற போவதாக அறிவிப்பு! என்ன அது?

ஆகையால், விற்பனைக்கு வரும் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் சியட் டயர்கள் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. தற்போது விற்பனையில் உள்ள 650 சிசி மோட்டார்சைக்கிள்கள் சிலவற்றில் சியாட் டயர்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. தற்போது பைக் பற்றிய விபரங்கள் பெரியளவில் வெளியிடப்படவில்லை.

ராயல் என்பீல்டை லேசா எட போட்டுட்டாங்க... தரமான சம்பவத்தை நவம்பர் 8 ஆம் தேதி அரங்கேற்ற போவதாக அறிவிப்பு! என்ன அது?

விரைவில் வெளியீடு செய்யப்பட இருப்பதால் அன்றைய தினம் இருசக்கர வாகனம் பற்றிய அனைத்து முக்கிய விபரங்களும் வெளியாகியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள், புதுமுக இருசக்கர வாகனத்தில் அனலாக் ஸ்பீடோ மீட்டர், டிஜிட்டல் திரை, ட்ரிப்பர் நேவிகேஷன் பேட், மீட்டியோர் 350 இல் இடம் பெற்றிருப்பதைப் போன்ற இன்ஸ்ட்ரூமென்டேஷன் உள்ளிட்ட அம்சங்கள் சூப்பர் மீட்டியோர் 650 இல் இடம் பெற இருப்பதாக தெரிவிக்கின்றன.

ராயல் என்பீல்டை லேசா எட போட்டுட்டாங்க... தரமான சம்பவத்தை நவம்பர் 8 ஆம் தேதி அரங்கேற்ற போவதாக அறிவிப்பு! என்ன அது?

இதுமட்டுமின்றி மீட்டியோர் 350 பைக்கின் உயர் வெர்ஷன் இது என்பதை பிரதிபலிக்கக் கூடிய அம்சங்கள் பலவும் இந்த இருசக்கர வாகனத்தில் இடம் பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த எந்தவொரு தகவலையும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. விரைவில் அனைத்து விபரங்களும் வெளியாக இருக்கின்றன.

ராயல் என்பீல்டை லேசா எட போட்டுட்டாங்க... தரமான சம்பவத்தை நவம்பர் 8 ஆம் தேதி அரங்கேற்ற போவதாக அறிவிப்பு! என்ன அது?

ராயல் என்பீல்டு தயாரிப்புகளிலேயே மலிவு விலைக் கொண்டதாக மீட்டியோர் 350 இருக்கின்றது. இதன் உயர்நிலை தேர்வாகவே சூப்பர் மீட்டியோர் 650 அமைய இருக்கின்றது. விற்பனையில் இருக்கும் மீட்டியோர் 350 பைக்கில் கிளாசிக் 350 பயன்படுத்தப்பட்டு வரும் புதிய 349 சிசி எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் 20.2 பிஎச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

ராயல் என்பீல்டை லேசா எட போட்டுட்டாங்க... தரமான சம்பவத்தை நவம்பர் 8 ஆம் தேதி அரங்கேற்ற போவதாக அறிவிப்பு! என்ன அது?

இதைவிட சூப்பர் பவர் கொண்டதாகவே சூப்பர் மீட்டியோர் 650 விற்பனைக்கு வர இருக்கின்றது. இதேபோல், மீட்டியோர் 350 பைக்கைப் போலவே குறைவான அதிர்வை வெளியேற்றக் கூடியதாக 650 இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஃபையர்பால் (Fireball), ஸ்டெல்லர் (Stellar) மற்றும் (Supernova) என்ற மூன்று விதமான வேரியண்டுகளில் மீட்டியோர் 350 விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல் பன்முக தேர்வுகளில் சூப்பர் மீட்டியோர் 650 விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராயல் என்பீல்டை லேசா எட போட்டுட்டாங்க... தரமான சம்பவத்தை நவம்பர் 8 ஆம் தேதி அரங்கேற்ற போவதாக அறிவிப்பு! என்ன அது?

இந்த மோட்டார்சைக்கிளில் கூடுதல் சிறப்பு வசதிகளாக ட்ரிப்பர் நேவிகேஷன், நடுத்தர டிஜிட்டல் கன்சோல், எல்இடி டிஆர்எல்கள், யுஎஸ்பி சார்ஜர் என நவீன கால அம்சங்கள் சில வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் பன்முக நவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாக ராயல் என்பீல்டின் புதிய சூப்பர் மீட்டியோர் 650 களமிறங்க இருக்கின்றது.

ராயல் என்பீல்டை லேசா எட போட்டுட்டாங்க... தரமான சம்பவத்தை நவம்பர் 8 ஆம் தேதி அரங்கேற்ற போவதாக அறிவிப்பு! என்ன அது?

ராயல் என்பீல்டு நிறுவனம் சூப்பர் மீட்டியோட்ர 650 பைக்கை மட்டுமின்றி இன்னும் சில தனது புதுமுகங்களை 2022 ரைடர் மேனியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தவகையில், நிறுவனம் ஷாட்கன் 650, ஹிமாலயன் 450, ஸ்க்ராம் 450 மற்றும் ஹண்ட் 650 ஆகிய மோட்டார்சைக்கிள்களையும் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பு: படங்கள் அனைத்தும் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை ஆகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, November 3, 2022, 18:53 [IST]
English summary
Royal enfield super meteor 650 teaser unveiled
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+