உச்சகட்ட எதிர்பார்ப்பு! இப்படி ஒரு பைக்கை நாளை அறிமுகம் செய்ய போகுதா ராயல் என்பீல்டு! நைட்லாம் தூக்கம் வராதே!
வாடிக்கையாளர்களின் உச்சகட்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புத்தம் புதிய ராயல் என்பீல்டு பைக் ஒன்று நாளை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள பைக்குகளில் ஒன்று ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 (Royal Enfield Super Meteor 650). இந்த பைக் இந்திய சாலைகளில் நீண்ட காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், நாளை (நவம்பர் 8) அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறும் எக்மா ஷோ-வில் (EICMA Show) சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை நாளை அறிமுகம் செய்யவுள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் டீசர்களை ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக வெளியிட்டு கொண்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னதாகதான் சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் அதிகாரப்பூர்வமான முதல் டீசரை ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியிட்டிருந்தது. இந்த வரிசையில் மீண்டும் ஒரு முறை சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் டீசர் ஒன்றை ராயல் என்பீல்டு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படத்தில், சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் பின் பகுதியை நம்மால் தெளிவாக பார்க்க முடிகிறது.

புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் எல்இடி டெயில் லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) பைக்கிலும் இந்த எல்இடி டெயில்லேம்ப்பை நம்மால் பார்க்க முடியும். அதே நேரத்தில் ட்வின் எக்ஸாஸ்ட் அமைப்பு மற்றும் ஸ்பிளிட் சீட் ஆகியவற்றையும் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் பெற்றுள்ளது.

ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கானது, க்ரூஸர் ரகத்தை சேர்ந்தது ஆகும். ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வரும் ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 (Royal Enfield Interceptor 650) மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 (Royal Enfield Continental GT 650) ஆகிய பைக்குகளுக்கு மேலாக இது நிலைநிறுத்தப்படவுள்ளது.

ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு பைக்குகளிலும் 648 சிசி, ஏர்-ஆயில் கூல்டு, ஃப்யூயல் இன்ஜெக்டட், நான்கு ஸ்ட்ரோக், பேரலல் ட்வின் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 47 ஹெச்பி பவர் மற்றும் 52 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. இதே இன்ஜின்தான் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கிலும் வழங்கப்படவுள்ளது.

ஆனால் பவர் அவுட்புட் வேறாக இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதாவது சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் பண்புகளுக்கு பொருந்தும் வகையில், இந்த இன்ஜினின் பவர் அவுட்புட்டை ராயல் என்பீல்டு நிறுவனம் ட்யூனிங் செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் டிரான்ஸ்மிஷன் பணிகளுக்கு, 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படலாம்.

அத்துடன் ஸ்லிப் மற்றும் அஸிஸ்ட் க்ளட்ச் வசதியும் புதிய ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில் வழங்கப்பட்டிருக்கும். இதற்கிடையே ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் எல்இடி டெயில் லேம்ப் உடன், எல்இடி ஹெட் லேம்ப்பையும் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கை அதிக எடை கொண்ட மாடலாக உருவாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதாவது ராயல் என்பீல்டு இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய இரண்டு பைக்குகள் உடன் ஒப்பிடும்போது புதிய சூப்பர் மீட்டியோர் 650 பைக்கின் எடை 80 கிலோ அதிகமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக்கில், ட்ரிப்பர் நேவிகேஷன் வசதியும் வழங்கப்பட்டிருக்கும்.

சூப்பர் மீட்டியோர் 650 பைக் நாளை பொது பார்வைக்கு மட்டுமே கொண்டு வரப்படவுள்ளதாக ராயல் என்பீல்டு நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது இந்த பைக்கின் டிசைன் அம்சங்கள், வசதிகள், இன்ஜின் செயல்திறன் போன்ற தகவல்கள் மட்டுமே அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும். ஆனால் விலை எவ்வளவு? என்பது அறிவிக்கப்படாது.

முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் நாளில்தான், ராயல் என்பீல்டு நிறுவனம் விலை எவ்வளவு? என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும். அனேகமாக நடப்பு 2022ம் ஆண்டு முடிவதற்குள்ளாகவோ அல்லது 2023ம் ஆண்டின் தொடக்கத்திலோ ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் முறைப்படி சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








