கோவா 2022ரைடர் மேனியாவில் தரிசனம் வழங்கிய ராயல்என்பீல்டின் புதிய பைக்! எல்லாரும் இதோட வருகைக்குதான் வெயிட்டிங்

ராயல் என்பீல்டு, அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மீட்டியோர் 650 பைக்கை 2022 ரைடர் மேனியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இருசக்கர வாகன பிரியர்களின் எதிர்பார்ப்பைப் பெரிதும் தூண்டி வந்த ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 பைக் இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. கோவா நடைபெற்று வரும் 2022 ரைடர் மேனியா வாயிலாக இப்பைக்கை நிறுவனம் வெளியீடு செய்துள்ளது.

கோவா

சமீபத்தில் இத்தாலியின் முக்கிய நகரங்களில் ஒன்றான மிலனில் 2022 இஐசிஎம்ஏ என்ற பெயரில் பைக் கண்காட்சி நடைபெற்றது. இங்கே இந்த பைக் முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, தற்போது இந்தியாவில் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. 2023 ஆம் ஆண்டிற்குள் இந்த பைக்கின் இந்திய வருகை அரங்கேறிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் உருவம் மீட்டியோர் 350 பைக்கை லேசாக பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது.

எஞ்ஜின் மற்றும் பிற முக்கிய அம்சங்கள் விஷயத்தில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ட்வின் பைக்குகளான இன்டர்செப்டார் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. ட்வின் பைக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 648 சிசி திறன் கொண்ட பாரல்லல் ட்வின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதன் எஞ்சின் அதிகபட்சமாக 46.2 பிஎச்பி பவரையும், 52 என்எம் டார்க் திறனையும் உற்பத்தி செய்யும் சிறந்த இயக்க அனுபவத்திற்காக 43 மிமீ அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், டூயல் ஸ்பிரிங் செட்-அப் வழங்கப்பட்டுள்ளது. இது ஆஃப்-ரோடு மற்றும் ஆன்-ரோடு என எந்த சாலையாக இருந்தாலும் சமாளிக்கும்.

இத்துடன், அதிநவீன தொழில்நுட்ப வசதியாக ட்வின் பாட் இன்ஸ்ட்ரூமென்டேசன் கருவிகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டிருக்கும். இதில் ஒன்று டிஜிட்டல் அனலாகவும், மற்றொன்று ட்ரிப்பர் நேவிகேஷன் சிஸ்டமாகவும் செயல்படும். ட்ரிப்பர் நேவிகேஷன் வாயிலாக டர்ன்-பை-டர்ன் வழித் தடம் பற்றிய தகவலை அறிந்துக் கொள்ள முடியும். இதேபோல், டிஜிட்டல் அனலாக் வாயிலாக பன்முக முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று தெரிய வந்துள்ளது.

இதுதவிர, எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லைட்டுகள் உள்ளிட்டவையும் சூப்பர் மீட்டியோர் 650 மோட்டார்சைக்கிளில் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிச்சயம் நவீன காலத்திற்கு ஏற்ற சிறப்பான அம்சங்களாக வாடிக்கையாளர்களை கவரும். இதுமட்டுமின்றி இன்னும் பல சிறப்பம்சங்கள் தாங்கிய வாகனமாக இந்த பைக்கை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விற்பனைக்கு வர இருக்கின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த பைக்கை ஸ்டாண்டர்டு மற்றும் டூரர் ஆகிய இருவிதமான ஸ்டைல்களில் விற்பனைக்கு வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது நிச்சயம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதமாக அமையும்.

இதில் ஸ்டாண்டர்டு தேர்வை 5 விதமான நிறங்களிலும், டூரர் தேர்வை 2 விதமான நிற தேர்விலும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இதன் டூரர் வேரியண்டில் டூரர் தோற்றத்தை வழங்கும் விதமாக உயரமான விண்ட் ஸ்கிரீன், பில்லியன் ரைடருக்கான பேக்ரெஸ்ட், இரட்டை இருக்கை அமைப்பு, பேனியர்கள், டூரிங் ஹேண்டில் பார் மற்றும் பெரிய ஃபூட் பெக்குகள் உள்ளிட்ட தனித்துவமான அம்சங்கள் பைக்குகள் இடம் பெற்றிருக்கும்.

English summary
Royal enfield super meteor 650 unveiled in goa
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X