ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்கக் கூடிய மலைப்பாதை பயன்பாட்டு வசதிக் கொண்ட இ-மிதிவண்டியை அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ பயணிக்கக் கூடிய எலெக்ட்ரிக் மிதிவண்டியை அறிமுகம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல டிமாண்ட் கிடைத்து வரும்நிலையில் அதிக தூரம் பயணிக்கக் கூடிய புதுமுக இ-சைக்கிளை முன்னணி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

ஹார்லி டேவிட்சன் (Harley-Davidson) நிறுவனமே ஒற்றை சார்ஜில் அதிக தூரம் பயணிக்கும் எலெக்ட்ரிக் சைக்கிளை அறிமுகப்படுத்திய நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் சீரியல் 1 (Serial 1) எனும் பிராண்டின்கீழ் மின்சார சைக்கிள் உற்பத்தி மற்றும் விற்பனை பணிகளை மேற்கொண்டு வருகின்றது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

இந்த நிலையிலேயே சீரியல் 1 பிராண்டின்கீழ் புதுமுக பாஷ்/எம்டிஎன் (BASH/MTN) எனும் எலெக்ட்ரிக் மிதிவண்டியை அது அறிமுகம் செய்திருக்கின்றது. இது மவுண்டைன் ரக மிதிவண்டியாகும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மோஸ்/சிடிஒய் (MOSH/CTY) மற்றும் ரஷ்/சிடிஒய் (RUSH/CTY) மாடல்களுடன் சேர்ந்து இப்புதிய எலெக்ட்ரிக் சைக்கிளும் இனி உலக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியாவில் இது விற்பனைக்குக் கிடைப்பது பற்றிய எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.

ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

இவ்விரு மாடல்களும் நகர்ப்புற பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இ-சைக்கிள்களாகும். ஆனால், தற்போது அறிமுகமாகியிருப்பது மலைப் பாதையில் சாகச பயணங்களை மேற்கொள்வோருக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை மலைப் பகுதியில் வாழும் மக்கள் தங்களின் வழக்கமான போக்குவரத்து பயன்பாட்டுகளுக்கும் உபயோகித்துக் கொள்ள முடியும்.

ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

அதேநேரத்தில், இந்த இ-சைக்கிளை ஹார்ட் கோர் ட்ரைல் ரைடர்களின் பயன்பாட்டிற்காக உருவாக்கவில்லை என்றும், இதனை மிகவும் சாஃப்டான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு ஏற்பவே தாங்கள் உருவாக்கியிருப்பதாகவும் சிரீயல்1 நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகையால், மிக அதீத சாகசத்திற்கு ஏற்ற இ-சைக்கிள் இது இல்லை என்பது தெரிய வந்திருக்கின்றது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

சீரியல் 1 பாஷ்/எம்டிஎன் எலெக்ட்ரிக் சைக்கிளில் 529Wh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அதேநேரத்தில், மிகவும் கடினமான சூழல்களில் இது பயன்படுத்தப்பட்டால் ரேஞ்ஜ் திறன் வெளியேற்றத்தில் சற்று குறைவு ஏற்படலாம்.

ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

அதேநேரத்தில், எந்த மாதிரியான நிலப்பரப்பாக இருந்தாலும் இந்த இ-சைக்கிள் சமாளித்துவிடும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. எலெக்ட்ரிக் சைக்கிள் முழுமையான சார்ஜை அடைய ஐந்து மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும். அதுவே, 75 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 2.5 மணி நேரங்களே போதும் என கூறப்படுகின்றது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

மிக சிறப்பான பயன்பாட்டை வழங்கும் வகையில் இந்த இ-மிதிவண்டியை சீரியல் 1 உருவாக்கியிருக்கின்றது. மிஷ்லின் இ-வைல்டு க்நாப்பி டயர்கள், எஸ்ஆர் சன்டூர் என்சிஎக்ஸ் இருக்கை, நான்கு பிஸ்டன்கள் கொண்ட 203 மிமீ ஹைட்ராலிக் டிஸ்க் பிரக்குகள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்கள் சைக்கிள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

ஆனால், இந்த சைக்கிளில் சஸ்பென்ஷன் செட்-அப் வழங்கப்படவில்லை. முன் வீல் மற்றும் பின் வீல் என இரண்டு பக்கங்களிலும் சஸ்பென்ஷன் வழங்கப்படவில்லை. இருப்பினும், இ-சைக்கிளின் இயக்கம் அலாதியானதாக இருக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், சஸ்பென்ஷன் அம்சம் இல்லாத ஓர் காரணத்தினால்தான் இந்த இ-சைக்கிள் ஹார்ட்கோர் மலைப் பயணங்களுக்கு ஏற்ற வாகனம் இல்லை தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு முறை சார்ஜ் பண்ணா போதும் 95 கிமீ தாராளமா பயணிக்கலாம்... செம்மையான எலெக்ட்ரிக் மிதிவிண்டி அறிமுகம்!

சீரியல்1 நிறுவனம் பாஷ்/எம்டிஎன் எலெக்ட்ரிக் சைக்கிளை மிக மிக குறவான எண்ணிக்கையையே விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. 1,050 யூனிட்டுகள் மட்டுமே விற்பனைக்காக இ-சைக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு யூனிட் மட்டும் 3,999 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கின்றது. அதாவது, இந்திய மதிப்பில் தோராயமாக ரூ. 3,10,670-க்கு இ-சைக்கிள் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 31, 2022, 19:10 [IST]
English summary
Serial1 launches electric mountain bike here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+