பிரபல நடிகருக்கு அதிக பாதுகாப்பான ஹெல்மெட்டை பரிசளித்த மற்றுமொரு திரை பிரபலம்... எதுக்குனு தெரியுமா?
பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த ஓர் நடிகர் வேறொரு நடிகருக்கு அதிக பாதுகாப்பான ஹெல்மெட்டை பரிசளித்து ஆச்சரியப்படுத்தியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம், வாங்க.

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகர்களில் இஷான் கட்டரும் ஒருவர். இவருக்கே அதோ பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த மற்றுமொரு பிரபலம் அதிக பாதுகாப்பான வசதிகள் கொண்ட ஹெல்மெட்டை பரிசளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாகித் கபூர் இவரே ஹெல்மெட்டை பரிசாக வழங்கியவர் ஆவார்.

சமீபத்தில் இஷான் கட்டர் ட்ரையம்ப் நிறுவனத்தின் அதிக விலைக் கொண்ட போனேவில்லே ஸ்பீடு ட்வின் (Triumph Bonneville Speed Twin) மாடல் பைக்கை வாங்கினார். இந்த பைக் இந்தியாவில் ரூ. 11 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்கப்பட்டு வருகின்றது. வரி மற்றும் பிற கட்டணம் விதிக்கப்படும் நிலையில் இந்த பைக் ரூ. 13 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

இத்தகைய உச்சபட்ச விலைக் கொடுத்தே இஷான் கட்டர் பைக்கை வாங்கியிருக்கின்றார். இதனை அறிந்து, அவரது பயணங்கள் அனைத்தும் பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதற்காக அதிக பாதுகாப்பான ஹெல்மெட்டை நடிகர் ஷாகித் கபூர் பரிசாக வழங்கியிருக்கின்றார். இந்த ஹெல்மெட்டின் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்கள் பற்றிய விபரங்கள் வெளியாகவில்லை.

இருப்பினும், இதன் விலை பல ஆயிரங்கள் தொடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ட்ரையம்ப் போனேவில்லே ஸ்பீடு ட்வின் ஓர் நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டர் ரக பைக்காகும். இது அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியது. மிக தெளிவாகக் கூற வேண்டுமானால் மணிக்கு 128-க்கும் அதிகமான கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்டதே இந்த பைக்.

இந்த உச்சபட்ச திறன் வெளியேற்றத்திற்காக பைக்கில் 1200 சிசி, பாரல்லல் ட்வின் மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது ஓர் லிக்யூடு கூல்டு மோட்டாராகும். இந்த மோட்டாரில் சூப்பர் ஃபாஸ்ட் திறன் வெளியேற்றத்திற்காக, புதிய இன்டேக் சிஸ்டம், புதிய உயர் கம்ப்ரஷ்ஷன் பிஸ்டன்கள் மற்றும் பிரஷ்ட் ஃபினிஷ் எக்சாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவையே எஞ்ஜினை அதிக திறனை வெளிப்படுத்தக் கூடியவையாக அந்த மோட்டாரை மாற்றியிருக்கின்றன. 100 பிஎஸ் மற்றும் 112 என்எம் டார்க்கை மோட்டார் வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய மிக சூப்பரான திறனை இந்த மோட்டார் வெளியேற்றும் என்ற காரணத்தினாலேயே ட்ரையம்ப் நிறுவனம் இதனை 'உயர் திறன்' கொண்ட மோட்டார் என கூறுகின்றது.

மேலும், இந்த மாதிரியான உச்சபட்ச திறனில் இருசக்கர வாகனத்தை இயக்கும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இஷான் கட்டருக்கு ஹெல்மெட் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. ஹெல்மெட்டை பரிசளித்திருக்கும் இந்த நடிகர்தான் மிக சமீபத்தில் மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 (Mercedes-Maybach S580) சொகுசு காரை வாங்கினார்.

இந்த காரை அவரது 41-வது பிறந்த நாளை முன்னிட்டு வாங்கினார். இந்த ஆடம்பர காரின் விலை ரூ. 2.5 கோடிகள் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். சிறப்பு கஸ்டமைசேஷன் மற்றும் வரி போன்ற பிற கட்டணங்கள் சேர்ப்பிற்கு பின்னர் இந்த கார் இன்னும் பல மடங்கு அதிக விலையில் விற்கப்படும்.

மெர்சிடிஸ் மேபேக் எஸ்580 காரை ஒட்டுமொத்த வாகன உலகமும் உல்லாச கப்பலாக பார்க்கின்றது. இதற்கு ஏற்ப பன்முக சொகுசு வசதிகள் இக்காரில் வாரி வழங்கப்பட்டுள்ளன. ரெக்லைனபில் இருக்கைகள், பின்பக்க பயணிகளுக்கு தனி திரை, டேபிள், ஃபூட் ரெஸ்ட்கள், மெர்சிடிஸின் டூர்மென் அம்சம் என பல சிறப்பு வசதிகள் இக்காரில் இடம் பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

மெர்சிடிஸ் நிறுவனம் இந்த காரை 180 மிமீ நீளமான வீல்பேஸில் உருவாக்கியிருக்கின்றது. அதேநேரத்தில் இக்காரின் நீளம் 5.5 மீட்டர் ஆகும். இந்த பிரமாண்ட அளவுகள் இக்கார் அதிக இட வசதிக் கொண்டவை என்பது உறுதிப்படுத்தும் வகையில் இருக்கின்றன. இதுமாதிரியான அம்சங்களினாலேயே இக்காரை சாலையில் மிதக்கும் கப்பல் என குறிப்பிடுகின்றனர்.

இந்த காரை போலவே இஷான் கட்டர் வாங்கியிருக்கும் பைக்கும் அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. மழை, ரோடு மற்றும் ஸ்போர்ட் ரைடிங் என மூன்று விதமான ரைடிங் மோட்கள் இப்பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இது தவிர, டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்களும் பைக்கில் இடம் பெற்றிருக்கின்றன.

மேலும், அதிக பாதுகாப்பான பயணத்திற்கு உதவும் வகையில் முன் பக்க வீலில் 320 மிமீ டிஸ்க், பின் பக்க வீலில் 220 மிமீ டிஸ்க் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன. இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளால் ட்ரையம்ப் போனேவில்லே ஸ்பீடு ட்வின் பைக் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் இதன் விலை தற்போது விற்பனையில் இருக்கும் சில கார் மாடல்களைக் காட்டிலும் மிக அதிகமானதாகக் காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








