இந்த ஸ்கூட்டர வாங்குவதற்கு பதிலா ஒரு காரே வாங்கலாம்... ஆனாலும் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆள் இருக்கு ஏன் தெரியுமா

இங்கிலாந்தைச் சேர்ந்த சைலென்ஸ் நிறுவனம் S01+ என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த முழு விபரங்களைக் காணலாம்.

இந்த ஸ்கூட்டர வாங்குவதற்குப் பதிலா ஒரு காரே வாங்கலாம் . . . ஆனாலும் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆள் இருக்கு ஏன் தெரியுமா ?

இங்கிலாந்தின் பிரபலமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனம் சைலென்ஸ். இந்நிறுவனம் தற்போது தனது S01 ஸ்கூட்டர் சீரிஸில் புதிதாக S01+ என்ற எலெக்டரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே இந்த சீரீஸில் 5 ஸ்கூட்டர்கள் உள்ள நிலையில் S01+ ஸ்கூட்டருடன் சேர்ந்து 6 ஸ்கூட்டர்கள் விற்பனையாகின்றன. S01+, S01 அர்பன், S01 கனெக்டட், S02 அர்பன், S02 பிஸ்னஸ் மற்றும் S02 பிஸ்னஸ் பிளஸ் ஆகிய ஸ்கூட்டர்கள் விற்பனையாகின்றன.

இந்த ஸ்கூட்டர வாங்குவதற்குப் பதிலா ஒரு காரே வாங்கலாம் . . . ஆனாலும் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆள் இருக்கு ஏன் தெரியுமா ?

S01+ ஸ்கூட்டரை பொருத்தவரை குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே இந்த 2022ம் ஆண்டு விற்பனைக்கு வரும் அதற்கு மேல் இந்தாண்டிற்கு விற்பனை செய்ய திட்டமிட்டதுமில்லை. இந்த ஸ்கூட்டருக்கான புக்கிங் அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் துவங்கியுள்ளது. இந்தஸ்கூட்டரின் விலை 6,795 பவுண்ட்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ6.50 லட்சம் என்ற விலையில் விற்பனையாகிறது. இதற்கான இஎம்ஐ வசதியையும் அந்நிறுவனம் வழங்குகிறது. 124.26 பவுண்ட் அதாவது ரூ12000 என்ற இஎம்ஐ செலுத்தியும் இந்த ஸ்கூட்டரை பெறலாம்.

இந்த ஸ்கூட்டர வாங்குவதற்குப் பதிலா ஒரு காரே வாங்கலாம் . . . ஆனாலும் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆள் இருக்கு ஏன் தெரியுமா ?

சைலென்ஸ் S01+ ஸ்கூட்டரை பொருத்தவரை சைலென்ஸ் S01 கனெக்டெட் ஸ்கூட்டரை போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் டிசைன் கிட்டத்தட்ட அதே டிசன் தான் S01+ ஸ்கூட்டரில் ஸ்போர்ட்டியர் லுக் க்ரே தீம் உடன் கிளாஸ் பிளாக் டீட்டெயிலிங் உடன் இது கொடுக்கப்பட்டுள்ளது. S01 கனெக்டெட் ஸ்கூட்டர் 5,695 பவுண்ட் அதாவது ரூ 5.45 லட்சம் என்ற விலையில் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்கூட்டர வாங்குவதற்குப் பதிலா ஒரு காரே வாங்கலாம் . . . ஆனாலும் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆள் இருக்கு ஏன் தெரியுமா ?

இந்த ஸ்கூட்டரின் முக்கியமான அம்சம் இதன் ஹெட்லேம்ப், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முன்பக்க தோற்றம், சரிவாக அமைக்கப்பட்ட விண்ட் ஸ்கிரீன், டிரெண்டியான ரியர் வியூ கண்ணாடி, சிங்கிள் பீஸ் சீட், பெரிய டெயில் செக்ஷன், ஆகியன உள்ளன. S01+ பிராண்டிங் இதன் பின்பக்கத்திலும் வீலிலும் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வீல் மற்றும் பாடி பேனல்களில் சிவப்பு ஹைலேட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது க்ரே- கருப்பு நிற தீமிற்கு எடுப்பாக இருக்கிறது. சிவப்பு நிற நூலில் பைக்கின் சீட் தையல் கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல பேட்டரி ரிங் டிசைனில் சிவப்பு நிற எல்இடி பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர வாங்குவதற்குப் பதிலா ஒரு காரே வாங்கலாம் . . . ஆனாலும் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆள் இருக்கு ஏன் தெரியுமா ?

ரைடிங்கை பொறுத்தவரை எர்கோனமிக்கல் போசிஷனில் ஹேண்டில் பார் கொடுக்கப்பட்டுள்ளது. சொகுசான சீட் வசதி இருக்கிறது. பின்பக்க சீட் சிறியதாகக் கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் நகர்ப்புற பயணத்திற்கு இது சிறந்ததாகவே இருக்கும். ஃபிளோர் பகுதிகள் தினந்தோறும் நமக்குத் தேவையான சாமான்களை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர வாங்குவதற்குப் பதிலா ஒரு காரே வாங்கலாம் . . . ஆனாலும் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆள் இருக்கு ஏன் தெரியுமா ?

இந்த சைலென்ஸ் S01+ ஸ்கூட்டரில் முக்கிய அம்சமாக புஷ் டூ பாஸ் மோட் இருக்கிறது. இதில் ஸ்கூட்டர் அதிகபட்சமாக 109 கி.மீ வேகத்தில் பயணிக்கும். இது ஓவர் டேக் செய்யும் போது உதவிக்கரமாக இருக்கும். சஸ்பென்சன் மாற்றியமைக்கப்பட்டு அட்ஜெஸ்டவுள் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.இதைப் பயனர்களே சாஃப்டாக வேண்டுமா ஸ்டிஃபாக வேண்டுமா எனத் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த ஸ்கூட்டர வாங்குவதற்குப் பதிலா ஒரு காரே வாங்கலாம் . . . ஆனாலும் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆள் இருக்கு ஏன் தெரியுமா ?

பிரேக்கிங் சிஸ்டத்தை பொருத்தவரை லைட் வெயிட் டிஸ்க் வேவ் பிரேக்கிங் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. இந்த சைலென்ஸ் S01+ ஸ்கூட்டரில் 7.5 கி.வா மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இது 12.23 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும், இதில் 5.6 கி.வா.ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 100 கி.மீ வேகம் வரை செல்லும் திறன் கொண்டது. அதை விட அதிக வேகத்தைக் கொடுக்க முடியும் என்றாலும் அந்நாட்டு விதிகளின் படி 100 கி.மீ வேகத்திற்கு மேல் செல்ல முடியாத படி டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்கூட்டர வாங்குவதற்குப் பதிலா ஒரு காரே வாங்கலாம் . . . ஆனாலும் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆள் இருக்கு ஏன் தெரியுமா ?

இந்த சைலென்ஸ் S01+ ஸ்கூட்டரை பொருத்தவரை மொத்தம் 4 மோட்கள் உள்ளன. எக்கோ, சிட்டி, ஸ்போர்ட், மற்றும் ரிவர்ஸ் ஆகிய 4 விதமான மோட்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 320 கிலோ வரையிலான எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டது. இதன் இரண்டு வீல்களிலும் சிபிஎஸ் டிஸக் பிரேக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த ஸ்கூட்டர வாங்குவதற்குப் பதிலா ஒரு காரே வாங்கலாம் . . . ஆனாலும் இந்த ஸ்கூட்டரை வாங்க ஆள் இருக்கு ஏன் தெரியுமா ?

இந்த சைலென்ஸ் S01+ ஸ்கூட்டர் முழு சார்ஜில் அதிகபட்சமாக 137 கி.மீ வரை பயணிக்கும் என WMTC தெரிவித்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு சார்ஜ் ஏற்ற 240வா சார்ஜர் கொடுக்கப்படுகிறது. இது 6-8 மணி நேரத்தில் முழு பேட்டரியையும் சார்ஜ் ஏற்றுகிறது. மேலும் இந்நிறுவனம் ஸ்கூட்டருக்காக 2 ஆண்டுகளும், பேட்டரிக்காக 3 ஆண்டுகளும் வாரண்டியை வழங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, July 25, 2022, 17:14 [IST]
English summary
Silence S01 Plus Electric Scooter launched Range Features price details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+