வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

ஓலா நிறுவனம் விற்பனைச் செய்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்று ஒற்றை முழு சார்ஜில் 200 கி.மீட்டர் தூரம் வரை பயணித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களைக் கீழே உள்ள பதிவில் பார்க்கலாம்.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

சமீப சில காலமாக ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வரும்நிலையில், தற்போது அந்நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்குறித்த ஆச்சரியமளிக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

புதிய ஓஎஸ் அப்டேட்டிற்கு பின்னர் தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஓர் முழுமையான சார்ஜில் 200 கிமீ தூரம் வரை பயணித்திருப்பதாக ஓர் ஓலா எஸ்1 ப்ரோ உரிமையாளர் வியப்பில் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் சமீபத்தில் அதன் மின்சார ஸ்கூட்டர்களுக்கு அப்டேட்டினை அறிவித்தது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் செயல்பாட்டையும், ரேஞ்ஜ் திறனையும் சிறப்பானதாக மாற்றும் வகையில் இந்த அப்டேட் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையிலேயே புதிய சாஃப்ட்வேர் அப்டேட்டிற்கு பின்னர் தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 202 கிமீ வரை பயணித்திருப்பதாக கார்த்திக் எனும் நபர் தெரிவித்துள்ளார்.

புதிய பிகாஸ் பிஜி டி15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... வெறும் 499 ரூபாய் செலுத்தி இங்கே முன்பதிவு செய்யுங்கள்!

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

இதுகுறித்து அந்த இளைஞர் அவரது டுவிட்டரில் பதிவில், "இலக்கு அடையப்பட்டுவிட்டது. ஒற்றை முழு சார்ஜில் 202 கிமீ என்னுடைய ஸ்கூட்டர் பயணித்துள்ளது. ஈகோ மோடில் 50 சதவீதம் டிராஃபிக், 50 சதவீதம் நெடுஞ்சாலையில் பயணித்ததாக" தெரிவித்துள்ளார். இளைஞர் இந்த பதிவை நிறுவனத்தின் சிஇஓ பவிஷ் அகவர்வால் மற்றும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டுள்ளார்.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

இந்த பதிவிற்கு பவிஷ் அகர்வால் தற்போது பதிலளித்துள்ளார். அதில், "கார்த்திக் நீங்கள் ஓலா எஸ்1 ஸ்கூட்டரில் 200 கிமீ பயணித்து புதிய சாதனையைப் படைத்திருக்கின்றீர்கள். நாங்கள் வாக்குறுதியளித்தபடி ஜெருவா எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இலவசமாக வழங்குவோம்" என தெரிவித்துள்ளார்.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

இதுமட்டுமின்றி விரைவில் பெட்ரோல் டூ-வீலர்கள் வரலாற்றில் மட்டுமே இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். அதாவது, இந்த உலகை மின்சார வாகனங்களே ஆளும். பெட்ரோலால் இயங்கும் வாகனங்களை மக்கள் தவிர்ப்பார்கள் என்பதையே இதன் வாயிலாக கூறியுள்ளார்.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

இளைஞர் கார்த்திக் வெளியிட்டிருக்கும் பதவின் வாயிலாக அவர் ஈகோ மோடில், மணிக்கு 27 கிமீ தொடங்கி 48 கிமீ வரையிலான வேகத்திலேயே பயணித்திருக்கின்றார். இதன் வாயிலாகவே அவரால் ஒற்றை முழு சார்ஜில் 202 கி.மீட்டர் தூரத்தை அசால்டாக கடக்க முடிந்திருக்கின்றது. இன்னும் பல ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்பாட்டாளர்களும் இதுபோல் அதிக ரேஞ்ஜை பெற்று வருகின்றனர்.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

அதேநேரத்தில் பலர் நிறுவனத்தின் தயாரிப்பால் பல்வேறு இன்னல்களையும் அடைந்து வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் ஓர் முதியவர் அதிவேகத்தில் ரிவர்ஸில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இயங்கிய காரணத்தினால் கடுமையான காயங்களுக்கு ஆளாகினார். இதற்கு முன்னதாகவும் இதுபோல் ஓர் விபத்து நிகழ்வு ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ந்து அரங்கேறியதில் இளைஞர் ஒருவர் பெரும் காயங்களுக்கு ஆளாகினார்.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

இவ்வாறு வரவேற்பு மற்றும் முரண்பாடான என இருவிதமான தகவல்களும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சார்ந்து வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதேவேலையில், இந்நிறுவனத்தின் மின்சார ஸ்கூட்டர்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தையே ஓரங்கட்டும் வகையில் அதற்கு மக்கள் நல்ல டிமாண்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றனர்.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

கடந்த 2022 மார்ச் மாதத்தில் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் 6,570 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின. ஆனால், ஓலா எலெக்ட்ரிக்கோ 12,683 யூனிட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாடு முழுவதும் விற்பனைக்கு வழங்கியிருக்கின்றது. இத்தனைக்கு இந்நிறுவனம் ஒரு விற்பனையகத்தைக்கூட இதுவரை நிறுவவில்லை.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

ஆம், ஓலா எலெக்ட்ரிக் அதன் தயாரிப்புகளைக் குறைந்த விலையில் விற்பனைக்கு வழங்க வேண்டும் என்பதற்காக ஷோரூம்கள் இல்லாநிலையில் அதன் தயாரிப்புகளை விற்பனைச் செய்து வருகின்றது. நிறுவனம் நேரடியாக மக்களுக்கு மின்சார வாகனங்களை விநியோகம் செய்து வருகின்றது. இத்தகைய நிலையிலும் மிக சிறப்பான வரவேற்பை ஓலா எலெக்ட்ரிக் பெற்று வருவது மிகுந்த ஆச்சரியமளிக்கும் தகவலாக பார்க்கப்படுகின்றது.

வழியில வேறு எங்கேயுமே சார்ஜ் போடல... 200 கிமீட்டரை அசால்டாக கடந்த ஓலா எலெக்ட்ரிக் உரிமையாளர்!

ஓலா எலெக்ட்ரிக் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ எனும் இரு மாடல் மின்சார ஸ்கூட்டர்களை நாட்டில் விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதில் எஸ்1 தேர்விற்கு ரூ. 99,999 விலையும், எஸ்1 ப்ரோ தேர்விற்கு ரூ. 1.29 லட்சம் விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தகவலின்படி எஸ்1 ஓர் முழுமையான சார்ஜில் 121 கிமீ ரேஞ்ஜையும். எஸ்1 ப்ரோ 135 கிமீ - 181 கிமீ வரையிலும் ரேஞ்ஜை வழங்கும்.

Most Read Articles
English summary
Sola s1 owner reaches 200 kms with a single charge here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X