பாசத்துக்கு முன்னாடி காசு எல்லாம் ஒன்னுமே இல்லைங்க... அப்பாவுக்காக சூப்பரான சம்பவத்தை செய்த மகன்...

தனது தந்தையின் 59 வது பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றுவதற்காக இளைஞர் ஒருவர் மிக சூப்பரான பரிசை வழங்கி அசத்தியிருக்கின்றார். பாலிய வயதில் மிகப் பெரிய கனவாக இருந்ததை மகன் வாங்கிக் கொடுத்ததில் தந்தை அடைந்த பூரிப்பு பற்றிய சுவாரஷ்யவமான தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

நம்மில் பலருக்கு நிறைவேறாத ஆசைகள் என பல இருக்கும். குறிப்பாக, 90-ஸ் கிட்ஸ்களுக்கு லைட் எரியும் ஷூ, சக்திமான் உடை அணிந்து பள்ளி போவது என பல கனவுகள் இருக்கும். இவற்றில் சில நிறைவேறி இருக்கலாம், பல இப்போதும் நிறைவேறாமல் இருக்கலாம். அந்தவகையில், ஓர் தந்தையின் நிறைவேறாத ஆசையையே மகன் தற்போது பூர்த்தி செய்திருக்கின்றார். அவரின் தந்தையின் கனவு சக்திமான் உடையோ, அல்லது லைட் எரியும் ஷூவோ என நினைத்துக் கொள்ள வேண்டாம்.

பரிசு

அவரது பால்ய வயது கனவான ஜாவா பைக் கனவையே இளைஞர் தீர்த்து வைத்திருக்கின்றார். உஜ்வல் சித்நாத் எனும் நபரே தனது தந்தையின் ஜாவா பைக் கனவை நிறைவேற்றியவர் ஆவார். அண்மையில் தந்தைக்கு 59 வது பிறந்தநாள் விழா அவர்களது வீட்டில் நடைபெற்றிருக்கின்றது. இந்த நாளை அவரது வாழ்நாளிலேயே மறக்க முடியாத நாளாக மாற்ற வேண்டும் என எண்ணிய உஜ்வல் சித்நாத், அவருக்கு இதுவரை அளித்திராத வித்தியாசமான பரிசை வழங்க வேண்டும் என எண்ணினார்.

இதன் அடிப்படையிலேயே தனது தந்தையின் இளம் வயது கனவு எது என அறிந்து அதை தற்போது அவர் நிறைவேற்றியிருக்கின்றார். 1970 மற்றும் 80 களில் மிகவும் புகழ்பெற்ற இருசக்கர வாகனமாக விளங்கிக் கொண்டிருந்தவற்றில் ஜாவா நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களும் ஒன்று. பலருடைய கனவு வாகனமாகவும் இது இருந்தது. அப்போதைய குடும்பல் சூழல் ஒத்துழைக்காத காரணத்தினால் உஜ்வல் தந்தைன் ஜாவா பைக் கனவு நிறைவேறாத ஒன்றாக மாறியது.

பரிசு

காலமும் அவரின் இந்த கனவை மழுங்கடிக்கச் செய்துவிட்டது. இந்த நிலையிலேயே உஜ்வல் வாயிலாக நீண்ட கால கனவு அவருக்கு நிறைவேறியிருக்கின்றது. இரு சக்கர வாகன பரிசளிப்பு பற்றிய வீடியோவை இளைஞர் தனது இன்ஸ்டா பக்கத்தின் வாயிலாக வெளியிட்டுள்ளார். தற்போது இணைய வாசிகள் மத்தியில் இந்த வீடியோ வைரலாகிக் கொண்டிருக்கின்றது. வீடியோவில், ஓர் குட்டி கிஃப்ட் பாக்ஸை அவர் (உஜ்வல் தந்தை) பிரிப்பது போன்ற காட்சிகளே இடம் பெற்றிருக்கின்றன.

அதிலேயே பைக்கிற்கான சாவி மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் அவர் மட்டற்று மகிழ்ச்சியில் திகைத்ததை நம்மால் காண முடிகின்றது. இந்த ஒட்டுமொத்த நிகழ்வையும் காட்சிப்படுத்திய உஜ்வல், தனது இன்ஸ்டா பக்கத்தில் அதனைப் பதிவிட்டுள்ளார். உஜ்வல் சித்நாக் ஓர் ஜிம் கோச் ஆவார். தன்னுடைய சொந்த உழைப்பின் மூலம் ஈட்டிய பணத்திலேயே அவர் இந்த பரிசளிப்பை செய்திருக்கின்றார். இந்த நிகழ்வு "பாசத்துக்கு முன்னாடி பணம் எல்லாம் ஒரு பொருட்டே கிடையாது" என்பதற்கு உதாரணமாக அமைந்துள்ளது.

பரிசு

ஜாவா கிளாசிக் பைக் மாடலே பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இதன் விலை 1 லட்சத்து 99 ஆயிரம் ரூபாய் ஆகும். இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இந்த பைக்கில் 293 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர், 4 ஸ்ட்ரோக், லிக்யூடு கூல்ட், டிஓஎச்சி மோட்டாரே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

இத்துடன், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதே எஞ்ஜினே ஜாவா 42 பைக்கிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஜாவா நிறுவனம் அண்மையில் 42 மோட்டார்சைக்கிளில் பாபர் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. ஜாவா 42 பாபர் எனும் பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த பைக்கிற்கு 2.06 லட்சம் ரூயாப் விலை நிர்ணம் செய்யப்பட்டுள்ளது. இதுவும் வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. மோட்டாரை பொருத்த வரையில் இப்பைக்கில் 334 சிசி எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 30.64 பிஎஸ் பவரையும், 32.74 என்எம் டார்க்கையும் வெளியற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷனே இம்மோட்டாருடனும் இணைக்கப்பட்டுள்ளது. ரீ-ட்யூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷனே சிறந்த இயக்க அனுபவத்திற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிறந்த பிரேக்கிங் வசதிக்காக ரீ-கேலிபரேட்டட் பிரேக்குகள், ட்யூவல் சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. மேலும், இந்த பைக்கில் சிறப்பு வசதியாக ஃப்ளோட்டிங் ரக இருக்கை கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இருக்கையை இரு வழிகளில் அட்ஜெஸ்ட் செய்து கொள்ள முடியும். முன் மற்றும் பின் என நகர்த்திக் கொள்ளும் வசதியே வழங்கப்பட்டு உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 15, 2022, 13:21 [IST]
English summary
Son gifts dad to jawa bike
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+