பைக் பறக்குமா!.. சாதாரண டூ-வீலரை பறக்க வைக்கும் முயற்சியில் இந்திய மாணவர்கள்... சூப்பரா ரெடி பண்ணியிருக்காங்க!
இந்திய மாணவர்கள் சாதாரண பைக்கை பறக்கும் வாகனமாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர். இதுகுறித்து வெளியாகியிருக்கும் தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

தலைநகர் டெல்லியில் உள்ள நேதாஜி சுபாஷ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் சாதாரணமான இருசக்கர வாகனத்தை பறக்கும் வாகனமாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றார். இதற்காக அவர்கள் டிரையம்ப் நிறுவனத்தின் டேடோனா 675 பைக்கை பயன்படுத்தியிருக்கின்றார்.

மேலும் இந்த திட்டத்திற்கு சோகோரோ (Socorro) என அவர்கள் பெயர் வைத்திருக்கின்றார். மொத்தமாக மூன்று நண்பர்கள் சேர்ந்து வாகனத்தை உருவாக்கியிருக்கின்றனர். சர்மா ஷர்மா, தக்ஷ் லக்ரா மற்றும் சவுரவ் வைத் ஆகியோரோ தங்களின் திறமையால் வழக்கமான மோட்டார்சைக்கிளை பறக்கும் வாகனமாக மாற்றி வருகின்றனர்.

மாணவர்கள் பயன்படுத்தியிருக்கும் டிரையம்ப் டேடோனா 675 ஓர் அதிக விலைக் கொண்ட சூப்பர ரக பைக்காகும். அந்த பைக்கில் 3 சிலிண்டர், லிக்யூட் கூல்டு எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 115 எச்பி பவரையும், 74 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொண்ட மோட்டார்சைக்கிளே கூடுதல் புகழை சேர்த்துக் கொள்ளும் வகையில் பறக்கும் வாகனமாக மாறியுள்ளது. இப்பைக் இந்தியாவில் ரூ. 10 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது.

இருசக்கர வாகனத்தை பறக்கும் வாகனமாக மாற்றுவதற்காக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் முக்கியமான மாற்றமாக சேஸிஸ் இருக்கின்றது. இதனை அவர்களே பிரத்யேகமாக வடிவமைத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஏரோஸ்பேஸ் தர அலுமினியம் மற்றும் ட்ரெல்லிஸ் ஃப்ரேம் உள்ளிட்டவற்றை கொண்டே பறக்கும் வாகனம் உருவாக்கப்பட்டுள்ளது.

அலுமினியம் மிகவும் இலகுவானவை என்கிற காரணத்தினால்தான் மாணவர்கள் பறக்கும் வாகனத்தில் பயன்படுத்தியிருக்கின்றனர். கூடுதல் ஃப்ரேமால் இருசக்கர வாகனத்தின் நீளம் 12 அடியாக உயர்ந்துள்ளது. இதுபோல் பல்வேறு சிறப்பு மாற்றங்களை அது பெற்றிருக்கின்றது.

இந்தளவிற்கான நீளம் ப்ரொபல்லர்கள் பொருத்துவதற்காக கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், தரையிறங்கும் போது மற்றும் பறக்கும்போது எந்த வித ஜர்க்கையும் ஏற்படுத்தாத வண்ணம் இருக்கும் வகையில் சில சிறப்பு கருவிகளும் இதில் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற எண்ணற்ற அம்சங்கள் சேர்க்கப்பட்ட பின்னரும் பைக்கின் எடை 168 கிலோவாக இருக்கின்றது.

மாற்றங்கள் செய்யப்படாத நிலையில் பைக்கின் எடை 150 கிலோவாக இருக்கின்றது. ப்ரொபெல்லர்கள் இயங்கும் வகையில் எஞ்ஜின் உடன் பெல்ட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலமே இருசக்கர வாகனம் பறக்கும் வாகனமாக மாறியிருக்கின்றது. இரண்டு பெல்டுகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ப்ரொபெல்லர்கள் மூன்று பிளேடுகள் கொண்டவை ஆகும். அவை மறத்தாலானவை. மேலும், இரண்டும் கைகளினாலயே உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அனைத்து உருவாக்க பணிகளும் முடிவடைய ஒரு வருடங்களுக்கும் அதிகமான நாட்கள் ஆகியுள்ளன. ஆனால் இந்த பணியை அவர் நான்கு மாதங்களுக்கு உள்ளாகவே நிறைவு செய்ய திட்டமிட்டனர்.
ஆனால், பல்வேறு காரணங்களால் அது தள்ளி போய்விட்டது. மேலும், 3 லட்சம் முதல் 4 லட்சங்களுக்கு உள்ளாக இதனை உருவாக்கிவிடலாம் என்றும் அவர்கள் நினைத்திருக்கின்றனர். ஆனால், ரூ. 14 முதல் ரூ. 15 லட்சம் வரை இப்போதே அதற்கு செலவாகிவிட்டது.
இருப்பினும், இன்னும் பறக்கும் பைக் முழுமையாடத நிலையில் காட்சியளிக்கின்றது. ஆகையால், அது பறக்கும் நிலையை இன்னும் எட்டவில்லை. சில எலெக்ட்ரானிக்கல் பிரச்னைகளால் இந்த நிலையை அது அடைந்துள்ளது. இந்த பறக்கும் பைக்கை ரிமோட் வாயிலாகவும் கன்ட்ரோல் செய்ய முடியும். இதற்கு செல்போன் வாயிலாக இணைத்தல் அவசியம்.


Click it and Unblock the Notifications








