சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

சுஸுகி நிறுவனம் அதன் விலையுயர்ந்த கடானா (Suzuki Katana) ஸ்போர்ட்ஸ் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இந்தப் புதுமுக பைக்கின் விலை அண்மையில் விற்பனைக்கு அறிமுகமான சுஸுகி பிரெஸ்ஸா காரைக் காட்டிலும் மிக அதிகமாக உள்ளது. இதுபோன்று இன்னும் பல சுவாரஷ்யமான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுஸுகி (Suzuki), அண்மையில் ஜூலை முதல் வாரத்தில் தனது புதுமுக பைக் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தது. இதையடுத்து, இன்றைய (ஜூலை 4) தினத்தில் அப்புதுமுக பைக்கை அறிமுகம் செய்வதாக அந்த தகவலை உறுதிப்படுத்தியது. இந்த வாக்குறுதியையே நிறுவனம் தற்போது நிறைவேற்றியிருக்கின்றது.

சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

அதாவது, அது விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருந்த சுஸுகி கடானா (Katana) ஸ்போர்ட்ஸ் பைக்கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இது ஓர் மிக மிக விலையுயர்ந்த பைக்காகும். 13.61 லட்சம் ரூபாய் என்கிற உச்சபட்ச விலையில் இப்பைக்கை விற்பனைக்கு வழங்க திட்டமிடிருக்கின்றது சுஸுகி. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

பன்முக சிறப்பு வசதிகளைக் கொண்ட வாகனமாக கடானாவை சுஸுகி உருவாக்கியிருக்கின்றது. இதனால்தான் இப்பைக் மிக மிக அதிக விலையைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. பை-டைரக்சனல் குயிக் ஷிஃப்டர், 5 லெவல் டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் 3 த்ரோட்டில் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பிரத்யேக அம்சங்களை எல்சிடி திரை வாயிலாக நம்மால் கன்ட்ரோல் செய்ய முடியும். மேலும், இந்த த்ரோட்டில் மேப் வாயிலாக எஞ்ஜின் திறன் வெளிப்பாட்டை மிக நேர்த்தியாக மேனேஜ் செய்ய முடியும்.

சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

இந்த எல்சிடி திரை டிஎஃப்டி திரையைவிட மிக பழைமையான தொழில்நுட்பம் என்றாலும் பன்முக சிறப்பு வசதிகளை வழங்கி அதனை சிறப்பான ஒன்றாக சுஸுகி மாற்றியிருக்கின்றது. பைக்கின் இயக்கத்தை மிகவும் சுவாரஷ்யமானதாகவும், சொகுசானதாகவும் மாற்றுவதற்காக முன் பக்கத்தில் முழு அட்ஜெஸ்டபிள் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் மோனோஷோக் ப்ரீலோட் வசதியுடன் வழங்கப்பட்டிருக்கின்றது.

சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

இத்துடன், மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக பிரெம்போ காலிபர்கள் மற்றும் 310 மிமீ டிஸ்க்குகள் வழங்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து, இப்பைக்கில் சூப்பர் ஃபாஸ்ட் வேகத்திற்காக 999 cm3 மோட்டாரை சுஸுகி பயன்படுத்தியிருக்கின்றது. இது ஓர் லிக்யூடு கூல்டு, இன்லைன் 4 சிலிண்டர் மோட்டார் ஆகும்.

சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

இந்த மோட்டார் 152 எச்பி பவரை 11,000 ஆர்பிஎம்மிலும், 106 என்எம் டார்க்கை 9,250 ஆர்பிஎம்மிலும் வெளியற்றும். இந்த மோட்டாரே கே5 ஜிஎஸ்எக்ஸ்ஆர் 1000 பைக்கிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது ஓர் யூரோ 5 (பிஎஸ்6) மாசு உமிழ்வு தரம் கொண்ட மோட்டார் ஆகும். இந்த மோட்டாரில் கூடுதல் சிறப்பு வசதியாக கேம்ஷேஃப்ட்டுகள், வால்வ் ஸ்பிரிங்குகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டுள்ளன.

சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

மேலும், ஏர்பாக்ஸ் அப்டேட் செய்யப்பட்ட எக்சாஸ்ட் சிஸ்டம் இப்பைக்கில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதுமாதிரியான பிரத்யேக அம்சங்களைக் கொண்டிருப்பதனால்தான் சுஸுகி கடானாவின் விலை அண்மையில் விற்பனைக்கு அப்டேட் ய்யப்பட்ட பிரெஸ்ஸாவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவின் விலை ரூ. 7.99 லட்சம் ஆகும். இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது.

சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

ஒட்டுமொத்தமாக இரு விதமான நிற தேர்வுகளில் கடானா விற்பனைக்குக் கிடைக்கும். மெட்டாலிக் மேட் ஸ்டெல்லர் ப்ளூ மற்றும் மெட்டாலிக் மிஸ்டிக் சில்வர் ஆகிய நிற தேர்வுகளிலேயே கடானா கிடைக்கும். சுஸுகி நிறுவனம் கடைசியாக நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே இப்பைக்கை முதல் முறையாக அறிமுகப்படுத்தியது.

சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

அப்போதில் இருந்து இருசக்கர வாகன ஆர்வலர்களிடத்தில் தொடர்ச்சியாக இப்பைக்கின் வருகை குறித்த ஆவலும், கோரிக்கைகளும் நிறுவனத்திற்குக் கிடைத்திருக்கின்றது. இதன் காரணத்தினாலேயே கடானாவை தங்கள் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியிருப்பதாக சுஸுகி தெரிவித்துள்ளது.

சொன்னபடியே தரமான புதுமுக பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்திய சுஸுகி... பிரெஸ்ஸாவைவிட இதோட விலை அதிகம்!

இப்பைக்கில் நவீன கால தொழில்நுட்ப வசதியாக சுஸுகி டிராக்சன் கன்ட்ரோல் சிஸ்டம், ரைடு-பை-ஒயர் எலெக்ட்ரானிக் த்ரோட்டில் சிஸ்டம், லோவ் ஆர்பிஎம் அசிஸ்ட், சுஸுகி டிரைவ் மோட் செலக்டர் மற்றும் சுஸுகி ஈசி ஸ்டார்ட் சிஸ்டம் உள்ளிட்ட அம்சங்கள் இப்பைக்கில் வழங்கப்பட்டிருப்பது பலரை கவரும் வகையில் அமைந்துள்ளது. இதுமட்டுமில்லைங்க, கடானாவின் கவர்ச்சியான தோற்றத்திற்கும் பலர் ஃபேனாக மாறியிருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Monday, July 4, 2022, 18:06 [IST]
English summary
Suzuki launched katana sports bike in india at inr 13 61 lakh
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+